ஜயந்த எகொடவெல

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

ஜயந்த எகொடவெல அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராவார் (உரு 1). இது இலங்கை புகையிலைக் கம்பனியில்CTC பதிவு செய்யப்பட்ட புகையிலை களஞ்சிய உரிமையாளர்களது சங்கமாகும். இலங்கை புகையிலைக் கம்பனியானது பரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனம் என்பதோடு இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஏகபோக நிறுவனமும் ஆகும். இலங்கை புகையிலைக் கம்பனி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புகையிலையை தமது சிகரட் உற்பத்திக்காகப் பயன்படுத்துகின்றது..[1] (மேலதிக தகவல்களுக்கு இலங்கையில் புகையிலைத் தொழில்துறை என்ற பகுதியை பார்க்கவும்).

ஜயந்த எகொடவெலைக்கு இலங்கை அரசியல் விடயத்திலும் ஒரு வரலாறு உண்டு. அவர் 2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மத்திய மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[2][3] 2015ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கத்தின் ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மிக முக்கியமான வலதுசாரி கட்சியுமாகும்.
உரு 1: அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயந்த எகொடவெல.[4]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

2020 ம் ஆண்டில் இலங்கையில் புகையிலைச் செய்கையைத் தடைசெய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கமானது 2016ம் ஆண்டு அறிவித்தது. குறித்த அறிவிப்பை ஆட்சேபித்து ஜயந்த எகொடவெல முன்னணியாக நின்று செயற்பட்டமை பின்வருமாறு:

அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றமை

அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக ஜயந்த எகொடவெல அவர்கள், புகையிலைத் தொழிலின் நன்மைகள் குறித்து விவரிக்கப் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை தொடர்புகொண்டுள்ளார்

இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதம்

 • திகதி: 29 நவம்பர் 2015
 • பெறுநர் : மைத்ரிபால சிறிசேன, இலங்கை ஜனாதிபதி
 • பெறுநர் : மைத்ரிபால சிறிசேன, இலங்கை ஜனாதிபதி

உள்ளடக்கம் : 2020ம் ஆண்டில் புகையிலைச் செய்கையைத் தடை செய்வது தொடர்பான ஜனாதிபதி செயலக போதைப்பொருள் தடுப்புச் செயலணியின் பரிந்துரைகளை எதிர்த்து.[5]

 • திகதி: 12 செப்டம்பர் 2016
 • பெறுநர் : மைத்ரிபால சிறிசேன, இலங்கை ஜனாதிபதி
 • உள்ளடக்கம் : புகையிலைச் செய்கையைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் எதிர்த்தல். ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அவர்களைத் தாம் ஆதரித்ததாகவும், அதற்காக அவர் கடுமையாக உழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். புகையிலைச் செய்கை தடையை ஆட்சேபித்து அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தரவுகள் இலங்கை புகையிலைக் கம்பனயின்(CTC) தரவுகளுடன் ஒத்திருந்த அதே நேரம் விவசாய அமைச்சின் தரவுகளை மிஞ்சியதாகவும் காணப்பட்டது (உரு 2).[2]
உரு 2: ஜயந்த எகொடவெல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அனுப்பிய கடிதம். [5]

பிரமதருக்கு அனுப்பிவைத்த கடிதம்

 • திகதி: 09 ஓகஸ்ட் 2017
 • பெறுநர்: ரணில் விக்ரமசிங்க, பிரதமர்
 • உள்ளடக்கம்: புகையிலைச் செய்கையைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

தெரிவித்து.[6]

நிதி அமைச்சருடனான சந்திப்பு

 • அமைச்சர் ரவி கருணாநாயக்க – எகொடவெல மற்றும் அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களைச் சந்தித்து புகையிலைச் செய்கையைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். (உரு 3).[7]
உரு 3: ஜயந்த எகொடவெல மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களைச் சந்தித்தமை தொடர்பில் பத்திரிக்கையில் வெளியான செய்தி [7]
 • அமைச்சர் மங்கள சமரவீர – ஒரு வருடத்தின் பின்னர் 2018 மார்ச் 22ம் திகதி அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினர், புகையிலைச் செய்கையைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் மனு ஒன்றினை கையளித்தனர் (உரு 4). குறித்த மனு தொடர்பான செய்தி அரசுக்குச் சொந்தமான தினமின பத்திரிக்கையில் வெளியானதோடு அதனை எழுதியவர் ஜயந்த எகொடவெல என குறிப்பிடப்பட்டிருந்தது.[8]
உரு 4: நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்ட மனு தொடர்பான செய்தி தினமின பத்திரிக்கையில் வெளியாகியமை[8]

புகையிலைச் செய்கை தடை தொடர்பான தேசிய கருத்துக்களத்திற்கு எதிர்ப்பு

2018 மார்ச் 16ம் திகதியன்று புகையிலைச் செய்கையைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்குப் பிரதிபலிக்கும் வகையில் அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தியிருந்தனர். இவ் ஊடக சந்திப்பானது, 2018 பெப்ரவரி 27ம் திகதி புகையிலைத் தொழில்துறை அவதான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலைச் செய்கை தடை தொடர்பான தேசிய கருத்துக்களத்திற்குப் பின்னர் நடாத்தப்பட்டது. புகையிலைச் செய்கை தடை தொடர்பான தேசிய கருத்துக்களம் தொடர்பான பத்திரிக்கைச் செய்தியைச் சுட்டிக்காட்டிய ஜயந்த எகொடவெலவின் செய்தி பல ஊடகங்களில் வெளிவந்தது.[4][9][10][11][12][13][14][15][16]

புகையிலைச் செய்கைக்கான தடையை எதிர்த்துப் போதி பூஜை

2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புகையிலைச் செய்கையைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை சிகரட் உற்பத்திக்கான புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினர் நடாத்திய போதி பூஜையை ஜயந்த எகொடவெல வழிநடத்தினார்.[17][18][19] (மேலதிக தகவல்களுக்கு “புகையிலைச் செய்கைக்கான தடையை எதிர்த்துப் போதி பூஜை“ என்ற பகுதியைப் பார்க்கவும்)

TobaccoUnmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

 1. Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, accessed May 2017
 2. 2.0 2.1 Jayantha Egodawela. Letter from barn owners association All Ceylon Cigarette Tobacco Barn owners Association to the president TobaccoUnmasked Archive, 12 September 2016, Accessed January 2019
 3. C. Wimalasurendre. Provincial Council passes interim vote, The Island, 2 June 2002, Accessed February 2019
 4. 4.0 4.1 Sunday Leader. urged to withdraw proposed ban on tobacco cultivation, 18 March 2018, Accessed December 2018
 5. 5.0 5.1 Jayantha Egodawela. Letter from barn owners association All Ceylon Cigarette Tobacco Barn owners Association to the president, TobaccoUnmasked Archive, 29 November 2015, Accessed January 2019
 6. Jayantha Egodawela. Letter from All Ceylon Cigarette Tobacco Barn owners Association to the Prime Minister, TobaccoUnmasked Archive, 9 August 2017, Accessed January 2019
 7. 7.0 7.1 Daily FT. All Ceylon Cigarette Tobacco Barn Owners take plight to Ravi K 31 March 2017, Accessed December 2018
 8. 8.0 8.1 Jayantha Egoadawela. සිගරට් දුම් උදුන් හිමි සංගමයෙන් මුදල් ඇමැතිට අභියාචනයක්, Dinamina, 22 March 2018
 9. Daily FT [1] 20March 2018, Accessed December 2018
 10. C. Wettasingha. Looming ban on tobacco cultivation fast-tracked, accuse farmers, Daily Mirror, 19 March 2018, Accessed December 2018
 11. S. Dias. Govt. on drive to snuff out tobacco, cigarette puff Sunday Times, 18 March 2018, Accessed December 2018
 12. Ada Derana. Ceylon Cigarette Tobacco Barn Owner’s Association implores Government to withdraw proposed immediate ban on tobacco cultivation 19 March 2018,Accessed December 2018
 13. Daily News. Livelihood of over 300,000 tobacco farmer community in jeopardy 19 March 2018, Accessed January 2019
 14. Tobacco Reporter. Cultivation ban opposed 19 March 2018], Accessed January 2019
 15. LankaWeb. Cultivation ban opposed 19 March 2018, Accessed January 2019
 16. The business Times. All Ceylon Cigarette Tobacco Barn Owner’s Association implores Government to withdraw proposed immediate ban on tobacco cultivation, 20 March 2018, Accessed January 2019
 17. Ceylon Today. Tobacco farmers seek divine assistance to avert imminent tobacco cultivation ban, 20 October 2017, accessed March 2018
 18. Sri Lanka Mirror. Tobacco Farmers seek Religious Blessings, 18 October 2018, accessed March 2018
 19. Interviewslk. දුම්කොළ ගොවීන්ට බෝධි පුජා පවත්වන්න සිද්ධ වුනේඇයි?, You Tube, 19 October 2017, Accessed March 2018