மங்கள சமரவீர

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

Contents

பின்னணி

மங்கள சமரவீர பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு 2010ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார். 2019 ஓகஸ்ட் மாத நிலவரப்படி இலங்கை அரசாங்கத்தில் நிதி அமைச்சர் பதவியில் உள்ளார். அவர் 1988ம் ஆண்டில் இலங்கை சுகந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தி அரசியலில் நுழைந்தார்.[1][2]

Image 1: மங்கள சமரவீர[3]

அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

 • நிதி அமைச்சர் – 2019 பெப்ரவரி தொடக்கம் இன்றுவரை. [4]
 • நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் – 2018 முதல் 2019 பெப்ரவரி வரை.[4]
 • நிதி மற்றும் ஊடக அமைச்சர் – மே 2017 தொடக்கம் நவம்பர் 2018 வரை.[1]
 • வெளியுறவு அமைச்சர் – ஜனவரி 2015 தொடக்கம் மே 2017 மற்றும் நவம்பர் 2005 தொடக்கம் ஜனவரி 2007 வரை. - January 2007[5]
 • துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் – ஏப்ரல் 2004 தொடக்கம் நவம்பர் 2005 வரை.[6]
 • தகவல் மற்றும் ஊடக அமைச்சர் – ஏபரல் 2004 தொடக்கம் ஜூன் 2005 வரை.[7]
 • கல்விப் பிரதி அமைச்சர் - ஏபரல் 2004 தொடக்கம் நவம்பர் 2005[7]
 • பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி கொறடா – 2002-2004[7]
 • நிதிப் பிரதி அமைச்சர் – 2001 – 2002[7]
 • நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் பொதுப் பயன்பாட்டு அமைச்சர் – 2000 – 2001[7]
 • அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சர் – 1994 – 2000[7]

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

சீனாவிலிருந்து சிகரட் இறக்குமதி செய்வதற்கான திட்டம்

சீன சிகரட்டுகளை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக 2019 மே மாதம் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார். சிகரட்டிலிருந்து வரிவருவாயை அதிகரிக்கவும், நாட்டில் சீனத் தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இதுபோன்ற நடவடிக்கை தேவை என்று மேலும் அவர் கூறினார்.[8]

முன்மொழிவிற்கான பரந்த விமர்சனம்

சுகாதார அமைச்சர் இந்த திட்டத்தை பகிரங்கமாக விமர்சித்தார், அதை செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.[9] [10][11][12]புகையிலைக் கட்டுப்பாட்டு ஆதரவாளர்கள் மற்றும் சுகாதார துறையினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இது இலங்கையில் புகையிலைக் கட்டுப்பாட்டில் எதிர்மறையான தாக்கங்களை எவ்வாறு ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.[13][14][12] இலங்கையில் புகையிலை மற்றும் மதுசாரம் கட்டுப்பாடு தொடர்பான அரச கட்டமைப்பான புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையின்(NATA) நிர்வாகக் குழுவானது, குறித்த சிகரட் இறக்குமதித் திட்டம் நடைமுறைப்படுத்தினால் நாம் ராஜினாமா செய்வதாக அறிவித்தது.[12][15] வலுவான எதிர்ப்பின் காரணத்தினால் அமைச்சர் சமரவீர இத்திட்டத்தை வாபஸ் வாங்கினார். இலங்கையில் சீன சிகரட்டுகள் கிடைக்காதது குறித்து சீன தூதுவர் கேட்டமைக்கு அமைவாக இத் திட்டம் வகுக்கப்பட்டதாகக் கூறி, அதன் விளைவு குறித்து அவர் பகிரங்கமாக புகார் கூறினார்.[16]

சீனாவில் புகையிலை தொழில்துறையானது அரசுக்கு சொந்தமான ஏகபோக நிறுவனம் என்பதோடு அது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியுடன் சர்வதேச வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.[17][18][19]

சிகரட் இறக்குமதி செய்ய நிறுவனங்களை பதிவு செய்வதற்கான திட்டம்

2017ம் ஆண்டு பாதீட்டு உரையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சிகரட் மற்றும் சுருட்டு இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க முன்மொழிந்தார். இத்திட்டத்தினால் இலங்கையில் புதிய சிகரட் சந்தை உருவாகும் என பொதுச் சுகாதார துறையினர் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு பங்குதாரர்களால் விமர்சிக்கப்பட்டது, மேலும் இது கிடைக்கக்கூடிய தன்மை, மலிவு மற்றும் அணுகலை அதிகரிக்கும்.[20]

மேலதிக தகவல்களுக்கு 2018ம் ஆண்டு பாதீட்டு மீதான விவாதம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

இலங்கையில் தனிச் சிகரட் விற்பனைக்கு முன்மொழியப்பட்ட தடையை எதிர்த்தமை

தனிச் சிகரட் விற்பனையைத் தடை செய்யும் திட்டத்தை சுகாதார அமைச்சர் 2016ம் ஆண்டு அறிவித்தார்.[21][22][23] இது தொடர்பான முன்மொழிவு 2018 செப்டெம்பரில் அமைச்சரவை ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்ட போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர அதனை எதிர்த்தார், இத் தடை வரி வருவாயைக் குறைக்கும் எனவும், அதே நேரத்தில் பீடி நுகர்வு அதிகரிக்கும் எனவும் வாதிட்டார். (மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து இலங்கையில் தனி சிகரட் விற்பனை தடைக்கான முன்மொழிவு என்ற பக்கத்தைப் பார்க்கவும்).[24][25]


புகையிலை சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடனான சந்திப்பு

புகையிலை விற்பனை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகையிலை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தது. புகையிலை சில்லறை விற்பனையாளர்கள் சங்கமானது “ சட்டரீதியான புகைப்பொருட்களின் விலையை நியாயமான அளவில் பராமரிக்கவும், தனி சிகரட் மீதான தடையை அமுல்படுத்த வேண்டாம்” எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக ஊடங்கள் செய்தி வெளியிட்டன.[26][27][28] விபரங்களுக்கு, 2017ம் ஆண்டில் புகையிலை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் புகையிலை விதிமுறைகளை எதிர்க்கின்றது என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

புகையிலைத் தொழில்துறையினர், அமைச்ச மங்கள சமரவீரவை சந்தித்து ஆதரவு கோரிய வரலாறும் உண்டு. 2018 மார்ச் 22ம் திகதியன்று அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர் சங்கம் சமரவீரவை சந்தித்து புகையிலைத் தடை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து முறையீட்டினை வழங்கினர்.[29] மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து "அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர் சங்கம்" என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

பாராளுமன்ற வளாகத்திற்குள் புகைபிடித்தல்

இலங்கையில் தேசிய செய்தித்தாள்களில் ஒன்றான சண்டே டைம்ஸ், 2007ல் அமைச்சர் சமரவீர சிகரட் புகைத்துக்கொண்டு பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிய புகைப்படத்தை வெளியிட்டது.[30]

உரு 1: பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் மங்கள சமரவீர புகைப்பிடிப்பதை தேசிய செய்தித்தாளான சண்டே டைம்ஸின் புகைப்படத்துடன் வெளியிட்டது[30]

மதுசாரம் தொடர்பான செயற்பாடுகள்

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் மதுசாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சுகாதார வல்லுணர்கள் மற்றும் பொது மக்கள் விமர்சித்தனர்::

பியர் தொழில்துறையை ஆதரித்தல்

பாராளுமன்றத்தில் 2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்த மங்கள சமரவீர, இனிப்பான குளிர்பானங்களை விட பியர் ஆரோக்கியமானது எனக் கூறியமை பரந்த விமர்சனங்களை உருவாக்கியது[31]

மேலும் பியர் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க அவர் பரிந்துரைத்தார், இதனால் கடினமான மதுசார நுகர்வு குறையும் என்றும் வாதிட்டார். செறிவு மற்றும் மதுசார வகைகளின் அடிப்படையில் மதுசாரத்திற்கு வரி விதிக்க அவர் முன்மொழிந்தார், இது பியர் விலையில் குறிப்பிடத்தக்க (சுமார் 40ம%) விலை குறைப்பிற்கு வழி வகுத்தது.[32][33]

மதுசார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவதற்கான திட்டங்கள்

பூரணை தினங்களிலும், கிரிஸ்மஸ் தினங்களிலும் மது விற்பனை செய்வதற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்த 2017 ம் ஆண்டு பாராளுமன் அமர்வின் போது அமைச்சர் சமரவீர முன்மொழிந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.[34] மேலும் மதுசாரம் கொள்வனவு செய்யும் பெண்கள் மற்றும் மதுசார சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரியும் பெண்கள் மீதான தடையை ரத்து செய்யவும் அவர் முன்மொழிந்தார்.[35] நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் அமைச்சர் மங்கள சமரவீர மதுசாரம் குடிப்பதை ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டினர், மேலும் இது தொடர்பில் தலையிட ஜனாதிபதியை வலியுறுத்தினர்.[36]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

 1. 1.0 1.1 B. Dwarakanth. PROFILE-Sri Lanka's Finance Minister Mangala Samaraweera, Reuters, 21 June 2017, Accessed December 2018.
 2. manthri.lk. Mangala Samaraweera, undated, Accessed December 2018
 3. Wikipedia. Mangala Samaraweera, 14 July 2019, Accessed July 2019
 4. 4.0 4.1 Ministry of Finance Sri Lanka. Mr. Mangala Samaraweera who was appointed as the Minister of Finance and Mass Media assumed duties this morning at the Ministry of Finance, 20 th December 2016, Accessed December 2018
 5. Minister of Foreign Affairs. Minister of Foreign Affairs, undated, Accessed December 2018
 6. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka,4 October 2004, Accessed December 2018
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Ministry of Foreign Affairs- Sri Lanka. Mr. Mangala Samaraweera, 2005 – 2007 January, undated, Accessed December 2018
 8. P. Silva. Liberalization is fine, but is this right time for cigarette imports?, 12 June 2019, Accessed July 2019
 9. Daily FT. Health Minister says will not allow cigarette import. 18 June 2019
 10. P. De Silva. Liberalisation is fine, but is this right time for cigarette imports. Daily Mirror. 12 June 2019
 11. DailyFT. ADIC fumes against Mangala’s proposal to license import foreign cigarettes to Sri Lanka. 13 June 2019
 12. 12.0 12.1 12.2 D. Jayamanne. NADF urges Government Don’t import Foreign Tobacco. Ceylon Today. 19 June 2019
 13. P. De Silva. Liberalisation is fine, but is this right time for cigarette imports. Daily Mirror. 12 June 2019
 14. DailyFT. ADIC fumes against Mangala’s proposal to license import foreign cigarettes to Sri Lanka. 13 June 2019
 15. Colombo Gazette. NATA board threatens to resign if Chinese cigarettes imported, 30 June 2019, Accessed July 2019.
 16. Daily Mirror. Mangala withdraws plans to allow Chinese cigarette imports, 3 July 2019
 17. TobaccoTactics. British American Tobacco, TobaccoTactics.org, 03 June 2019, Accessed July 2019
 18. British American Tobacco. CTBAT International Limited has officially commenced business operations, News Release, 30 August 2013, Accessed July 2019
 19. TobaccoReporter. CNTC and BAT joint venture in business, 02 September 2013, Accessed July 2019
 20. Parliament of Sri Lanka. Budget Speech 2018, 9th November 2017, Accessed January 2018
 21. The Government official news portal. Laws to ban the sale of a single cigarette, 08 March 2017, Accessed October 2018
 22. S. A. Jayasekara. Sale of loose fags will be banned: Rajitha, Daily Mirror, 09 March 2017, Accessed October 2018
 23. Daily FT. Govt. to introduce standardised packaging for all tobacco products, 12 April 2018, Accessed October 2018
 24. Daily Mirror. No ban on single cigarette ban, 17 September 2018, Accessed October 2018
 25. K. Jayawardena. GMOA wants law to prevent single stick cigarette sales, Daily Mirror, 14 September 2018, Accessed October 2018
 26. Daily Mirror. Tobacco retailers meet Fin Min over industry concerns, 30 May 2017, Accessed December 2018
 27. Daily news. Tobacco retailers urge FM not to hike prices, 30 May 2017, Accessed December 2018
 28. Daily FT. PM appoints Committee to review draft changes to Tobacco Policy, 30 May 2017, Accessed December 2018
 29. Jayantha godawela. සිගරට් දුම් උදුන් හිමි සංගමයෙන් මුදල් ඇමතිට අභියාචනයක් ,22 March 2018, Accessed December 2018
 30. 30.0 30.1 Sunday Times. News Wire, 18 February 2007, Accessed July 2019
 31. Daily mirror. The ‘sweet’ and ‘strong’ side of budget 2018 – Editorial, 14 November 2017, Accessed December 2018
 32. Daily Mirror. No presidential cheers for beer – EDITORIAL, 6 December 2017, Accessed December 2018
 33. ADIC Credibility of the research justifying reducing the beer tax in budget 2018, undated, Accessed April 2019
 34. Daily FT. Mangala cheers rethink of alcohol policy, 23 June 2017, Accessed December 2018
 35. NEWS AGENCIES. Sri Lanka lifts ban on women buying alcohol Bangkok post, 13 January 2018, Accessed December 2018
 36. The Guardian Sri Lanka reimposes ban on women buying alcohol – days after it was lifted, 15 January 2018, Accessed December 2018