புகையிலைப் பயிர்ச் செய்கை தடைக்கு எதிராக போதி பூஜை

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

போதி பூஜை என்பது அரச மரத்தின் ஆசியைப் பெற பௌத்த மக்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கு. அரச மரம் என்பது பௌத்தர்களால் புனிதமானதாக கருதப்படுகின்றது. காரணம் அரச மரத்தின் கீழ் புத்தர் ஞானம் பெற்றார் என்பதனால்.

2020ம் ஆண்டில் இலங்கையில் புகையிலைச் செய்கையை தடை செய்யும் திட்டத்தை 2016ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்தது.[1][2][3][4][5]

உரு 1: தேசிய செய்தித்தாள் ஒன்றிற்கு சொந்தமான வலைதளத்தில் புகைப்படம் மற்றும் காணொளியுடன் செய்தியாக வெளிவந்தது.[6]

புகையிலைக் கம்பனி போதி பூஜையினை ஏற்பாடு செய்திருந்தது

அகில இலங்கை புகையிலை களஞ்சிய உரிமையாளர் சங்கத்தினால் 2017 ஒக்டோபர் மாதம், தெஹியத்தகண்டிய கலேகமவிலுள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் குறித்த போதி பூஜையினை ஏற்பாடு செய்திருந்தது. அகில இலங்கை புகையிலை களஞ்சிய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயந்த எகொடவெலவின் கருத்துப்படி அரசாங்கம் அறிவித்த புகையிலைச் செய்கை தடைக்கு பிரதிபலிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இப் பூஜைக்கு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய, அமெரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனம் என்பதோடு இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனமும் ஆகும். இந் நிகழ்விற்கு ஊடகங்கள் அழைக்கப்பட்டன. இந் நிகழ்வு தொடர்பான செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேர்மறையாக காண்பிக்கப்பட்டன.[7][6][8]

இலங்கை புகையிலைக் கம்பனியில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ள புகையிலைக் களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது, கள மட்டத்தில், புகையிலைக் கம்பனியின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவாக்கப்பட்ட கையாளாக செயற்படுகின்றது. மேலதிக விபரங்களை அறிய, அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஜயந்த எகொடவெல போன்ற பக்கங்களை பார்வையிடவும்.

மேலும் விபரங்களுக்கு இலங்கை புகையிலைச் செய்கையை நிரந்தரமாக்குவதற்கு புகையிலைக் கம்பனி எடுத்த முயற்சி தொடர்பான தகவல் அடங்கிய ‘இலங்கையில் புகையிலைச் செய்கையை தக்கவைக்க புகையிலைக் கம்பனி எடுத்த முயற்சிகள்’ என்ற பக்கத்தை பார்வையிடவும்.

TobaccoUnmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

  1. World Health Organization, Sri Lanka -NCD joint programming mission [1], 22 August 2017, accessed March 2018
  2. Daily News, Tobacco cultivation to be banned by 2020 [2], 22 August 2017, accessed March 2018
  3. Independence Television Network News, 2020 දී දුම්කොළ තහනම එලෙසම ,[3],31 May 2016, accessed March 2018
  4. President Media Division. ලෝක දුම්වැටි විරෝධි දිනය සැමරීමේ උත්සවයේදි ජනාධිපතිතුමා විසින් සිදුකළ කතාව, 31 May 2016, accessed March 2018
  5. Hiru News.දුම්කොළ වගාව 2020 න් පසු තහනම් කිරීමට පියවර, 07 June 2017, accessed March 2018
  6. 6.0 6.1 Sri Lanka Mirror. Tobacco Farmers seek Religious Blessings, 18 October 2018, accessed March 2018
  7. Ceylon Today. Tobacco farmers seek divine assistance to avert imminent tobacco cultivation ban, 20 October 2017, accessed March 2018
  8. Interviewslk. දුම්කොළ ගොවීන්ට බෝධි පුජා පවත්වන්න සිද්ධ වුනේඇයි?, You Tube, 19 October 2017, Accessed March 2018