சஜித் பிரேமதாச

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

உரு: சஜித் பிரேமதாச, மூலம்: வீட்டு வசதி, கட்டுமானம் மற்றும் கலாசார விவகார அமைச்சர்.[1]

சஜித் பிரேமதாச, ரணசிங்ஹ பிரேமதாச மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு 1967ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி மகனாக பிறந்தார். ரணசிங்ஹ பிரேமதாச 1977 முதல் பிரதமராக செயற்பட்டதன் பின்னர் 1989ம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பதவியேற்றார். சஜித் பிரேமதாசவிற்கு ஒரே ஒரு உடன் பிறப்பு உள்ளார், அது அவரின் தங்கை துலஞ்சலி ஆவார்.[2]

சஜித் தனது முறையான கல்வியை சென் தோமஸ், கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மில் ஹில் பாடசாலை ஆகியவற்றில் கற்றார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் லண்டன் ஸ்கூல் ஒப் எகனொமிக்ஸ் மற்றும் அரசியல் அறிவியல் பட்டதாரியாவார்.[3][2] அவர் கூறிய கல்வித் தகைமைகளின் நம்பகத்தன்மை 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஊடகங்களால் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.[4][5]

1994ம் ஆண்டு ஹம்பாந்தோட்;டையில் அரசியலில் இணைந்த சஜித், இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்தார். 2019ம் ஆண்டு நிலவரப்படி ஐ.தே.க சார்பில் 2000ம் ஆண்டு முதல், அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[3]அவர் 2011ம் ஆண்டு ஐ.தே.க யின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டார்.[6]

2019 செப்டம்பர் 26ம் திகதியன்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசியல் கட்சிகளின் கூட்டணியான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டார்.[7]இவரே தற்போது இலங்கை பாராளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவராவார்.[8]

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

  • ஐ.தே.க யின் ஹம்பந்தோட்ட மாவட்ட அமைப்பாளர் – 1994ம் ஆண்டு முதல்[9]
  • பாராளுமன்ற உறுப்பினர் – 2000ம் ஆண்டு முதல்[9]
  • பிரதி சுகாதார அமைச்சர் – 2001 – 2004[9]
  • ஐ.தே.க யின் பிரதி தலைவர் – 2011 – 2013 மற்றும் 2014 செப்டம்பர் முதல் 2019 வரை[9]
  • வீட்டு வசதி, கட்டுமானம் மற்றும் கலாசார விவகார அமைச்சரவை. அமைச்சர் – 2015 ஜனவரி – 2019 நவம்பர்[9]
  • ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் – 2019[10]
  • இலங்கை பாராளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவர் – 2019 டிசம்பர் முதல் தற்போது வரை[11]

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

பீடி உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தின் போது வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றின் போது, கேகாலை மாவட்டத்திலுள்ள பீடி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு மேம்படுத்துவதாக உறுதியளித்தார். உள்நாட்டில் உற்பத்தியாக்கப்படும் சிகரட் போன்றதான பீடி, கேகாலை மாவட்டத்தில் பாரியளவில் சுயத்தொழிலாக இடம்பெறுகின்றது.[12] இது ஒரு பரந்த வலையமைப்பிலான தரகர்களால் இயக்கப்படும் தொழிலாகும். வரக்காபொலவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க பிரேமதாச ஒரு முன்னணி பீடி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராவார். மேலதிக தகவல்களுக்கு சம்பிக்க பிரேமதாச என்ற பக்கத்தை பார்வையிடவும்.

உரு 2: ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பீடி தொழில் தொடர்பில் கதைக்கிறார், மூலம்: அத தெரன.[12]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

  1. Ministry of Housing ,Construction & Culture Affairs, 2019, Accessed November 2019
  2. 2.0 2.1 Daily Ft. Book on Sajith Premadasa out next month, 12 January 2019, accessed November 2019
  3. 3.0 3.1 OFFICE OF SAJITH PREMADASA. About- Sajith Premadasa, 2019, accessed November 2019
  4. Dr.M.D.P.Dissanayake. [1], 20 July 2019, accessed November 2019
  5. Ranga Jayasuriya. [2], 30 July 2019, accessed November 2019
  6. NDTV. [3], 05 December 2019, accessed December 2019
  7. Krishan Francis. Sri Lanka’s governing party picks Premadasa as candidate, 26 September, 2019, accessed November 2019
  8. News 1st. [4], 05 December 2019, accessed December 2019
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 LinkedIn. [5], 2019, Accessed December 2019
  10. Election Commission of Sri Lanka. [6], 2019, Accessed December 2019
  11. The Hindu. [7], 05 December 2019, Accessed December 2019
  12. 12.0 12.1 Derana TV. Ada Derana Main News at 6.55, 03 November 2019, accessed November 2019