புகையிலை விவசாயிகளை சோளப்பயிர் செய்கையில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இலங்கையின் மலைப்பகுதிகளில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் புகையிலைச் செய்கையானது மண் அரிப்பிற்கு வழிவகுத்துள்ளது. விளைச்சல் குறைவடைந்ததன் காரணத்தினால் விவசாயிகள் ஒரு தசாப்ததிற்கும் மேலாக புகையிலைச் செய்கையை கைவிட்டதே இவ் விளைவிற்கு முக்கிய காரணியாக அமைந்தது.[1] உணவுப் பயிர், முதலீட்டிற்கு ஏற்ற வருவாய் மற்றும் சூழலியல் பாதிப்புகள் இல்லாததன் காரணத்தினால் விஞ்ஞானிகளும், உலகநாடுகளும் புகையிலைச் செய்கைக்குப் பதிலாக சோளப்பயிர்ச் செய்கையை பரிந்துரைக்கின்றனர்.[1][2][3]

2007ம் ஆண்டு நாட்டுக்கு சோள இறக்குமதியை குறைப்பதற்காக உள்நாட்டு சோளப்பயிர் செய்கையில் ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கம் விவசாயிகளை, பிரதானமாக புகையிலை உற்பத்தியாளர்களிடம் கோரியது.[4][5]

தொழில்துறையின் பிரதிபலிப்பு

புகையிலைப் பயிர் செய்த 150 ஏக்கர் பிரதேசத்தில் சோளப் பயிர் செய்கைக்கான ஏற்பாடுகளை செய்து வருதாக இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) முகாமையாளர்களில் இருவரான ருக்ஷான் குணதிலக ஊடக செய்தி ஒன்றின் வாயிலாக கூறியிருந்தார். இலங்கை புகையிலைக் கம்பனியின் புகையிலை செயற்திட்ட ஊழியர்கள், விசாய திணைக்களத்தினால் சோளப் பயிர் செய்கையாளர்களுக்கு வழங்கும் விவசாய பயிற்சிகளை வழங்குவதோடு கூட்டாக செயற்படவுள்ளதாக திட்டத்தை விபரித்தார். [4]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

  1. 1.0 1.1 C Egodawatta, P Stamp, R Sangakkara. Uncovering the Footprints of Erosion by On-Farm Maize Cultivation in a Hilly Tropical Landscape, Agriculture 2013(3), 556-566; doi:10.3390/agriculture3030556, accessed May 2017
  2. M Peiris. Farmers to opt to cultivate other crops instead of tobacco, 05 July 2016, accessed May 2017
  3. The Daily Star. Maize replacing tobacco, 06 January 2017, accessed May 2017
  4. 4.0 4.1 Nation.lk. CTC farmers to plant maize with tobacco, 02 September 2007, accessed May 2017
  5. Financial Times. Govt. asks CTC farmers to plant maize with tobacco, 02 September 2007, accessed May 2017