ஸ்டேன்லி வனிகசேகர

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

இலங்கை புகையிலை கம்பனியின் முதல் மற்றும் ஒரே நிறைவேற்று அதிகாரமுள்ள தலைவராக ஸ்டேன்லி வனிகசேகர இருந்தார். ஊஊவு அதிகாரிகளின் கூற்றுப்படி, அவராது அலுவலகத்தினால் தான் இலங்கையில் முதன் முதலில் சமூக முதலீட்டு திட்டம் தொடங்கப்பட்டது.[1][2]

கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூhயில் கல்விகற்ற இவர், இங்கிலாந்தில் பட்டய கணக்காளராக பட்டம் பெற்றார். பிரித்தானியாவில் தனது கட்டாய சேவையை முடித்த பின்னர், இலங்கை புகையிலைக் கம்பனியில் ஒரு கணக்காளராக நியமனம்பெற்றார் மற்றும் அத் தொழிலை பெற்றதன் காரணத்தால் அவரும் அவரது குடும்பமும் இலங்கைக்கு திரும்ப நிதியுதவி; பெற்றனர்.[3]

புகையிலைத் தொழில்துறையில் தொழிலபுரிந்த வரலாறு

வனிகசேகர, 1970ம் ஆண்டு தலைவராக பதவியுயர்வு பெறுவதற்கு முன்னர் இலங்கை புகையிலைக் கம்பனியில்(CTC) நிதி இயக்குனராக செயல்பட்டார். 1977ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை இலங்கை புகையிலைக் கம்பனியில்(CTC) தலைவராக பணியாற்றினார்.[3]

ஞாயிறு பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வெளிவந்த செய்திக்கு அமைய, அவர் தலைவராக இருந்த முதல் இரண்டு ஆண்டுகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடித்ததாக கூறினார். அவரது கூற்றுக்கு அமைய தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை தொழிலில் இருந்து நீக்கப்போவதாக CTC அறிவித்தது இதனால் அவர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு CTC வழங்கிய விதிமுறைகளின்படி வேலைக்குத் திரும்பினர்.[3]

வனிகசேகரவின் காலத்தில் தான் சிரிமாவோ அரசாங்கம் CTC யை அரசுடமையாக்க முயற்சித்து அம் முயற்சி தோல்வியடைந்தது.[3] ஊடக அறிக்கையின் படி, அவர் பிரதமர் சிரிமாவோ மற்றும் முக்கிய அரசியல்வாதிகளான என். எம். பெரேரா மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ ஆகியோருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தமையினாலேயே அம் முயற்சியை தடுக்கக்கூடிதாக இருந்துள்ளது.[2]

அதே நேர்காணலின் படி, அவரது தலைமையில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் தொடங்கப்பட்டன:[3]

  • மஹியங்கன வீடமைப்பு திட்டம்
  • கரும்பு திட்டம்
  • சோயா பீன் உற்பத்தி திட்டம்

அதே காலகட்டத்தில் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்

2017 வரை எதுவும் பதிவாகவில்லை.

புகையிலைத் தொழில்துறைக்கு முன்னர் அல்லது பின்னர் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்

ஜே. ஆர் ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில், தேசிய செய்திதாள்களின் வெளியீட்டாளரான சிலோன் லிமிடட் (லேக் ஹவுஸ்) இன் அசோசியேடட் செய்திதாளிகளின் நிதி பணிப்பாளராக பணியாற்றினார்.[2]

பதவிகள்ஃஉறுப்பினராக வேறு நிறுவனங்களில் (அரச சார்பற்ற)

வனிகசேகர, வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் வகித்த பதவிகள் பின்வருமாறு:

TobaccoUnmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

  1. DailyFT. CTC: Down memory lane, 11 August 2012, accessed May 2017
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Sunday Island Online. Stanley Wanigasekera new chairman of Central Finance, 27 August 2006, accessed May 2017
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 R Ladduwahetty. ‘Sirimavo Govt, tried utmost to nationalise Ceylon Tobacco’, 20 December 2012, accessed May 2017