ருக்ஷான் குணதிலக

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

உரு 1:ருக்ஷன் குணதிலக (வலது பக்கம் ) CTC தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குழுவுடன் கலேவெயில் உள்ள ஒரு புகையிலை பண்ணைக்கு வருகை தருகிறார்[1]

ருக்ஷான் குணதிலக ஜூலை 2016 முதல் இலங்கை புகையிலை கம்பனியின்(CTC) விநியோக சங்கிலி பணிப்பாளராக உள்ளார்.[2][3] கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார்.[2][4]

புகையிலைத் தொழில்துறையில் கடமையாற்றிய வரலாறு

குணதிலக்கவிற்கு “பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT) நெட்வொர்க்கில் இயங்கும் பல சந்தைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது” என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.[4] அவர் பதவிவகித்த நாடுகளும் பதவிகளும் பின்வருமாறு:

  • இலங்கை - இலை செயல்பாட்டுத் தலைவர். இந்த காலகட்டத்தில், புகையிலை பண்ணைகளில் மக்காச்சோளத்தை துணை சாகுபடியாக அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கத்துடன் அவர் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.[4][5]
  • வியட்நாம் - இலை செயல்பாட்டு முகாமையாளர்[4]
  • வியட்நாம் - இலை செயல்பாட்டு முகாமையாளர்[4]
  • மலேசியா - ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய வேளாண் மேலாளர்[4]

அதே காலகட்டத்தில் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

குணதிலக அரசு பல்கலைக்கழகங்களில் விவசாய பட்டதாரிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை கற்பிப்பதில் ஈடுபட்டிருந்தார்.

  • சபரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி ஆய்வுகள் வாரிய உறுப்பினர்.a[6]
  • சபரகமுவ பல்கலைக்கழக பல்கலைக்கழக பயன்பாட்டு அறிவியல் வாரியத்தின் உறுப்பினர் (2004 - 2008) சபரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி ஆய்வுகள் வாரிய உறுப்பினர்[2][4]
  • பெரதெனிய பல்கலைக்கழகம் விரிவுரையாளர் (வருகை)[4]
  • வெளித் தேர்வாளர், முதுகலை வேளாண் நிறுவனம்[4]

புகையிலைத் தொழிலுக்கு முன் அல்லது அதற்குப் பின் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்

குணதிலக புகையிலை தொழில்துறையில் கடமையாற்றுவதட்க்கு முன்னர் (1995-1996) ஹிங்குரான சீனி உட்பத்தி தொழில்சாலையில் மேலதிக பொது முகாமையாளராக பணியாற்றினார்.[2]

பிற (அரசு சாரா) நிறுவனங்களில் வகித்த பதவிகள்

CTC யில் வேலை செய்வதற்கு முன்னர் குணதிலக பின்வரும் நிறுவனங்களில் பணியாற்றினார்:[2]

  • நெஸ்லே A.S - தயாரிப்பு நிர்வாகி (1993-1994)
  • தலவாக்கலை தேயிலை தோட்ட - உதவி முகாமையாளர் (1996-1997)

TobaccoUnmasked வளங்கள்

பிற தொடர்புடைய TobaccoUnmasked உள்ளீடுகள்:

Relevant Links


குறிப்புகள்

  1. Daily FT. The Tobacco Farmers of Glewela, 11 October 2016, accessed July 2017
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 R Gunatilaka. LinkedIn Profile, 2017, accessed March 2017
  3. Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, accessed March 2017
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 Mirror Business. CTC appoints Rukshan Gunatilaka as Supply Chain Director, 25 August 2016, accessed March 2017
  5. The Island Online. Govt. goes to Tobacco for maize, 30 August 2007, accessed March 2017
  6. University of Sabaragamuwa Website. Faculty of Graduate Studies, 2017, accessed March 2017