பைஸ் முஸ்தபா

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னனி

உரு 1: இலங்கையின் முஸ்லீம் சமூகத்திற்கு முதல் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் பைஸ் முஸ்தபா. ஆரம்ப விழாவிற்கு வருகை தந்தோர் முன்னிலையில் பிரதம உரை நிகழ்த்தினார். “ வலது பக்கத்தில் இருந்து: எம் .இம்தியாஸ் (தலைவர், செரன்டிப் டீ.வி மூலம் இயக்கப்படும் தேசிய செய்தி நிறுவனம்), கரு ஜயசூரிய (பாராளுமன்ற உறுப்பினர்), பின் சலேஹ அல் தாவூத் (உலக முஸ்லீம் லீக்கின் பிரதிநிதி), ஏ.ஜே.எம். முஸம்மில் (கொழும்பு மேயர்), பைஸ் முஸ்தபா (சிரேஸ்ட் ஜனாதிபதி சட்டத்தரணி), ரிஷாட் பதியுர்தீன் (கைதொழில் மற்றும் வாத்தக அமைச்சர்), மற்றும் பசில் ராஜபக்ஷ (பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்), ஆகியோர் 2014 டிசம்பர் 16ம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் செரண்டிப் டீவி செய்திதாள் மற்றும் வானொலி அலைவரிசைகளை அறிமுகப்படுத்தியப்போது.”[1]

[2][3] .[4] பைஸ் முஸ்தபா, ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்படுகிறார். இது பரித்தானிய குயின்ஸ் கவுன்சிலுடன் இணைந்து இலங்கையிலுள்ள வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் உயர் பதவியாகும். ஜனாதிபதி ஆலோசகர் பதவியானது, இலங்கை ஜனாதிபதியால் தொழில்சார் புகழ் மற்றும் நடத்தை அடிப்படையில் வழங்கப்படுவதாகும். முஸ்தபா கண்டியிலுள்ள வழக்கறிஞரான எஸ்.எம். முஸ்தபாவின் மகனாவார். முஸ்தபா குடும்பமானது “நான்கு தலைமுறை வழக்கறிஞர்களைக் கொண்ட குடும்பம்” என்று குறிப்பிடப்படுகின்றது முஸ்தபாவின் மகன் பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின் ஆலோசகர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்து பெற்ற அமைச்சர் ஆவார், இவர் 2015 முதல் இலங்கை ஜனாதிபதியின் சட்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] . [5] இவரது மகள் பைசா முஸ்தபா 2013ம் ஆண்டு நிறுவன தகராறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். முஸ்தபா குடும்பம் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஒரு முக்கிய குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (உரு 1,2).[2][3][1][6][7][5]

உரு 2: 2013ம் ஆண்டு ஹெஜாஸ் சர்வதேச பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு ஒரு மாணவணுக்கு பரிசு வழங்கிய போது. [7]

முஸ்தபா 2000 முதல் 2003 வரை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும், 2002 மதல் 2005 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் இலங்கை உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றினார். [8][9]

ஊடகங்களால் “ சர்ச்சைக்குறியவை” என அடையாளப்படுத்தப்படும் தேசிய அளவிலான பல நீதிமன்ற வழக்குகளில் முஸ்தபா தொடர்புபட்டுள்ளார்.

  • 2017 ஆம் ஆண்டில், மத்திய வங்கி பத்திர முறைக்கேட்டில் முன்னால் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான வழக்கில் இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[10][11][12]
  • 2016ம் ஆண்டு உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்துக்கு எதிராக தெற்காசிய தொழிநுட்ப மற்றும் மருத்துவக் கழகம் (SAITM) பதிவு செய்த வழக்கில், முஸ்தப்பா SAITM சார்பில் ஆஜரானார்.[13][14][15]
  • 2012ம் ஆண்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது நீதிமன்றங்களை அவமதித்தாக தொடுக்கப்பட்ட அவருக்கு எதிரான வழக்கில் வாதிட்டார்.[16]
  • 2008 ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் ஹெட்ஜிங் ஒப்பந்தம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் அவர் பல வழிகளில் ஈடுபட்டார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில் அவர் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி சார்பில் ஆஜரானார்.[17] இங்கிலாந்தில் தி டாய்ச் வங்கியின் வழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இதே விடயத்தில் இவர் எதிர்தரப்பிலும் வாதிடுவதாக குற்றம்சாட்டப்படார்.[18] தன்னை பதவியிலிருந்து நீக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைத்த வழக்கில் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி ஜெயசுந்தரவை முஸ்தபா பிரதிநிதித்துவப்படுத்தினார்.[19]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

2017ம் ஆண்டு நிலவரப்படி, பொதுவாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய முஸ்தபா இரண்டு நீதிமன்ற வழக்குகளில் இலங்கை புகையிலைக் கம்பனியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபை சட்ட திருத்தங்குளக்கு எதிராக இலங்கை புகையிலைக் கம்பனி வழக்கு தாக்கல்

2015ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி NATA சட்டத்தில் திருத்தங்களை செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை கோரினார். சிகரட் பெட்டிகளில் 80ம% உருவப்பட சுகாதார எச்சரிக்கையை பிரசுரிக்கும் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதே இதன் நோக்கமாக இருந்தது. உச்ச நீதிமன்றமானது இவ்விடயம் தொடர்பில் இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) முன்வைப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கியது, அதனை ஊவுஊ சார்பாக முஸ்தபா மேற்கொண்டார்.[20]

உருவப்பட சுகாதார எச்சரிக்கை தொடர்பான வழக்கு: CTC மற்றும் சுகாதார அமைச்சர்

2013ம் ஆண்டு உருவப்பட சுகாதார எச்சரிக்கை 80ம% பிரசுரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி வெளியீட்டை அடிப்படையாகக்கொண்டு அப்போதைய சுகாதார அமைச்சருக்கு எதிராக இலங்கை புகையிலைக் கம்பனி வழக்கு தாக்கல் செய்தது.[21][22] ஆரம்பத்தில் CTC யை ரோமேஸ் த சில்வா பிரதிநிதித்துவப்படுத்தினாலும் பின்னர் அவருக்கு பதிலாக முஸ்தபா நியமிக்கப்பட்டார்.[23][24][25] மேலதிக தகவல்களுக்கு “சிகரட் பெட்டிகளில் உருவப்பட சுகாதார எச்சரிக்கைக்கு சவால் விடுத்து CTC வழக்கு தாக்கல்” என்ற பக்கத்தை பார்வையிடவும்.

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

  1. 1.0 1.1 Asian Tribune. Historic media Serendipity for Lankan Muslims unveiled in Colombo, 16 December 2014, accessed May 2017
  2. 2.0 2.1 2.2 The Island. Father and son both President’s counsel, 15 November 2012, accessed May 2017
  3. 3.0 3.1 3.2 SS Selvanayagam. Fourth generation of Musthaphas forays into legal domain, 19 December 2011, accessed May 2017
  4. The Nation. Appointment of President’s Counsel, 28 March 2015, accessed May 2017
  5. 5.0 5.1 SS Selvanayagam. Faisza Musthapha appointed President of Companies Disputes Board, 23 December 2013, accessed May 2017
  6. Daily Nation. Faiszer Musthapha appointed as legal adviser to President, 27 May 2015, accessed May 2017
  7. 7.0 7.1 R. Farook. ‘Celebration of Excellence’ at Bishop’s auditorium, 22 July 2013, accessed May 2017
  8. Sri Lanka High Commission UK. The History of the High Commission, 2017, accessed May 2017
  9. Human Rights Commission of Sri Lanka. Members of the Commission, 2017, accessed May 2017
  10. The Island. Romesh de Silva, PC leads Mahendran’s team of lawyers: Bond scam probe, 15 March 2017, accessed May 2017
  11. M Gunasekara, R Katugampola. Gov. Mahendran gave arbitrary instructions to raise interest rate while auction was on, says witness, Sunday Times (Sri Lanka), 26 March 2017, accessed May 2017
  12. SS Selvanayagam. As Counsel for CB Falls Sick, CA Defers Hearing on Perpetual Treasuries to March 10, 9 March 2017
  13. SS Selvanayagam. Court of Appeal to hear petition of SAITM students on 12 October, Daily FT, 7 July 2016, accessed May 2017
  14. D Manu. Rajapaksa regime’s SAITM sin puts joint opposition in a spin, The Sunday Times: Columns, 12 February 2017, accessed May 2017
  15. W Ramanayake. SLMC non-registration of SAITM grads: Two cases in court, The Sunday Times, 10 July 2016, accessed May 2017
  16. SS Selvanayagam. Contempt Case on Bathiudeen Fixed for Trial, Daily Mirror Sri Lanka, 6 September 2012, accessed May 2017
  17. S. Samarasinghe. Central Bank hand revealed as oil hedge boils over, The Sunday Leader Online, 30 November 2008, accessed May 2017
  18. Lanka News Web. Mohan Peiris’ failures cost millions to CPC, 20 August 2013, accessed May 2017
  19. D Bastians. CJ’s Husband’s Appointment to State Bank Grounds for Perceived Judicial Bias – New Public Interest Litigation Petition Says, Colombo Teregraph.com, 6 September 2012, accessed May 2017
  20. Campaign for Tobacco Free Kids. Supreme Court Document S.C. (SD) No. 2/2015, 6 February 2015, accessed May 2015
  21. Court of Appeal Document. IN THE COURT OF APPEAL OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA, 22 February 2013, accessed May 2017
  22. The Sunday Times. SC gives CTC time to implement health warnings on cigarette packs, 03 March 2013, accessed May 2017
  23. Lanka News Web. Chief Justice to shows Ceylon Tobacco how to win an appeal, Exclusive, 06 August 2013, accessed May 2017
  24. DailyMirror (Sri Lanka). Pictorial warnings to cover 50-60% of cigarette packs, 13 May 2014, accessed May 2017
  25. SS Selvanayagam. Tobacco Company’s Appeal Deferred, Daily Mirror Sri Lanka, 29 May 2013, accessed May 2017