பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT)

From Tobacco Unmasked Tamil
Global distribution of BAT as presented in the BAT website in July 2017[1]

இப் பக்கத்தின் சில பகுதிகள் British American Tobacco (BAT) வலைத்தளத்தில் TobaccoTactics.org. பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.

TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியானது (BAT) 1902ம் ஆண்டு இங்கிலாந்தின் இம்பீரியல் புகையிலைக் கம்பனி மற்றும் அமெரிக்க புகையிலை நிறுவனங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாகும்.[2] இதன் தலைமையகம் லண்டன் நகரத்தில் நிறுவப்பட்டுள்ளதோடு அங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா வலையங்கள் இயக்கப்படுகின்றன.[3][2] [1] பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியானது உலகலாவிய ரீதியில் 180 சந்தைகளில் 300 வகையிலான புகைப்பொருள் வகைகளை விற்பனை செய்வதோடு உலக புகையிலை சந்தையில் 15 வீதமான பங்குகளை கொண்டுள்ளது.[4]

சர்வதேச இணைவுகள்

2017ம் ஆண்டில் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியுடன் (BAT) பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT) ஏனைய மூன்று சர்வதேச புகையிலைக் கம்பனிகளுடன் பங்காளித்துவத்தை பேணி வருகின்றது;[5]

பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியானது (BAT) கீழ் காணப்படும் சிகரட் உற்பத்தியில் ஈடுபடாத புகையிலைக் கம்பனிகளை சொந்தமாகக் கொண்டுள்ளது:

  • CN கிரியேட்டிவ் லிமிடட் - இலத்திரணியல் சிகரட் மற்றும் நிக்கோட்டின் மாற்று உற்பத்திகள்
  • Fiedler & Lundg புகையிலைத்தூள் உற்பத்தி
  • நிகோவென்சர் லிமிடட் - அங்கீகரிக்கப்பட்ட நிக்கோட்டின் உருவாக்கம்.

பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியுடன் இணைந்துள்ள ஏனைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் அறிய அமெரிக்க புகையிலைக் கம்பனி(BAT) என்ற வலைதளத்தில் TobaccoTactics.org.பக்கத்தை பார்வையிடவும்.

புகையிலை மற்றும் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகள்

பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி கீழ் காணப்படும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளமைக்கான சர்வதேச ஆதாரங்கள் உள்ளன;[6]

  • பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான சர்ச்சைக்குறிய உத்திகளை பயன்படுத்தியமை
  • தங்களின் தயாரிப்புகளுக்காக இளைஞர்களை இலக்கு வைத்தல்
  • புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கங்களை அச்சுறுத்தும் வகையிலான வழக்குகள் மற்றும் சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளல்
  • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முன்னணி குழுக்களை உருவாக்கல்
  • சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் ஊடாக அழுத்தங்களை பிரயோகித்தல் (Corporate Social Investments – CSR)
  • புகையிலை பாவனையினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலான விஞ்ஞானப்பூர்வமான கருத்துக்களை சந்தேகத்திற்கு உற்படுத்துதல் மற்றும் தாக்கங்கள் தொடர்பில் ஆராய்பவர்களை இழிவுபடுத்துதல்
  • சட்டவிரோத புகையிலைக் கடத்தலோடு தொடர்புபடல்

[7]

இலங்கையில் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT)

இலங்கையில் சிகரட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஏகபோக நிறுவனமான இலங்கை புகையிலைக் கம்பனி (CTC), பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின் துணை நிறுவனமாகும். பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியானது 1904ம் ஆண்டு தனது வியாபார நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பித்தது. அப்போது இலங்கை சிலோன் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.[8] இந்நிறுவனமானது 1952ம் ஆண்டு கொழும்பு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதோடு 2016ம் ஆண்டில் அதன் பங்குகளில் 84 வீதம் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனிக்கு சொந்தமானதாகும் .[9][10]

பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி இரண்டு வழிமுறைகள் மூலம் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் அதன் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துகின்றது.

  • நிறைவேற்று பணிப்பாளர் - பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர் சபை மூலம் கட்டுப்படுத்துகின்றது.[9]
  • வலை கட்டமைப்பு - இலங்கையர்கள் அல்லாத பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின் உத்தியோகத்தர்கள் இலங்கை புகையிலைக் கம்பனியில் கடமையாற்றுகின்றனர். திறமை மேம்பாடு அடிப்படையில் இலங்கை புகையிலைக் கம்பனியில் தொழில் செய்யும் உத்தியோகத்தர்களை பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்களுக்கு உள்வாங்கியுள்ளது.[9] [11] .[12]

இலங்கையில் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிய இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் இலங்கையில் புகையிலைத் தொழில்துறை என்ற பக்கங்களை பார்க்கவும்.

Tobacco Unmasked வள ஆதாரங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

தொடர்புடைய இணைப்புகள்

British American Tobacco's website: [2]

மேற்கோள்கள்

மேற்கோள்கள்:

  1. British American Tobacco. Website, 2017, accessed July 2017
  2. 2.0 2.1 British American Tobacco, Our History: A time-line, undated, accessed February 2017
  3. British American Tobacco, Website, undated, accessed February 2017
  4. Reference for Business, Reference for Business company profile, 2017, accessed February 2017
  5. British American Tobacco, British American Tobacco Annual Report 2015, 2017, accessed March 2017
  6. TobaccoTactics.org. British American Tobacco (BAT), May 2017, accessed May 2017
  7. TobaccoTactics.org. BAT Involvement in Tobacco Smuggling, 17 March 2016, accessed May 2017
  8. KE Hendrickson. The Encyclopaedia of the Industrial Revolution in World History, Volume 3, 2015
  9. 9.0 9.1 9.2 Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, accessed May 2017
  10. Colombo Stock Exchange. Ceylon Tobacco Company PLC Opens Trading at CSE, 2016, accessed May 2017
  11. The Island. CTC reinvigorates commitment to talent development, 24 March 2016, accessed May 2017
  12. Sunday Times. Ceylon Tobacco: Growing in a controversial market, 18 July 2004, accessed May 2017