2017ம் ஆண்டு புகையிலை விதிமுறைகளை எதிர்க்கும் சிகரட் சில்லறை வியாபாரிகள் சங்கம்

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

2017ம் ஆண்டு சிகரட் சில்லறை விற்பனை தொடர்பான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்மொழிந்தார். சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிக்கடி செல்லும் எந்த இடத்திலிருந்தும் 500 மீற்றருக்குள் தனி சிகரட் விற்பனை செய்வதையும் சிகரட் விற்பனையை தடை செய்வதையும் இந்த திட்டங்கள் முன்வைத்தன.[1]

உரு 1: டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளிவந்;த செய்தி கட்டுரை[2]

நிதி அமைச்சரிடம் எதிர்ப்பை வெளிப்படுத்துதல்

முன்மொழியப்பட்ட புதிய விதிமுறைகளை எதிர்த்து புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சரான மங்கள சமரவீரவை சந்தித்து சிகரட் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் முறைப்பாட்டினை முன்வைத்ததாக 'டெய்லி மிரர்' செய்தி வெளியிட்டது. சிகரட்டுகளின் விலை உயர்வு அவர்களின் வியாபாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது என்று அவர்கள் அமைச்சரிடம் கோரியதாக அக் கட்டுரை மேலும் தெரிவிக்கின்றது:[2]

  • சிகரட் விலையயை நியாயமான மட்டத்தில் வைத்திருக்கவும்.
  • தனி சிகரட் விற்பனை செய்வதற்கான தடையை செயல்படுத்தக்கூடாது.
  • தங்கள் வியாபாரத்தினை பாதிக்கும் விதிமுறைகளை அறிமுகப்படுத்தக்கூடாது.

எவ்வாறாயினும் அமைச்சரை சந்திக்கச் சென்ற சிகரட் சில்லறை விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களின் பெயர்கள் அல்லது பதவிகள் குறிப்பிடப்படவில்லை.

பிரதமரிடம் எதிர்ப்பை வெளிப்படுத்துதல்

உரு 2: டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளியான செய்தி[3]

அதே திகதியில் டெய்லிஎப்டி பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தியில் புதிதாக முன்மொழியப்பட்ட விதிமுறைகளை ஆராய பிரதமர் ஒரு குழுவை நியமித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த குழு புகையிலை ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை முன்மொழிவுக்கு முன்னதாக இருந்தது. குழு அங்கத்தவர்களின் பெயர்கள் 2017 டிசம்பர் 31ம் திகதி வரை பகிரங்கப்படுத்தபடவில்லை.[3] The name of the members of the committee were not made public as of 31st December 2017.

சந்தர்ப்பம்

மேற்கூறிய இரண்டு செய்திதாள் கட்டுரைகளும் 2017ம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டது (2017 மே 30), அத்தோடு அதே ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனமானது இலங்கை ஜனாதிபதிக்கு உலக புகையிலை தின விருதை வழங்கியிருந்தது.[4]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

  1. Daily Mirror. Sale of Loose Fags will be Banned - Rajitha, 09 March 2017, assessed 01 Dec 2017
  2. 2.0 2.1 Daily Mirror. [1], 30 May 2017
  3. 3.0 3.1 [2], 30 May 2017, accessed 01 Dec 2017
  4. President’s Media Division. Sri Lanka receives World No Tobacco Day Award for third time, PMD News, 23 November 2017, accessed January 2018