ஹர்ஷ த சில்வா

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

ஹர்ஷ த சில்வா 2010ம் ஆண்டு முதல் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்தவராக உள்ளார்.[1][2]. கொழும்பு ரோயல் கல்லூhயில் கல்வி கற்ற இவர், அமெரிக்காவின் ட்ருமன் ஸ்டேட் பல்கலைக்கழத்தில் முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார். அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.[3][4]. பொதுவாக அவர் தொழில்முனைவோர் என அடையாளம் காணப்படுவதுடன், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களான, ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் மொரடுவ பல்கலைக்கழகங்களில் வருகை தரும் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.[4] இலங்கையிலுள்ள இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][1]

உரு 1:ஹர்ஷ த சில்வா

அரசியல் / அரச பதவிகள்

  • பாராளுமன்ற உறுப்பினர் 2010 முதல் தற்போது வரை[3]
  • எதிர்கட்சியின் பொருளாதார விவகாரங்களுக்கான பேச்சாளர், ஐக்கிய தேசியக் கட்சி[4]
  • கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் – ஜனவரி 2015 முதல் ஓகஸ்ட் 2015 [1]
  • வெளியுறவு பிரதி அமைச்சர் – 2015 செப்டம்பர் தொடக்கம் 2017 மே மாதம் வரை. [4]
  • தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார திட்டமிடல் பிரதி இராஜாங்க அமைச்சர் (பெப்ரவரி 2018 – ஒக்டோபர் 2018)[2]
  • பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சர்.(டிசம்பர் 2018 – ஒக்டோபர் 2019)[2]

வேறு பதவிகள்

  • DFCC வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் (1995 -1997).[4][5]
  • DFCC வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணரும் பின்னர் சிரேஷ்ட பொருளாதார நிபுணரும் - 1993 -1995.[4][5]
  • சந்தை மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் லங்கா நிறுவனத்தின் இணை நிறுவுனர் (1997 -2000).[4][5]
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கான ஆலோசகர் (UNDP)(2004).[4][5]
  • உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஆலோசகர்.[4][5]
  • இலங்கை, ஜயவர்தனபுர பல்கலைக்கழகததின் வருகை தரும் விரிவுரையாளர் (1995 - 2000)[4][5]
  • இலங்கை, மொரடுவ பல்கலைக்கழகததின் வருகை தரும் விரிவுரையாளர் (2015)[4][5]

புகையிலைத் தொழில்துறையுடனான தொடர்பு

2015ம் ஆண்டு இடம்பெற்ற ஊடக நிகழ்சியொன்றின் போது, ஹர்ஷ த சில்வாவிற்கு பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமான இலங்கை புகையிலைக் கம்பனியுடன்(CTC) தொடர்பு இருப்பதாக குறித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரால் குற்றம் சாட்டப்பட்டது, அதனை அவர் அதனை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் மறுக்கவில்லை.[6]

பெப்பர் கியுப்

ஹர்ஷ த சில்வா, 2010ம் ஆண்டு பெப்பர் கியுப் நிறுவனத்தை முதலீட்டு நிறுவனமாக இணைத்தர்.[1]

கொழும்பு 8, பெயார்பீல்ட் கார்டன்ஸில் அமைந்துள்ளபெப்பர் கியூப் நிறுவனம், அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமாகும், 2009ம் ஆண்டு ஊழசிழசயவந ளழடரவழைn என்ற பெரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 2010ம் ஆண்டு பெப்பர் கியூப் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.[7] 2019ம் ஆண்டு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின்படி, ஆதிக் மரிக்கார் முகாமைத்துவ பணிப்பாளராகவும், உதயனா செயவிரத்ன நிறுவனத்தின் பணிப்பாளராகவும் உள்ளனர்.[7] 2013ம் ஆண்டு பெப்பர் கியூப் நிறுவன வலைத்ளத்தின்படி, இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) அவர்களின் முக்கிய வாடிக்கையாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. "key client".[8]

உரு 2: பெப்பர் கியூப் நிறுவனம், இலங்கை புகையிலைக் கம்பனியை(CTC) அவர்களின் வாடிக்கையாளராக பட்டியலிட்டுள்ளது. [8]

2018ம் ஆண்டில் லங்கா வெப் நியுஸ் என்ற செய்தி வலைத்தளம், தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியானது, தேர்தலுக்கு முன்னர் கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்வதற்காக ஹர்ஷ த சில்வா மூலம் ஒரு மில்லியன் ரூபா பணத்தை வழங்கியதாக தெரிவித்திருந்தது.[9]2015ம் ஆண்டு இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, தாம் ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆலோசணை நிறுனத்தை ஆரம்பித்ததாகவும் பின்னர் தணிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அதனை நீல்சன் லங்கா நிறுவனத்ததிற்கு விற்றதாகவும் கூறியிருந்தார். [10] அவரது கூற்று பெப்பர் கியூப் உடன் தொடர்புபட்டதா என தெளிவாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் அவரை தொடர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

செப்டெம்பர் 28ம் திகதி, கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இடம்பெற்ற இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார். இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் என்பது இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) உள்ளடங்களாக ஏழு நிறுவனங்களை உள்ளடக்கியதாகும். மேலதிக தகவல்களுக்கு, இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் என்ற பக்கத்தைப் பார்வையிடவும். [11].

உரு 3: ஹர்ஷ த சில்வா இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார். இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் ஆகியவற்றின் தலைவர் மைக்கல் கொஸ்ட், நிகழ்வின் பிரதான பேச்சாளர் ஜிம் லோவ்லிஸ் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் படத்திள் உள்ளனர். [11]

Tobacco Unmasked வளங்கள்

Other relevant TobaccoUnmasked pages:

References

  1. 1.0 1.1 1.2 1.3 H. de Silva. Harsha de Silva/Biography of Dr. Harsha de Silva, 2015, accessed June 2018
  2. 2.0 2.1 2.2 2.3 Sri Lanka ParliamentMembers of parliament, 2019, accessed June 2018
  3. 3.0 3.1 Manthree.lk. Harsha de Silva biography, Undated, accessed April 2019
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 Ministry of Foreign Affairs, Sri Lanka. Deputy Minister of Foreign Affairs, Undated, accessed April 2019
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Harsha de Silvade Silva Brief CVAugust 2007, Accessed date November 2019
  6. Derana TV. Discussion with Harsha de Silva, TobaccoUnmasked Archive, 05 February 2018, archived August 2018
  7. 7.0 7.1 Pepper Cube. Pepper Cube, 2013 accessed June 2018
  8. 8.0 8.1 Pepper Cube. Key Clients, 2013, accessed June 2018
  9. Lanka web news. [1] 14 February 2018, accessed June 2018
  10. Sirasa TV. Ilakkaya Discussion with Dr. Harsha de Silva, TobaccoUnmasked Archive, archived on January 2019, accessed January 2019
  11. 11.0 11.1 Daily Mirror. League of Multi National Cooperates 01 October 2018, accessed October 2018