புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம்

From Tobacco Unmasked Tamil
Revision as of 11:06, 17 May 2019 by Reportercct1.tamil (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
800px-NATAnw.jpg
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையானது (NATA) 2006ம் ஆண்டு புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையின் 27ம் இலக்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முன்னோடியான அரச நிறுவனமாகும்.இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை தடுப்பு சட்ட அம்சங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல் இதன் நோக்கமாகும்.[1]

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC) உலகின் முதலாவது சுகாதாரம் தொடர்பான ஒப்பந்தமாகும்.இவ் ஒப்பந்தமானது 2003ம்ஆண்டு உலகலாவிய புகையிலை நோய் தொற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில் நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.[1] இலங்கையானது தொடர்ச்சியாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் நாடாகும். அத்துடன் இலங்கையானது ஆதாரம் சார் புகையிலைக் கட்டுப்பாட்டு அளவீடுகளை அமுல்ப்படுத்துவதோடு உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கதில் முதன் முதலில் கைச்சாத்திட்ட நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கின்றது.[1]

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையை நிறுவுவதற்கான நோக்கங்கள்

 • பொது சுகாதாரத்தினை பாதுகாப்பதற்கான கொள்கைகளை இனங்காணல்.
 • புகையிலை மற்றும் மதுசாரப் பொருட்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தல், நுகர்வை மதிப்பிடல் மற்றும் அவதானித்தலின் மூலம் புகையிலை மற்றும் மதுசாரம் சார்பான தீங்குகளை தவிர்த்தல்.
 • புகைப்பொருள் பாவனை மற்றும் மதுசார நுகர்விற்கான அணுகுமுறைகளை குறைப்பதன் மூலம் நபர்களிடையே அதன் நுகர்விற்கான ஊக்குவிப்பை தடுப்பதற்கும் விஷேடமாக சிறுவர்களிடையே புகையிலை மற்றும் மதுசார நுகர்விற்கான ஊக்குவிப்பை குறைக்க ஆவண செய்தல்.

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபை சட்டத்தின் முக்கிய குறிப்புகள்

 • இருபத்தொரு வயதிற்கு குறைவானவர்களுக்கு புகையிலை மற்றும் மதுசார விற்பனை தடை.
 • புகையிலை மற்றும் மதுபான பொருட்களை விற்பனை செய்வதற்கு தானியங்கி இயந்திரங்களை நிறுவுதல் தடை.
 • விதிமுறைக்கு அமைய பரிந்துரைக்கப்பட்ட புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தடை.
 • ஒவ்வொரு புகையிலைப் பொருட்களிலும் சுகாதார எச்சரிக்கை, தார் மற்றும் நிக்கோட்டின் போன்ற உள்ளடக்கங்கள் இன்றி விற்பனை செய்தல் தடை.
 • புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான விளம்பரங்களை தடை.
 • அனுசரைணைகளை தடை.
 • இலவசமாக புகையிலை மற்றும் மதுசார பொருட்கள் விநியோகிக்கப்படுவது தடை.
 • புகையிலை மற்றும் மதுசார பொருட்களின் வர்த்தக முத்திரைகள் தொடர்பான குற்றங்கள்.
 • பொது மக்கள் நடமாடக்கூடிய இடங்களில் புகைத்தலுக்கான தடை.
 • புகையிலைப் பொருட்களின் உள்ளடக்கங்களை பரிசோதித்தல்.
 • மோட்டார் போக்குவரத்து சட்டம் தொடர்பான விதிகள்.

குறிப்புகள்

 1. 1.0 1.1 1.2 National Authority on Tobacco and Alcohol (NATA). Website, 2010, accessed June, 2017