அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம்

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம்(களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம்) என்பது இலங்கை புகையிலைக் கம்பனியில்(CTC) பதிவு செய்யப்பட்ட களஞ்சிய உரிமையாளர்களின் சங்கமாகும். இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனம் என்பதோடு இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஏகபோக நிறுவனமும் ஆகும்.[1] பெப்ரவரி நிலவரப்படி ஜயந்த எகொடவெல சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.


உரு: அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பத்திரிக்கையாளர் மாநாட்டில்[2]

களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

பிரதேச மட்டத்திலான புகையிலைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை எதிர்த்தல்

பிரதமரின் மக்கள் தொடர்பு ஆலோசகர் ஜே. தடலகேவினால் எழுதிய 2017 ஓகஸ்ட் 26 என்று திகதியிடப்பட்ட கடிதமொன்றினை மாவட்ட மற்றும் பிரதேச விவசாய அதிகாரிகள் பெற்றனர். இக்கடிதமானது 2017 ஓகஸ்ட் 16ம் திகதி பிரதமர் அலுவகலத்திலுள்ள பொது உறவுகள் பிரிவில் இடம்பெற்ற சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்துடனான சந்திப்பைக் குறித்துக் காட்டுகின்றது. புகையிலை செய்கையாளர்களை புகையிலை அல்லாத மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதற்கான கள அளவிலான முயற்சிகளை நிறுத்துமாறு தடலகே அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.[3]

நிதி அமைச்சருடனான சந்திப்பு

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான சந்திப்பு

புகையிலைச் செய்கையைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தனர்.[4]

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வேண்டுகோள் விடுத்தமை

2018 மார்ச் 22ம் திகதியன்று அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து அரசாங்கத்தின் புகையிலைச் செய்கைக்கான தடை தொடர்பாக முறையீடு செய்தனர்.[5]

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியமை

சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது புகையிலைத் தொழிலின் நலன்களை இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தது. மேலதிக விபரங்களுக்கு சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ஜயந்த எகொடவெல என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

  • 2015 நவம்பர் 29ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கு எழுதிய கடிதம்[6]
  • 2016 செப்டம்பர் 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு எழுதிய கடிதம். [7]
  • 2017 ஓகஸ்ட் 9ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய கடிதம்.[8]

புகையிலை செய்கையை ஒழிப்பதற்கான தேசிய கருத்துக்களத்தை எதிர்த்து ஊடக சந்திப்பு

புகையிலைத் தொழில்துறை அவதான நிலையமானது, புகையிலைச் செய்கை தொடர்பில் மேற்கொண்ட அதன் ஆராய்ச்சி முடிவுகளை தமது பங்குதாரர்களுடன் கருத்துக்களம் ஒன்றினை மேற்கொண்டது, இது 2020 ல் அரசாங்கம் புகையிலைச் செய்கை தடை செய்வதற்கான முன்னோடி நிகழ்வாக இருந்ததோடு இலங்கையில் புகையிலைச் செய்கையின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது 2018 மார்ச் 16ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு ஆய்வின் முடிவுகள் குறித்து விமர்சித்தது. மேலும் விபரங்களுக்குத் தயவு செய்து ஜயந்த எகொடவெல என்ற பக்கத்தைப் பார்க்கவும்.[9][10][11][12][13][14][15][16][2]

புகையிலை தடைக்கு எதிராகப் போதி பூஜையில் ஈடுபட்டனர்

2017 ஒக்டோபரில் தெஹியத்தகண்டியவில் அமைந்துள்ள கெலேகம, சம்போதி விகாரையில் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது புகையிலைப் பயிர்ச் செய்கை தடைக்கு எதிராக போதி பூஜை ஒன்றினை ஏற்பாடு செய்தது.[17][18][19] மேலதிக தகவல்களுக்குப் புகையிலைப் பயிர்ச் செய்கை தடைக்கு எதிராக போதி பூஜை என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

TobaccoUnmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

  1. Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, accessed May 2017
  2. 2.0 2.1 The business Times. All Ceylon Cigarette Tobacco Barn Owner’s Association implores Government to withdraw proposed immediate ban on tobacco cultivation, 20 March 2018, Accessed January 2019
  3. Dadallage. J. Letter from J. Dadallage, The Advisor, Prime Minister's Public Relations to the Secretary, Ministry of Home Affairs TobaccoUnmasked Archive, 26 August 2017, Accessed January 2019
  4. Daily FT. [://web.archive.org/web/20181231051546/http://www.ft.lk/business/all-ceylon-cigarette-tobacco-barn-owners-take-plightto-ravi-k/34-606854 All Ceylon Cigarette Tobacco Barn Owners take plight to Ravi K] 31 March 2017, Accessed December 2018
  5. Jayantha godawela. සිගරට් දුම් උදුන් හිමි සංගමයෙන් මුදල් ඇමතිට අභියාචනයක් ,22 March 2018, Accessed December 2018
  6. Jayantha Egodawela. Letter from barn owners association All Ceylon Cigarette Tobacco Barn owners Association to the president, TobaccoUnmasked Archive, 29 November 2015, Accessed January 2019
  7. Jayantha Egodawela. Letter 2 from barn owners association All Ceylon Cigarette Tobacco Barn owners Association to the president, TobaccoUnmasked Archive, 12 September 2016, Accessed February 2019
  8. Jayantha Egodawela. Letter from barn owners association All Ceylon Cigarette Tobacco Barn owners Association to the Prime Minister, TobaccoUnmasked Archive, 9 August 2017, Accessed January 2019
  9. Sunday Leader. urged to withdraw proposed ban on tobacco cultivation, 18 March 2018, Accessed December 2018
  10. Daily FT [1] 20March 2018, Accessed December 2018
  11. C. Wettasingha. Looming ban on tobacco cultivation fast-tracked, accuse farmers, Daily Mirror, 19 March 2018, Accessed December 2018
  12. S. Dias. Govt. on drive to snuff out tobacco, cigarette puff Sunday Times, 18 March 2018, Accessed December 2018
  13. Ada Derana. Ceylon Cigarette Tobacco Barn Owner’s Association implores Government to withdraw proposed immediate ban on tobacco cultivation 19 March 2018,Accessed December 2018
  14. Daily News. Livelihood of over 300,000 tobacco farmer community in jeopardy 19 March 2018, Accessed January 2019
  15. Tobacco Reporter. Cultivation ban opposed 19 March 2018], Accessed January 2019
  16. LankaWeb. Cultivation ban opposed 19 March 2018, Accessed January 2019
  17. Ceylon Today. Tobacco farmers seek divine assistance to avert imminent tobacco cultivation ban, 20 October 2017, accessed March 2018
  18. Sri Lanka Mirror. Tobacco Farmers seek Religious Blessings, 18 October 2018, accessed March 2018
  19. Interviewslk. දුම්කොළ ගොවීන්ට බෝධි පුජා පවත්වන්න සිද්ධ වුනේඇයි?, You Tube, 19 October 2017, Accessed March 2018