FCTC கட்டுரை 16: இளம் வயதினருக்கு விற்றல் மற்றும் இளம் வயதினரைக்கொண்டு விற்பனை செய்தல்

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம் கட்டுரை 16ன் மூலம் புகையிலைப் பொருட்களை இளம் வயதினருக்கு விற்றல் மற்றும் இளம் வயதினரைக்கொண்டு விற்பனை செய்வதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றது. இளம் வயதினர் என்பதன் வரையறையானது, ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையிலுள்ள உள்நாட்டுச் சட்டம், சர்வதேச சட்டம் அல்லது 18 வயதிற்கு உற்பட்டவர்கள் என வரையறுக்கப்படுகின்றது.[1]

வழிகாட்டுதல் கோட்பாடுகள்

உலகளவில், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 942 மில்லியன் ஆண்களும் 175 மில்லியன் பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.[2] இலங்கையில் 15 -24 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களில் 27.4% ஆனோர் புகைப்பழக்கம் உள்ளவர்கள்.[3] முதன் முதலில் சிகரட் புகைக்க ஆரம்பிக்கும் வயது 14.5 எனவும், அவர்கள் தினசரி புகைப்பிடிப்பவர்களாக உருவாகும் போது வயது 17.7 எனவும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இளைஞர்கள் புகையிலை உற்பத்திகளை அணுகுதலைத் தடுப்பானது புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் பாரியப் பங்களிப்பாக அமையும்.[4]

நன்மைகள்

இளையவர்களுக்கு புகையிலை விற்பனையைத் தடுத்து அணுகுதலை கட்டுப்படுத்துவதானது புகையிலை பயன்பாட்டில் கணிசமான குறைப்பினை ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.[4]

பரிந்துரைக்கப்பட்ட செயல்கள்

FCTC கட்டுரை 16 பின்வருவனவற்றை உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைக்கின்றது:[1]

  • இளையோருக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தலைத் தடை செய்க.
  • புகையிலைப் பொருட்கள் விற்பனை/கொள்வனவு தடை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை அமல்படுத்துதல்.
  • நுகர்வோரின் வயதினை கேட்டுச் சரிபார்த்துக்கொள்ளுமாறு விற்பனையாளரைக் கோருதல்.
  • உற்பத்திகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ளக் கூடியது போன்ற தானியங்கி முறைகளைத் தடை செய்தல்.
  • புகையிலைப் பொருட்களின் வடிவில் எந்தவொரு பொருளையும் (உணவு, விளையாட்டுப் பொருட்கள்) உற்பத்தி செய்வதையும் விற்பனை செய்வதையும் தடை செய்க.
  • புகைப்பொருள் விற்பனை இயந்திரங்களைத் தடை செய்து இளையவர்கள் அணுகுதலை தடை செய்க
  • பொது மக்களுக்கும் குறிப்பாக இளையவர்களுக்கும் புகையிலை உற்பத்திகளை இலவசமாக விநியோகிப்பதைத் தடை செய்க.
  • சிகரட்டுகளை ஒற்றைக் குச்சிகளாக அல்லது சிறிய பொதிகளில் விற்பனை செய்வதைத் தடை செய்க.
  • அந்தந்த சட்டங்களுக்கு இணங்காத விற்பனையாளர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கவும்.
  • இளையவர்களினால் புகையிலை உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடை செய்க.

நடைமுறைப்படுத்துதல் - இலங்கை

2016ம் ஆண்டு 27ம் இலக்க சட்டமான மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகாரச்சபையின் சட்டத்திற்கு அமைவாகத் தடை செய்யப்பட்டவையானது:[5]

  • 21 வயதிற்கும் குறைந்த எந்த ஒரு நபருக்கும் புகையிலைப் பொருட்களை விற்கத் தடை.
  • புகையிலைப் பொருட்களுக்கான விற்பனை இயந்திரம்.
  • புகையிலை உற்பத்திகளை இலவசமாக விநியோகித்தல்.

புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தின்(FCTC) பரிந்துரைகளின் படி மேற்கூறிய விதிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு அபராதம் விதிக்க மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகாரச்சபையின் சட்டம்(NATA) பரிந்துரைக்கின்றது. 2019ம் ஆண்டு தொடக்கம் பாடசாலைகளிலிருந்து 100 மீற்றர் தூரம் வரைக்கும் புகைப்பொருள் விற்பனையைத் தடை செய்துள்ளது.

இருப்பினும் சிகரட்டுகள் இன்னும் ஒற்றைக் குச்சிகளாக விற்பனை செய்யப்படுகின்றன மேலும் ஒரு பொதிக்குள் இருக்க வேண்டிய குச்சிகள் இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை.

உரு : பாடசாலை மாணவர்களும், இளம் பெண்களும் “அபிஷேகம்” கடைகளைக் கடந்து செல்கின்றனர், “அபிஷேகம்” கடைகள் என்பது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும், இலங்கையில் ஏகபோக சிகரட் விற்பனையாளருமான இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) விற்பனை மேம்பாட்டுத் திட்டமாகும்

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

  1. 1.0 1.1 World Health Organization WHO framework convention on tobacco control, 2005, Accessed January 2019
  2. J. Drope, W. Schluger, Z.Cahn, J. Drope, S. Hamill, F.Islami, A.Liber, N.Nargis and M. Stoklosa Prevalence The Tobacco Atlas Sixth Edition, Accessed February 2019
  3. Alcohol and Drug Information Centre Current tobacco usage by age Trend Survey on Tobacco, July, 2014, Accessed February 2019
  4. 4.0 4.1 Barbara S. Lynch and Richard J. Bonnie Youth access to tobacco products Growing up Tobacco Free, 1994, Accessed January 2019
  5. Laws of Sri Lanka National Authority on Tobacco and Alcohol Act, Accessed January 2019