ஹேமகுமார நாணயக்கார

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

உரு 1: முன்னால் மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார

1953ம் ஆண்டு பிறந்த ஹேமகுமார நாணயக்கார, விவசாய தொழில் அதிபரும் இலங்கையின் அரசியல்வாதியுமாவார். அவர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு “மவுபிம ஜனதா கட்சி” என புதியதொரு கட்சியையும் உருவாக்கியுள்ளார்.[1] அவர் தனது ஆரம்பக் கல்வியை காலி ரிச்மன்ட கல்லூரியில் கற்றுள்ளார். மேலும் பேராதனை பல்கலைக்கழக விவசாயப் பீடத்தில் விவசாயம் தொடர்பான கலைமானி பட்டம் பெற்றுள்ளார். இடதுசாரி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அவர்களின் இளைய சகோதரரும் ஆவார்.[2]


அரசியல் மற்றும் அரச திணைக்களங்களில் வகித்த பதவிகள்

  • பாராளுமன்ற உறுப்பினர் (1989 – 1994 மற்றும் 2000 -2010) [1]
  • விவசாய ராஜாங்க அமைச்சர் (2007 -2010).[3]
  • ஆளுநர் – தென் மாகாணம் (2015-2018 ஏப்ரல்) [4]
  • ஆளுநர் – மேல் மாகாணம் (2018 ஏப்ரல் தொடக்கம் 2019 ஜனவரி) [5]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

அவர் விவசாய ராஜாங்க அமைச்சராக இருந்த போது, விவசாய அமைச்சின் “அபி வவமு ரட நகமு” (நாம் பயிர் வளர்ப்போம் நாட்டை வளர்ப்போம்) என்ற செயற்திட்டத்திற்கு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) அனுசரணை வழங்கியிருந்தது. இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின் துணை நிறுவனம் என்பதோடு இலங்கையில் புகையிலை உற்பத்தியை ஊக்குவிப்பதோடு சிகரட் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஏகபோக நிறுவனமும் ஆகும். Annual Report 2010, Accessed January 2019</Ref> குறித்த அனுசரணையானது இலங்கை புகையிலைக் கம்பனியின் ‘பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு’ செயற்திட்;டத்தின் அனுசரணையாக வெளியிடப்பட்டது. பின்னர் ஹேமகுமார நாணயக்கார அவர்கள் இலங்கை புகையிலைக் கம்பனியின் ‘பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு’ செயற்திட்டத்தில் ஈடுபட்டமையை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.[6]

உரு 2 : “மவுபிம சுயன் போ~ன பதனம” என்ற அமைப்பின் சார்பில் பத்தேகம தெற்கில் திகபிட்டிய வயல் பிரதேசத்தில் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பதாகைக்கு அமைய, CTC யின் அனுசரணையில் புதிய தொழினுட்பத்துடன் நெல் பயிரிடப்படுகின்றது. மேலும் இச் செயற்திட்டமானது விவசாய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார அவர்களின் தலைமையில் அரசாங்கத்தின் “அபி வவமு ரட நகமு” என்ற விவசாய அபிவிருத்திச் செயற்திட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:


குறிப்புகள்

மேற்கோள்கள்:
  1. 1.0 1.1 Parliament of Sri Lanka. Hon. Hemakumara Nanayakkara, M.P., Accessed January 2019
  2. Richmond College Galle Old Boys Association Facebook page. Doctorate for former Minister Hemakumara Nanayakkara, Facebook, 30 July 2011, Accessed January 2019
  3. Asian Tribune. Sri Lanka: 33 Non-Cabinet Ministers and 19 Deputy Ministers sworn in: MOU between ruling SLFP and opposition UNP comes to end, 28 January 2007, Accessed January 2019
  4. ColomboPage. Three new provincial governors appointed in Sri Lanka, 23 January 2015, Accessed January 2019
  5. Times Online. New Governors take oaths before President Sirisena, 12 April 2018, Accessed January 2019
  6. M. Mudugamuwa. Invisible hand blocking pictorial warnings – Cancer Care Association Tobacco kills 55 persons daily The Island, 8 May 2014, Accessed January 2019