ஹரின் பெர்னாண்டோ

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

ஹரின் பெர்னாண்டோ இலங்கையின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியை, பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியாவார் என்பதோடு 2015 தொடக்கம் 2019 வரையிலான அரசாங்கத்தின் அமைச்சராவார். அவர் பதுளை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 வது பாராளுமன்ற உறுப்பினராவார். 2015 முதல் 2019 நவம்பர் வரை தொலைத்தொடர்பு, டிஜிடல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார்.[1][2]

1978ம் ஆண்டு இலங்கை வத்தளையில் பிறந்த இவர், வணிக குடும்ப பின்னணியைக் கொண்டவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் தொழிலதிபராக இருந்தார். அவர் தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு 10 சென் ஜோசப் கல்லூரியில் கற்றார். ஊவா மாகாண பிரபல அரசியல்வாதி வின்சன்ட் டயஸின் பேத்தியை (இலங்கையின் ஊவா மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்) திருமணம் செய்துகொண்டதோடு ஒரு மகளுக்கும், மகனுக்கும் தந்தையாக உள்ளார். [3][4][5]

உரு 1: ஹரின் பெர்னாண்டோ[6]

அரசியலில் வகித்த பதவிகள்

 • 2005 – ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளர். [7].
 • 2005 முதல் 2010 – ஊவா மாகாணசபை உறுப்பினர். [8].
 • 2010 முதல் 2014 (ஓகஸ்ட் 5) – பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.[7]
 • 2015 ஜனவரி முதல் 2015 செப்டம்பர் – 7வது ஊவா மாகாண சபை முதலமைச்சர்.
 • 2015 முதல் 2018 ஒக்டோபர் - தொலைத்தொடர்பு, டிஜிடல் உட்கட்டமைப்பு, தொடர்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்.
 • 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் - தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான அமைச்சர். [1]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

தனி சிகரட் தொடர்பான யோசனையை எதிர்த்தமை

2017ம் ஆண்டு சுகாதார அமைச்சரினால் அமைச்சரவையில் முன்வைத்த தனி சிகரட் தடை தொடர்பான யோசனையை ஹரின் பெர்னாண்டோ எதிர்த்தார். [9][10]

இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார்

செப்டெம்பர் 28ம் திகதி, கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இடம்பெற்ற இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார். இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் என்பது இலங்கை புகையிலைக் கம்பனி உள்ளடங்களாக ஏழு நிறுவனங்களை உள்ளடக்கியதாகும். மேலதிக தகவல்களுக்கு, இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் என்ற பக்கத்தைப் பார்வையிடவும். [11][12]

உரு 2 : ஹரின் பெர்னாண்டோ இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார். இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் ஆகியவற்றின் தலைவர் மைக்கல் கொஸ்ட், நிகழ்வின் பிரதான பேச்சாளர் ஜிம் லோவ்லிஸ் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் ஹர்ஷ த சில்வா ஆகியோர் படத்தில் உள்ளனர். [11]

Tobacco Unmasked வளங்கள்

குறிப்புகள்

 1. 1.0 1.1 Office of the Cabinet of Ministers of Sri Lanka. Official Website, undated, accessed January 2019
 2. Parliament of Sri Lanka, Directory of Members, undated, accessed January 2018
 3. I Jayawardena. Living his dream…, Daily News, 30 September 2015, accessed November 2019
 4. U. Amarasinghe. A Promise to Deliver, Cover Story, BusinessToday.lk, September 2016, accessed November 2019
 5. B Dalima. Family members and politics – topic of discussion during Uva PC, www.newsfirst.lk, 22 September 2014, accessed November 2019
 6. H Fernando. Harin Fernando, 1 January 2019, accessed November 2019
 7. 7.0 7.1 Manthri.lk. Harin Fernando, undated, accessed January 2018
 8. Uva Provincial Council. [ https://web.archive.org/web/20190119062317/https://www.up.gov.lk/ website], undated, accessed January 2018
 9. D. Liyanage. No ban on single stick cigarette ban, Daily Mirror, 17 September 2017, accessed November 2018
 10. Sunday Times. Rajitha’s loose cigarettes go up in smoke, 16 September 2016, accessed November 2018
 11. 11.0 11.1 Mirror Business. ‘League of Multinational Corporates’ Launched, 01 October 2018, accessed March 2019
 12. Daily FT. MNC speak up, 01 October 2018, accessed March 2019