வீரக்கெட்டிய பொலிஸ் நிலையம்

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

இலங்கையில் புகையிலை மற்றும் மதுசாரப் பாவனையைக் கட்டுப்படுத்தும் முக்கிய கட்டமைப்பாகப் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம் காணப்படுகின்றது. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நால்வகையான அதிகாரம் பெற்ற அதிகாரிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் (ஏனையவர்கள்: பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள்).

பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு புகையிலைக் கம்பனி நன்கொடை வழங்கியமை

இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) 2014ம் ஆண்டு ஆண்டறிக்கைக்கு அமைவாக, A தர பொலிஸ் நிலையமான வீரக்கெட்டிய பொலிஸ் நிலையத்தினை அமைக்க நன்கொடை வழங்கியதாக குறிப்பிடப்பட்;டுள்ளது. வீரகெட்டிய இலங்கையின் தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது நகரமாகும், இது இலங்கையில் 2005 முதல் 2015 வரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த இடமாகும்.[1][2][3][4][5][6]

உரு 1: வீரக்கெட்டியவில் யு தரம் வாய்ந்த பொலிஸ் நிலையம் கட்டப்பட்டதாக இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை.[4]

இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) 2014ம் ஆண்டு ஆண்டறிக்கைக்கு அமைவாக,பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளின் பேரில் இந்த கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது மேலும் இது இலங்கை புகையிலைக் கம்பனியின் நிதியுதவியில் கட்டப்பட்ட மூன்றாவது பொலிஸ் நிலையம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வட மாகாணத்தில் அமைந்துள்ள மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்கள் அவ்வாறு CTC யின் நிதியுதவியில் கட்டப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது பொலிஸ் நிலையங்களாகும். வீரக்கெட்டிய பொலிஸ் நிலையம் CTC இலங்கையின் தென் பகுதியில் கட்டிய முதல் பொலிஸ் நிலையமாகும் (2018ம் ஆண்டு நிலவரப்படி).[6] மேலதிக தகவல்களுக்கு மீண்டும் திறக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்கள் என்ற பகுதியைப் பார்க்கவும். இலங்கை புகையிலைக் கம்பனியின் 2014ம் ஆண்டு ஆண்டறிக்கைக்கு அமைவாக, நகர்புற அபிவிருத்தி அதிகாரச் சபை மற்றும் இலங்கை இராணுவத்தினால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது.[5].

இலங்கை புகையிலைக் கம்பனியின் முதலீடு

2014ம் ஆண்டு பத்திரிக்கை செய்திக்கு அமைவாக,பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான நன்கொடையின் ஒரு பகுதியை இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாகியுமான பெலிசியோ பெராஸ் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். [1].

விளைவு

இவ்வாறு நன்கொடை வழங்கியமை தேசிய பத்திரிக்கைகளின் பிரதான செய்தியாக வெளியாகின. செய்தி பத்திரிக்கையான டெய்லி எப் டி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் நிதியுதவி வழங்கி செய்தி வெளியாகியிருந்தது, மேலும் அப்போதைய நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கை புகையிலைக் கம்பனியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான பெலிசியோ பெராஸ் மற்றும் சட்டம் மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் தினேஷ் தர்மதாச ஆகியோரும் படத்தில் காணப்பட்டனர்.[1][7]
உரு 2: இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாகியுமான பெலிசியோ பெராஸ் அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நன்கொடையை வழங்கினார்.[7]

Tobacco Unmasked வளங்கள்

குறிப்புகள்

மேற்கோள்கள்:
  1. 1.0 1.1 1.2 Daily FT. CTC assistance for new police station in Weeraketiya, 14 July 2014, accessed October 2018
  2. Ceylon Tobacco Company PLC. CTC Annual Report 2017 2018, accessed October 2018
  3. Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, accessed May 2017
  4. 4.0 4.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2015, 2016, accessed May 2017
  5. 5.0 5.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2014, 2015, accessed May 2017
  6. 6.0 6.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2013, 2014, accessed May 2017
  7. 7.0 7.1 Ministry of Defence Sri Lanka Website. CTC assists for the new police station in Weeraketiya accessed on 04 October 2018