விவசாய அமைச்சர்கள் மீதான தாக்கம்

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

விவசாயமானது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் போசனை என்பவற்றில் மிகமுக்கிய பங்கை வகிக்கின்றது. இலங்கையில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் செயற்படும் திணைக்களம் மற்றும் அதிகார சபைகள் விவசாய அமைச்சின் பொறுப்பில் இயங்குபவையாகும். அவர்களின் இலக்காக, “உணவு பாதுகாப்பு மற்றும் தேசிய செழிப்புக்கான துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க விவசாயத் துறை” அமைகின்றது. விவசாய அமைச்சர் ஆனவர், இலங்கையில் விவசாய நவடிக்கைகளில் கொள்கை மற்றும் நடைமுறைப்டுத்துதலுடன் சம்பந்தப்பட்ட விடங்களில் இறுதி முடிவுகளை எடுப்பவராக உள்ளார்.[1]

இலங்கை புகையிலைக் கம்பனியானது(CTC) இலங்கை விவசாய அமைச்சர்களை, அவர்கள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி மற்றும் அரசாங்கம் போன்றவற்றை கவனத்தில்க் கொள்ளாது இலக்கு வைத்துள்ளனர். அவ்வாறான தாக்கங்கள் தொடர்பான உதாரணங்கள் கிழே குறிப்பிடப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை

 • அரசாங்கம் - இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6வது பாராளுமன்றம்[2]
 • அரச தலைவர் – மஹிந்த ராஜபக்ஷ[3]
 • ஆளும் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு[2]

அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க

அரசியல் கட்சி - மக்கள் விடுதலை முன்னனி[4]

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்;தப்பட்ட பத்தாயிரம் குளங்கள் புணரமைப்பிற்காக விவசாய பிரதேசங்களில் குளங்களை புணரமைப்பதற்கென இலங்கை புகையிலைக் கம்பனியானது அனுசரணை வழங்கியுள்ளது (உரு:1).[5][6]

உரு1: 2004ம் ஆண்டு சிலிவத்கமவில் குளம் புணரமைக்கப்பட்ட போது திறக்கப்ட்ட நினைவு பலகை. இலங்கை புகையிலைக் கம்பனியின் முழு நிதியுதவியுடனும் விவசாயிகளின் உழைப்பினாலும் இக் குளம் புணரமைக்கப்பட்டது. நினைவு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களாக: அனுரகுமார திசாநாயக்க (விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்), ஜனக பண்டார தென்னகோன் (மாகாண அமைச்சர்), மற்றும் சுஜாதா அலஹாகோன் (நாடாளுமன்ற உறுப்பினர்).)

அமைச்சர் ஹேமகுமார நானயக்கார

அரசியல் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி[7]

விவசாய அமைச்சின் “அபி வவமு ரட நகமு” என்ற விவசாய அபிவிருத்தி திட்டத்திற்கு இலங்கை புகையிலைக் கம்பனி நிதிப் பங்களிப்பு செய்துள்ளது (உரு:2).[5][6]

உரு2: “மவுபிம சுயன் போஷன பதனம” என்ற அமைப்பினால் பத்தேகம தெற்கு திக்கபிட்டடிய என்ற பிரதேசத்தில் வயல் நிலத்தில் காட்சிப்படுத்தப்டடிருந்த பதாகை. குறித்த பதாகைக்கு அமைய, இலங்கை புகையிலைக் கம்பனியின் நிதியுதவியில் “புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி வயல் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “ அபி வவமு ரட நகமு” என்ற விவசாய அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்தவென விவசாய அமைச்சர் ஹேமகுமார திசாநாயக்கவின் தலமையில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

2010ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை

 • அரசாங்கம் - இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது பாராளுமன்றம்[2]
 • அரச தலைவர் – மஹிந்த ராஜபக்[3]
 • ஆளும் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு[2]

அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன

அரசியல் கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு[8]

நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் (SADP) என்பது இலங்கை புகையிலைக் கம்பனியினால் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். குறித்த திட்டத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சர் கீழ்வருமாறு பங்களிப்பு செய்துள்ளார்:

 • இலங்கை புகையிலைக் கம்பனியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்றல்.[9]
 • SADP திட்டத்தின் பயனாளிகள் குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில் கள விஜயம் மேற்கொள்ளல்(உரு3)[10][11]

இருப்பினும், புகையிலை உற்பத்தியை தடை செய்யப்போவதாகவும், புகையிலை உற்பத்தியாளர்களை உணவு பயிர் செய்கைக்காக ஊக்குவிக்கப்போவதாகவும் 2011ம் ஆண்டு அமைச்சு பொறுப்பேற்ற ஆரம்பகாலத்தில் குறிப்பிட்டிருந்தார்.[12]

உரு3: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன SADP திட்டத்தை பார்வையிட கள விஜயம் மேற்கொண்டதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருந்தது.[10]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:
 1. Ministry of Agriculture. Website, 25 March 2015, accessed April 2017
 2. 2.0 2.1 2.2 2.3 Sri Lanka Parliament. Duration of Parliament, 08 September 2015, accessed March 2017
 3. 3.0 3.1 Sri Lanka Parliament. Heads of State, 08 September 2015, accessed March 2017
 4. JVP Sri Lanka. Website, undated, accessed April 2017
 5. 5.0 5.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2009, 2010
 6. 6.0 6.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2010, 2011
 7. Parliament of Sri Lanka. Hon. Hemakumara Nanayakkara, undated, accessed May 2017
 8. Parliament of Sri Lanka. Hon. Mahinda Yapa Abeywardena, undated, accessed May 2017
 9. Daily Mirror (Sri Lanka). CTC rewards farming excellence at Farmer Appreciation Awards, 31 October 2014, accessed May 2017
 10. 10.0 10.1 Daily Mirror. Agriculture Minister Visits CTC empowered Weligama villagers, 17 May 2013
 11. Daily News. Agri Minister visits SADP, 17 May 2013, accessed May 2017
 12. ColomboPage. Sri Lanka’s Agriculture Ministry to promote food crop cultivation among tobacco farmers, 18 January 2011, accessed May 2017