ரொமேஷ் த சில்வா

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

ரொமேஷ் த சில்வா “ஜனாதிபதி ஆலோசகர் சட்டம் கற்றவர்” . பொதுவாக இது ஜனாதிபதியின் ஆலோசகர் என்று அழைக்கப்படுகின்றது. இது பிரிட்டிஷ் குயின்ஸ் கவுன்சில் நியமனங்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள வழக்கறிஞர்களுக்கான உயர் பதவியாகும். ஜனாதிபதி ஆலோசகர் நியமனமானது தொழில்சார் புகழ் மற்றும் நடத்தை அடிப்படையில் ஜனாதிபதியினால் வழங்கப்படும் நியமனமாகும்.[1][2]

உரு 1: ரொமேஷ் த சில்வா சட்ட ஆணைக்குழுவின் தலைவரா ஜனாதிபதியால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலையில் நியமிக்கப்பட்டார். [1]

ரொமேஷ் த சில்வா 2015ம் ஆண்டு தொடக்கம் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுகிறார். நாட்டின் சட்டத்தையும் சட்ட கல்வி முறையையும் மறு ஆய்வு செய்து சீர்திருத்தும் அதிகாரச் சபையாக சட்ட ஆணைக்குழு செயற்படுகின்றது.[1][3]

ரொமேஷ் த சில்வா இலங்கை நடுவர் குழு மற்றும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.[4] சில ஊடக அறிக்கைகளின் படி அரசாங்கம் 2015 மே மாதம் ரொமேஷ் த சில்வாவை ஐக்கிய ராஜ்;ஜியத்திற்கான உயர் ஸ்தானிகராக நியமித்தது. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அதனை நிராகரித்துவிட்டார்.[5][6]

ஊடகங்களால் “சர்ச்சைக்குரிய வழக்கு” என்று குறிப்பிடப்படும் சில தேசிய அளவிலான வழக்குகளில் ரொமேஷ் த சில்வா சம்பந்தப்பட்டுள்ளார்.

  • 2006ம் ஆண்டு சண்டே லீடர் செய்தித்தாள் மற்றும் அதன் தலைவர் லசந்த விக்ரமதுங்க தொடர்பான வழக்கு (2009 ஆண்டு அவர் கொலை செய்யப்பட்டார்), விமானம் வாங்கும் ஒப்பந்தம் குறித்த தொடர்ச்சியான செய்தி கட்டுரை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் (கோத்தபாய ராஜபக்ஷ) தாக்கல் செய்த மனுவில்.[7]
  • 2013ம் ஆண்டில், இலங்கை தலைமை நீதிபதி பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில் ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[8]
  • 2015ம் ஆண்டில், முன்னால் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ நிதி குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[9][10]
  • 2016ம் ஆண்டில், தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கழகத்தின் (SAITM) சார்பில், SAITM ற்கு எதிரான மனுவிற்கு எதிராக, உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஆஜரானார்.[11][12][13]
  • 2017ம் ஆண்டில் , முன்னால் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜரானார்.[14][15]

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

2017ம் ஆண்டு பொதுவாகக் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் , ரொமேஷ் த சில்வா இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) சார்பில் மூன்று வழக்குகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்:

உருவப்பட சுகாதார எச்சரிக்கைக்கு எதிராக: CTC மற்றும் சுகாதார அமைச்சர்

2013ம் ஆண்டு, சிகரட் பெட்டிகளில் உருவப்பட சுகாதார எச்சரிக்கை தொடர்பில் இலங்கை புகையிலைக் கம்பனியானது(CTC) அப்போதைய சுகாதார அமைச்சர் மைத்திரிப்பால சிரிசேனவிற்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்தது. 80ம% உருவப்பட சுகாதார எச்சரிக்கைக்கு எதிராக சவால் விடுத்தது.[16][17] பின்னர் ரொமேஷ் த சில்வாவிற்குப் பதிலாக பைசல் முஸ்தபா நியமிக்கப்பட்டார்.[18][19] மேலதிக விபரங்களுக்கு, [[சிகரட் பெட்டிகளில் உருவப்பட சுகாதார எச்சரிக்கைக்கு சவால் விடுத்து CTC வழக்கு தாக்கல்]] என்ற பக்கத்தை பார்வையிடவும்.

புகைத்தலினால் ஏற்பட்ட மரணம் தொடர்பான வழக்கு: பீ. லலிதா பத்மினி பெர்னாhன்டோ மற்றும் CTC

2013ம் ஆண்டு, புகைப்பிடித்தலினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு மரணித்த ஒருவரின் மனைவி இலங்கை புகையிலைக் கம்பனி மீது சட்ட நடவடிக்கை எடுத்தார். இவ்வழக்கில் CTC சார்பில் ரொமேஷ் த சில்வா வாதிட்டார். .[20]

போலி காசோலைகள் தொடர்பான வழக்கு: கொமர்ஷல் வங்கி மற்றும் CTC

2008ம் ஆண்டில், கொமர்ஷல் வங்கி போலி காசோலைகள் தொடர்பான வழக்கில் CTC சார்பில் வாதிட்டார். [21]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

  1. 1.0 1.1 1.2 OMLANKA: Sri Lanka News Website. Veteran lawyer Romesh Chairman of Law Commission, 26 March 2015, accessed May 2017
  2. The Nation. Appointment of President’s Counsel, 28 March 2015, accessed May 2017
  3. The Law Commission of Sri Lanka. The Commission, 2017, accessed May 2017
  4. Sri Lanka National Arbitration Centre. Board of Governors, 2017, accessed May 2017
  5. Lanka News Web. Lawyer Romesh De Silva has been appointed as the SL High commissioner to the UK, 22 May 2015, accessed May 2017
  6. Sunday Observer. Behind Closed Doors: Of faith and fear and that carom board extravagance, 31 May 2015, accessed May 2017
  7. L Wickrematunge. Apology To Gotabaya By The Sunday Leader, Colombo Telegraph, 8 March 2015, accessed May 2017
  8. Colombo Telegraph. Romesh de Silva, Jayampathi Wickramaratne, MA Sumanthiran And JC Weliamuna Receive Threatening Letters, 18 January 2013, accessed May 2017
  9. Asian Tribune. Supreme Court today issued an interim order staying the arrest of Gotabaya Rajapaksa, 14 May 2015, accessed May 2017
  10. Ada Lakderana. Judge refuses to hear Gota’s petition, 13 May 2015, accessed May 2017
  11. SS Selvanayagam. Court of Appeal to hear petition of SAITM students on 12 October, Daily FT, 7 July 2016, accessed May 2017
  12. D Manu. Rajapaksa regime’s SAITM sin puts joint opposition in a spin, The Sunday Times: Columns, 12 February 2017, accessed May 2017
  13. W Ramanayake. SLMC non-registration of SAITM grads: Two cases in court, The Sunday Times, 10 July 2016, accessed May 2017
  14. The Island. Romesh de Silva, PC leads Mahendran’s team of lawyers: Bond scam probe, 15 March 2017, accessed May 2017
  15. M Gunasekara, R Katugampola. Gov. Mahendran gave arbitrary instructions to raise interest rate while auction was on, says witness, Sunday Times (Sri Lanka), 26 March 2017, accessed May 2017
  16. Court of Appeal Document IN THE COURT OF APPEAL OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA, 22 February 2013, accessed May 2017
  17. The Sunday Times. SC gives CTC time to implement health warnings on cigarette packs, 03 March 2013, accessed May 2017
  18. Lanka News Web. Chief Justice to shows Ceylon Tobacco how to win an appeal, Exclusive, 06 August 2013, accessed May 2017
  19. DailyMirror (Sri Lanka). Pictorial warnings to cover 50-60% of cigarette packs, 13 May 2014, accessed May 2017
  20. S Samarasinghe. Tobacco faces smoking death case, 02 November 2008, accessed May 2017
  21. Sri Lanka Law Reports. 2010(2) SRI L.R. p62-64, 21 July 2008, accessed May 2017