ரவி கருணநாயக்க

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

ரவி கருணநாயக்க (1963 இல் பிறந்தார்) தனது பள்ளிக் கல்வியை கொலுப்பிட்டி சென் தாமஸ் பாடசாலை மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார்.[1]அவர் 1994 ஆம் ஆண்டு முதல் கொழும்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியைப் (UNP) பிரதிநிதித்துவப்படுத்தபவராகவும் உள்ளார்.[2]

உரு 1: ரவி கருணநாயக்க. மூலம்: Daily News[3]

அரசியலில் வகித்த பதவிகள்

 • மின், எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் - டிசம்பர் 2018 முதல் நவம்பர் 2019 வரை [4]
 • வெளிவிவகார அமைச்சர் - மே 2017 முதல் ஆகஸ்ட் 2017 வரை [5]
 • நிதி அமைச்சர் -2015 முதல் 2017 வரை [6]
 • வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரவை அமைச்சர் -2001 முதல் 2004 வரை[7]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்தமை சந்தித்தமை

மார்ச் 2017 இல், அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், நிதியமைச்சர் ரவி கருணநாயக்கவைச் சந்தித்து, அரசாங்கத்தின் புகையிலை பயிர்ச்செய்கை ஒழிப்பு திட்டத்திற்கு எதிராக முறையிட்டனர்.[8] மேலும் விவரங்களுக்கு அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம் என்ற பக்கத்தைப் பார்வையிடவும்.

உரு 2: அனைத்து இலங்கை சிகரெட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவை சந்திக்கிறார்கள் [8]

இலங்கையில் புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் செயற்பாட்டிற்கு, இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) பி.எல்.சி (CTC) இலிருந்து 500 மில்லியன் இலங்கை ரூபாய் பணம் பெறுவதற்கான கோரிக்கையை முன்மொழிந்தமை

அமைச்சர் கருணநாயக்க, 2017 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கைத் திட்டங்களைப் பற்றிய உரை வழங்கியபோது, இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) பி.எல்.சி (CTC) இலிருந்து 500 மில்லியன் இலங்கை ரூபாய் "நன்கொடையை " ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு செயலணியிற்கு (PTFDP ) வழங்குவதற்கான கோரிக்கையை முன்மொழிந்தார். ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு செயலணியானது, ஜனாதிபதி செயலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மற்றும் ஜனாதிபதி நிதியுதவி செயற்திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படுகிறது, இது இலங்கையில் புகையிலை கட்டுப்பாட்டில் முக்கிய பங்குதாரராக உள்ளது. சிலோன் புகையிலை கம்பனி பி.எல்.சி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் (BAT) கம்பனியின் துணை நிறுவனமாகும், இது இலங்கையில் சிகரெட்டுகளை உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்யும் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம் (FCTC) கட்டுரை 5.3 இனை நேரடியாக மீறுவதால் இத் திட்டம் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டது.[9][10]மேலதிக விபரங்களுக்கு FCTC கட்டுரை 13: புகையிலை விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் அனுசரனை என்ற பக்கத்தினை பார்வையிடவும்.

Tobacco Unmasked வளங்கள்

Notes

 1. Sunday Observer. 'We were made for each other', 09 March 2008, Accessed June 2020
 2. Parliament of Sri Lanka. Karunananyake Undated, Accessed April 2019
 3. Daily News. Making SL self sufficient in Sugar, 20 October 2019, Accessed August 2019
 4. Ministry of power energy and Business Development. Website, Undated, Accessed on April 2019
 5. Ministry of Foreign Affairs. Website Undated, Accessed on April 2019
 6. Ministry of Finance. Website, Undated, Accessed on April 2019
 7. Wikiwand. Ravi Karunananayake Undated, Accessed on April 2019
 8. 8.0 8.1 Daily FT. All Ceylon Cigarette Tobacco Barn Owners take plight to Ravi K 31 March 2017, Accessed December 2018
 9. K. Hettiarachchi. Budget under fire for offer to CTC, The Sunday Times, 13 November 2016, Accessed on April 2019
 10. Department of Government Information. Budget speech 2017 by Finance Minister Ravi Karunanayake, 11 November 2016, Accessed on April 2019