புகையிலை வரிக்கு எதிரான கட்டுரைகளுக்கு தொழில்துறை அனுசரணை வழங்கியதாக குற்றச்சாட்டு

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

இலங்கையில் ஒரு தடவையில் அதிகரிக்கப்பட்ட சிகரட் விலையானது 2016ம் ஆண்டின் இறுதி காலாண்டில் பதிவானது. ஒக்டோபரில் கலால் வரி அதிகரிப்பு மற்றும் நவம்பரில் 15% அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி காரணமாகவே இவ் விலை அதிகரிப்பு நிகழ்ந்தது.[1] வரி அதிகரிப்பிற்கு எதிராக புகையிலைத் தொழில்துறையானது பல்வேறுவாதங்களை முன்வைத்தது. (புகையிலை வரி விதிப்பு தொடர்பான மாற்று உண்மைகளை அம்பலப்படுத்துதல் என்ற பக்கத்தை பார்க்கவும்)

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனம் என்பதோடு பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் ஆகும். 2017ம் ஆண்டின் நிலவரப்படி இலங்கை புகையிலைக் கம்பனியின் பங்குகளில் 84% பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனிக்கு உரித்தானவை என்பதோடு மீதமுள்ளவை தனியார் மற்றும் பெரு நிறுவன முதலீட்டாளர்களுக்குச் சொந்தமானவை.[2]

நிதியுதவி வழங்கிய செய்தி கட்டுரைகள் தொடர்பான சுகாதார அமைச்சரின் குற்றச்சாட்டு

2017 நவம்பர் 1ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சரும் அமைச்சரவை ஊடக பேச்சாளருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள், புகையிலை கம்பனியானது TriAd Lanka Ltd.எனப்படும் இலங்கையின் விளம்பர நிறுவனம் வழியாக ஊடக செய்தி கட்டுரைகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டினார். அமைச்சரின் கூற்றுப்படி, புகையிலை வரியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்து செய்தி கட்டுரையை வெளியிடுவதற்கு இலங்கை ரூபா 150000 அச்சு மற்றும் வலைதள செய்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (உரு 1). செய்தி கட்டுரைக்கு அமைவா இது, அரசாங்க வருவாயை அதிகரிக்கும் ஒரு முறை மட்டுமே என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உரு 1: செய்தி கட்டுரைக்காக இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) பணம் வழங்கியமை தொடர்பாக இலங்கை மிரரில் வெளியான செய்தி.[3]
இவ் விவகாரம் தொடர்பில் அமைச்சரின் உரையின் ஒரு பகுதி பின்வருமாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது:[4]
“இலங்கை மிரரில்” சில தினங்களுக்கு முன்னர் மோசடிமிக்க புகையிலை வரி அதிகரிப்பு என்ற தலைப்பில் படங்களுடன் செய்தியொன்று வெளியாகியிருந்தது.அவர்கள் கூறுகிறார்கள், அவர்களால் அரசாங்கத்தின் வரி அதிகரித்தது என்று. “நான், அதிகரித்த வரியின் காரணத்தினாலேயே அரசாங்கத்தின் வரி அதிகரித்தது”. அந்த முழு கட்டுரையிலும் “நாங்கள் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க பாரிய புரளியை செய்துள்ளோம்” என்று கூறுகிறார்கள். “சிகரட் குச்சிகள் ஒரு பில்லியன் குறைந்துள்ளது” என்பதை ஒரு வரியில் கூறியுள்ளனர். பலர் அந்த ஒரு வரியை வாசிக்காமல் தவறவிடலாம். ஏனென்றால் அவர்கள் அறிக்கையில் கூறியது பொய் என அவர்களால் கூற முடியாது
“நான் இதை விசாரித்தேன் சரியான தலைப்புடனான உண்மையான செய்தி வேறொறு வலைத்தளத்தில் இருந்தது. பின்னர் நான் அந்த வலைத்தளங்களை இயக்கும் நபருடன் பேசினேன். எனக்கு அவரை தெரியும். எனவே நான் நகைச்சுவையாக புகையிலைக் கம்பனி உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தது? இந்த கட்டுரையை வெளியிட” என்று கேட்டேன். அவருடைய பதில் “ எனக்கு தெரியாது அது இது…” என்றார். பின்னர் நான் கண்டுபிடித்தேன். பின்னர் நான் இளைஞர்களுக்காக வெளிவரும் அப்பில் என அறியப்படும் பத்திரிக்கை நிறுவனத்தை தொடர்புகொண்டேன். எனக்கு அங்கு ஒரு நண்பர் உள்ளார். அவர்களுக்கு இது போன்ற விளம்பரம் கிடைத்ததா? என கேட்டேன். அவர்கள் ‘ விளம்பரம் எங்களுக்கு கிடைத்தது’ என்றார்கள்.TriAd ல் இருந்து திலித் ஜெயவீர எங்களை தொடர்பு கொண்டார். “ புகையிலைக் கம்பனியானது இதை TriAd நிறுவனத்திற்கு விளம்பரமாக வழங்கியுள்ளது. ஆனால் இது ஒரு விளம்பரம் இல்லை;. செய்தி கட்டுரை. இதை வெளியிடுவதற்காக எங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது” என்றார்கள்”.
பின்னர் நான் லங்கா நியுஸ் வலைத்தள செய்தி நிறுவனத்தை தொடர்புகொண்டேன். வேறொரு விடயம் தொடர்பில் கதைப்பதற்காக அவர் என்னை தொடர்புகொண்டார். நான் அவரிடம் கேட்டேன். இது போன்ற செய்திகள் உங்களுக்கு கிடைத்ததா? என. “ஆம், கிடைத்தது. அதனை வெளியிடுவதற்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது” என சொன்னார்கள்.”

கம்பனியின் பிரதிபலிப்பு

2017 நவம்பர் 10ம் திகதி வரையில் அமைச்சரின் கூற்று தொடர்பில் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) எந்த வித அறிக்கையும் வெளியிடவில்லை.

Sri Lanka Mirror இது ஒரு நகைச்சுவை என பதிலளித்தது.[4]

அமைச்சரின் கூற்றுக்கு அவர்கள் பதிலளிக்காமையினால்,புகையிலைத் தொழில்துறை அவதான நிலையமானது Sunday Apple, Lanka News Web மற்றும் TriAd Lanka Ltd.ஆகிய செய்தி நிறுவனங்களை தொடர்புகொண்டது. 2018 ஜூன் மாதம் வரையில் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை.

எமது கேள்விகளுக்கு பதிலளித்த TriAd Lanka Ltd. நிறுவனத்தின் பணிப்பாளர் சர்வா அமரசேகர தங்கள் நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டு தவறானது என குறிப்பிட்டார்.

இந்த பக்கமானது சண்டே அப்பில் மற்றும் லங்கா நிவ்ஸ் வெப் ஆகிய நிறுவனங்கள் பதிலளித்ததன் பின்னர் புதுப்பிக்கப்படும்.

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

மேலதிக வளங்கள்

குறிப்புகள்

மேற்கோள்கள்
  1. Daily Mirror. Cigarette price to increase up to Rs. 55, 23 October 2016, accessed March 2017
  2. British American Tobacco. Annual Report 2016, 2017, accessed November 2017
  3. Sri Lanka Mirror. දුම්වැටි බද්ද බදු ගැසීමේ ප්‍රෝඩාවක්? (Increase of tobacco tax a hoax?), 28 September 2017, accessed November 2017
  4. 4.0 4.1 Sri Lanka Mirror. Joke from Rajitha for SLM Anniversary (Video), 01st November 2017, accessed November 2017