புகையிலை தொழில்துறையின் தர்க்கம் - பீடி பாவனை அதிகரிக்கின்றது

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) 2003ம் ஆண்டிற்கு பின்னர் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில் இலங்கையில் பீடி பாவனை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு காரணம், பீடி விலையோடு ஒப்பிடும் போது சிகரட் விலையானது கட்டுப்பாட்டு விலையயை விட அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது[1][2][3] 2015ம் ஆண்டு CTC யின் வருடாந்த அறிக்கையில் 2007ம் ஆண்டிற்குப் பிறகு புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம் பீடி பாவனையானது அதிகரித்துள்ளதாக பின்வரும் வரைபடத்தின் ஊடாக காண்பிக்கப்பட்டுள்ளது (உரு 1) இங்கு அவர்கள் ஆய்வு செய்த முறை மற்றும் ஆய்விற்காக பெற்றுக்கொண்ட தகவல்கள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இந்த உருவப்படத்திற்கு அமைய பீடி கொள்வனவானது இரண்டு மடங்கினால் அதிகரித்து (2007 தொடக்கம் 2009) பின்னர் அது 40 தொடக்கம் 50 வீதமான அளவில் தொடர்ச்சியாக இருப்பதோடு சிகரட் பாவனையானது 60 வீதத்தினையும்[4][5][6]விட குறைவடைய காரணமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களும் சிகரட் கம்பனியின் தர்க்கத்தை பறைசாற்றும் வகையில் சிகரட் விலை அதிகரிப்பினால் புகைத்தலானது குறைவடையாமல் பீடி புகைக்கும் அளவு அதிகரித்துள்ளதாக செய்திகளை வெளியிட்டது. உரு 1: 2007ம் ஆண்டிற்குப் பிறகு புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம் பீடி பாவனையானது அதிகரித்துள்ளதாக பின்வரும் வரைபடத்தின் ஊடாக காண்பிக்கப்பட்டுள்ளது

800px-Beedi1.jpg

ஒன்றிற்கொன்று முறனான சாட்சிகள்

எவ்வாறாயினும், அதே காலப்பகுதியில் மேற் குறிப்பிட்ட விடயங்களுக்கு முறனான விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது (உரு 1). அந்த ஆய்வானது தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ( Steps ஆய்வு மற்றும் ADIC Spot ஆய்வு) மற்றும் நகர மற்றும் கிராம மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட மாவட்ட ரீதியிலான ஆய்வுகள் ஆகும்.

சிகரட் மற்றும் பீடி விகிதாசார பரவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு முடிவு

Tobacco research.jpg


இத் தரவுகளுக்கு அமைய புகைப்பழக்கம் உள்ளவர்களில் ஆகக் குறைந்தது 82.4 வீதமானவர்கள் சிகரட் புகைக்கின்றனர் என (Steps survey) குறிப்பிட்டுள்ளது அத்தோடு பீடி பாவனை தொடர்பில் Steps survey விசேடமாக குறிப்பிடுகின்றது. 15 தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்டவர்களிடம் கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய குறைந்த பீடி பாவனையை சுட்டிக்காட்டுகின்றது (30.8%) மொனராகலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய ஆய்வாளர், சிகரட் புகைப்பவர்கள் புகைக்காதவர்கள் தொடர்பில் கருத்திற்கொள்ளாது, பீடி பாவனையில் ஈடுபடுவோரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைய பீடி பாவனையானது 23.5 என காட்டப்பட்டுள்ளதோடு அந்த முடிவானது இலங்கை புகையிலைக் கம்பனியினின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவிலும் பார்க்க ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது. 

மேலும், 2014ம் ஆண்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் இலங்கையில் ஆறு மாவட்டங்களில் உள்ள பீடி உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைவாக பீடி உற்பத்தி மற்றும் பாவனையானது கடந்த வருடங்களில் குறைவடைந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


TobaccoUnmasked வள ஆதாரங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்: இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)

Tobacco Company.com/group/sites/sri_9pmjn9.nsf/vwPagesWebLive/DO9PMKN2/$FILE/medMDA7UEUE.pdf?openelement Annual Report 2015, 2016, accessed March 2017</ref>[7][8]

Who’s winning the battle against tobacco?, DailyFT, 26 May 2015, accessed March 2017</ref>[9][10]
  1. Ceylon Tobacco Company PLC. Annual Report 2015, 2016, accessed March 2017
  2. Ceylon Tobacco Company. Annual Report 2014, 2015, accessed March 2017
  3. Ceylon Tobacco Company. Annual Report 2013, 2014, accessed March 2017
  4. A. Hemmathagama. Who’s winning the battle against tobacco?, DailyFT, 26 May 2015, accessed March 2017
  5. S. Dambawinna. Beedi, cheaper alternative for the ‘poor man’, The Sunday Times , 27 July 2014, accessed March 2017
  6. MirrorBusiness. Tobacco use growing despite dip in cigarette sales: CTC, 10 March 2015, accessed March 2017
  7. இலங்கை புகையிலைக் கம்பனி . Annual Report 2014, 2015, accessed March 2017
  8. இலங்கை புகையிலைக் கம்பனி Annual Report 2013, 2014, accessed March 2017
  9. S. Dambawinna. Beedi, cheaper alternative for the ‘poor man’, The Sunday Times , 27 July 2014, accessed March 2017
  10. MirrorBusiness. Tobacco use growing despite dip in cigarette sales: CTC, 10 March 2015, accessed March 2017