பியசேன கமகே

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

1949ம் ஆண்டு பிறந்த இஹல மேதகம பியசேன கமகே இலங்கை அரசியல்வாதியாவார். காலி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1989 முதல் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் 25 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்தார், பின்னர் இது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை உருவாக்கியது, இது இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும் மற்றும் 2010 முதல் 2015 வரை ஆளும் அரசியல் கட்சி கூட்டணியாகும். கமகே, காலி மாவட்டத்திற்கான முன்னாள் SLFP தலைவராகவும், SLFP இன் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தார்.[1][2]இரட்டை குடியுரிமை காரணமாக கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோதலில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், 2017 நவம்பரில் அவர் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.[3][4]

2020 வரையில் பாராளுமன்றத்தில் பதவி வகித்த கமகே, சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகய] என்ற கட்சிக்கு ஆதரவு வழங்கினார். சமகி ஜனபல வேகய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற காட்சியாகும்.[5][2]

உரு 1: பிசசேன கமகே.[2]

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

 • பாராளுமன்ற உறுப்பினர் – 1989 முதல் 2015 வரை மற்றும் 2017 முதல் தற்போது வரை.[1]
 • அரசியலமைப்பு விவகாரங்கள் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு துணை அமைச்சர் – 2000 முதல் 2001 வரை.[6]
 • திறன் மேம்பாட்டு தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சரவை அமைச்சர் – ஏப்ரல் 2004 முதல் நவம்பர் 2005 வரை[7]
 • தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அமைச்சரவை அமைச்சர் – நவம்பர் 2005 முதல் ஏப்ரல் 2010 வரை.[8]
 • சுதேச மருத்துவ அமைச்சரவை அமைச்சர் – ஏப்ரல் 2010 முதல் நவம்பர் 2010 வரை.[9]
 • தேசிய வளத்துறை சிரேஷ்ட அமைச்சர் – நவம்பர் 2010 முதல் ஜனவரி 2015 வரை.[10]
 • சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் – டிசம்பர் 2017 முதல் பெப்ரவரி 2018 வரை.[11][12]
 • திட்ட மேலாண்மை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் – பெப்ரவரி 2018 முதல் மே 2018 வரை.[13][14]
 • தேசிய இளைஞர் விவகாரங்கள், திட்ட மேலாண்மை மற்றும் தெற்கு மேம்பாட்டு அமைச்சர் – மே 2018 முதல் ஒக்டோபர் 2018 வரை[14]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

இலங்கை புகையிலை கம்பனியின்(CTC) நிக்ழ்வில் பங்கேற்றமை

2005 ஆம் ஆண்டில், காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சராக பியசேன கமகே மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இலங்கையின் தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய நரகமான ஹிக்கடுவயின் ககோவத்தவில் 80 ற்கும் மேம்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்டனர். 2004ம் ஆண்மு இந்தியப் பெருங்கடலில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமி நிவாரணத் திட்டமாக இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) ஊழியர்களுடன் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT) இந்த வீட்டு வசதி திட்டத்திற்கு நிதியுதவி அளித்ததாக த ஐலன்ட் செய்தி தாள் செய்தி வெளியிட்டது.[15]இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது இலங்கையில் சிகரட் உற்பத்;தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனம் என்பதோடு பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் ஆகும்.

2015 இலங்கை புகையிலைக் கம்பனியின் ஆண்டறிக்கைக்கு அமைய (பக்கம் 92) 2005 இல் தொடங்கப்பட்ட அவர்களின் சமூக முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக சுனாமி வீட்டு புனரமைப்பு – தெற்கு என்று குறிப்பிடுகின்றது (உரு2).[16]
உரு 2: “சுனாமி வீட்டு புனரமைப்பு - தெற்கு” திட்டம் தொடர்பில் இலங்கை புகையிலைக் கம்பனியின் 2015ம் ஆண்டு அறிக்றையில் ஒரு பகுதி. .[16]

Tobacco Unmasked வளங்கள்

Other relevant TobaccoUnmasked pages:

குறிப்புகள்

 1. 1.0 1.1 Parliament of Sri Lanka. Directory of Past Members, 2020, accessed July 2020
 2. 2.0 2.1 2.2 Piyasena Gamage. Piyasena Gamage, Facebook, 2020, accessed July 2020
 3. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. PART I: SECTION (I) — GENERAL Government Notifications, 19 August 2015, accessed July 2020
 4. Daily News. Piyasena Gamage sworn in as Galle district MP, 10 November 2017, accessed July 2020
 5. Manthri.lk. https://web.archive.org/web/20200722154933/http://www.manthri.lk/en/politicians/piyasena-gamage Piyasena Gamage], 2020, accessed July 2020
 6. Priu.gov.lk website. 35 Deputy Ministers, 04 November 2000, accessed July 2020
 7. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments, &c., by the President, 10 April 2004, accessed July 2020
 8. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments & c., by the President, 23 November 2005, accessed July 2020
 9. Daily mirror (Online). New Cabinet sworn in, 23 April 2010, accessed July 2020
 10. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 22 November 2010, accessed July 2020
 11. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 15 January 2018, accessed July 2020
 12. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 14 March 2018, accessed July 2020
 13. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 14 March 2018, accessed July 2020
 14. 14.0 14.1 The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 02 May 2018, accessed July 2020
 15. The Island. CTC housing project- new start for tsunami victims, 06 January 2006, accessed July 2020
 16. 16.0 16.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2015, 2016, accessed July 2020