பாதுகாப்பு அமைச்சின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

புகையிலைத் தொழில்துறையினரினால் தந்திரோபாய உத்திகள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்த தனி நபர்கள் தொடர்பாக இப்பக்கம் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைப் பார்வையிட நபர்களின் பெயர்கள் அல்லது இணைப்புகளை அழுத்துக.

வேறு நபர்கள் பற்றிய தகவல்கள், வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் போது இப்பக்கம் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும். இறுதியாக 2019 ஜூன் மாதம் புதுப்பிக்கப்பட்டது.

பின்னணி

பாதுகாப்பு அமைச்சானது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி , பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பாதுகாப்புச் செயல்களுக்குப் பொறுப்பான அமைச்சாகும்.[1]

உரு 1: பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளம்


பிரதான அலுவலர் மற்றும் இலங்கை இராணுவ தளபதி டெனிஸ் பெரேரா

டெனிஸ் பெரேரா இலங்கை இராணுவத்தில் 32 வருடங்கள் பணியாற்றினார், அதில் அவர் தலைமை நிர்வாகி மற்றும் இராணுவ தளபதி போன்ற உயரியப் பதவிகளை வகித்தார். இவர் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராவார். [2][3]

புகையிலைத் தொழில்துறையுடனான தொடர்பு

இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் இலங்கையின் ஏகபோக சிகரட் உற்பத்தியாளருமான இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) பணிப்பாளர் சபையில் 16 வருடங்களாக (1986 - 2002) அங்கத்தவராகச் செயற்பட்டதோடு 5 (1998 - 2002) வருடங்கள் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.[4][5]

மேலதிக தகவல்களுக்கு டெனிஸ் பெரேரா என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ

கோத்தபாய ராஜபக்ஷ 1971 தொடக்கம் 1992 வரை இலங்கை இராணுவத்தில் பணியாற்றியதோடு, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் இராணுவத்தில் உயர் பதவிகளையும் வகித்தார். 1991 மற்றும் 1992ம் ஆண்டுகளில் அவர் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை தளபதியாகவும் இருந்துள்ளார். 2005 நவம்பர் மாதம் அவர் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டதோடு 2015ம் ஆண்டு வரை அப்பதவியிலிருந்தார்.


புகையிலைத் தொழில்துறையுடனான தொடர்பு

  • அனுசரணைகளைப் பெற்றுக்கொண்டமை
கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை புகையிலைக் கம்பனியில்(CTC) இருந்து பின்வரும் அனுசரணைகளைப் பெற்றுள்ளார்:
  • இலங்கை புகையிலைக் கம்பனியின் நிகழ்வில் பங்கேற்றமை
இலங்கை புகையிலைக் கம்பனியிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியுதவியில் கிரிஹண்டு சேயவில் யாத்திரிகர்களுக்காக ஓய்வு மண்டபம் அமைக்கப்பட்டது. கோத்தபாய ராஜபக்ஷ அதன் ஆரம்ப விழாவில் கௌரவ விருந்தினராக இருந்தார்.[8][9][10][11]

மேலதிக தகவல்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ என்ற பகுதியைப் பார்க்கவும்.

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

  1. Ministry of Defence Sri Lanka. Website, 2009, accessed June 2019
  2. Sri Lanka Army website. General Deshamannya Denis Perera Oration Delivered, 12 August 2016, accessed April 2017
  3. S Peiris. Denis Perera The General of All Generals, Daily Mirror, 10 October 2013, accessed April 2017
  4. Ceylon Tobacco Company PLC. Annual Report 2002, 2003, Colombo: CTC
  5. Island.lk, Ceylon Tobacco reports superior performance, upbeat for the future, 29 April 2003, accessed April 2017
  6. Daily FT MNCs extend support for ‘Api Wenuwen Api’ fund, 6 July 2013, Accessed January 2019
  7. Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, Accessed January 2019
  8. Asian Tribune. Secretary Defence declares opens Pilgrims Rest at Girihandu Seya, 21 July 2014, assessed August 2017
  9. The Island. Secretary Defence declares open Pilgrims Rest at Girihandu Seya,27 July 2014, assessed August 2017
  10. K.A.D Fonseka. Commemorative plaque, 02 October 2015, assessed December 2017
  11. Ministry of Defence and Urban Development Sri Lanka. Secretary Defence Declares Open Pilgrims’ Rest at Girihandu Seya, 19 July 2014