தினேஷ் வீரக்கொடி
Contents
- 1 பின்னணி
- 2 புகையிலைத் தொழில்துறையில் பணிபுரிந்த வரலாறு
- 3 அதே காலகட்டத்தில் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்
- 4 புகையிலைத் தொழில்துறையில் பணிபுரிவதற்கு முன் அல்லது பின் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்
- 5 பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் வகித்த பதவிகள்
- 6 TobaccoUnmasked வளங்கள்
- 7 தொடர்புடைய இணைப்புகள்
- 8 குறிப்புகள்
பின்னணி

தினேஷ் வீரக்கொடி 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை புகையிலைக் கம்பனியில்(CTC) சுயாதீன பணிப்பாளராக இருந்தார்.[2][3][4] அவர் சுற்றுலா அபிவிருத்தி, கிருஸ்த்தவ மத விவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் நிலம் தொடர்பான அமைச்சரான ஜோன் அமரதுங்கவின் மருமகனாவார்[5][6] இலங்கையில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கி தேசியக் கட்சியில் அவர் ஒரு “முக்கிய மூலோபாயவாதி” என்று அடையாளம் காணப்படுகின்றார். இது 2015ம் ஆண்டு உருவான கூட்டு அரசாங்கத்தின் முயற்சியில் உருவானதொன்று.[6][7] அவரது புத்தகமான, “The Great November Revolution” நவம்பர் 2014 ல் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்த அவரது நுண்ணறிவுகளை வெளிப்டுத்துவதாக கூறப்படுகின்றது. இது 2015ல் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறையின் தொடக்கமாகும்.[1][8][9]
2018ல் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கியவர் என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டார்.[10]

புகையிலைத் தொழில்துறையில் பணிபுரிந்த வரலாறு
தினேஷ் வீரக்கொடி 2014 ல் இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) பணிப்பாளர் சபையில் சேர்ந்தார்.[4] அவர் அதில் பின்வரும் குழுக்களில் உறுப்பினராக இருந்தார்:[2]
- தணிக்கை குழு
- தொடர்புடைய கட்சி பரிவர்தனை மறு ஆய்வுக் குழு
- பெருநிறுவன சமூக முதலீட்டுக் குழு
தினேஷ் வீரக்கொடி 2015 ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை புகையிலைக் கம்பனியின் பணிப்பாளர் சபையிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் இராஜினாமா செய்தமைக்கான காரணம் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படவில்லை.[12]
அதே காலகட்டத்தில் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்
தினேஷ் வீரக்கொடி இலங்கை புகையிலைக் கம்பனியில்(CTC) பதவி வகித்த அதே கால கட்டத்தில் ஏனைய அரச மற்றும் அரசோடு இணைந்த நிறுவனங்களில் பின்வரும் பதவிகளை வகித்தார். (நியமிக்கப்பட்ட ஆண்டு மற்றும் பொறுப்பான அமைச்சர் என்பன அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது):
- ஆலோசகர்/குழுத் தலைவர், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு (2015, அமைச்சர் – ரணில் விக்ரமசிங்க)[2][4] [13][14]
- தலைவர், மனிதவள மேம்பாட்டு கவுண்சில் (2015, அமைச்சர் – ரணில் விக்ரமசிங்க)[4][13]
- சுற்றுலாத்துறை அமைச்சரின் ஆலோசகர் (2018, அமைச்சர் – ஜோன் அமரதுங்க)[10][15]
- வங்கித் துறை மற்றும் வங்கி சாரா நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர்.[16]
- கல்விக்கான பாதீட்டை மீள் ஆய்வு செய்யும் குழுவின் தலைவர்.[16]
இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் பதவிக்கு தினேஷ் வீரக்கொடி பரிசீலிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன : 2015 ம் ஆண்டு ஜனவரியில் கூட்டு அரசாங்கத்தின் ஆரம்பத்தில் இடைக்கால ஆளுனராகவும் மற்றும் 2016 ம் ஆண்டு ஜூன் ஆளுனராகவும்.[6][17][18]
2017 ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அரசு கையகப்படுத்திய தனியார் மருத்துவமனையான நெவில் பெணன்டோ மருத்துவமனையின்(NFTH)நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலதிக தகவல்களுக்கு இலங்கை புகையிலைக் கம்பனியின் பணிப்பாளர் NFTH குழுவிற்கு நியமிக்கப்படார் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
புகையிலைத் தொழில்துறையில் பணிபுரிவதற்கு முன் அல்லது பின் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்
தினேஷ் வீரக்கொடி இலங்கை புகையிலைக் கம்பனியில் பணிபுரிவதற்கு முன்னர் அரச அல்லது அரை அரச நிறுவனங்களில் பின்வரும் பதவிகளை வகித்தார். (காலம் மற்றும் பொறுப்பான அமைச்சர் தொடர்பான தகவல்கள் அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளது):
- தலைவர் / தலைமை நிர்வாகி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை (2001-2004).[4][3][13]
- பிரதமரின் ஆலோசகர் (2002 -2004, அமைச்சர் – ரணில் விக்ரமசிங்க).[4][3][13][19]
பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் வகித்த பதவிகள்
தினேஷ் வீரக்கொடி பல தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார் ( GlaxoSmithKline Sri Lanka மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி) மற்றும் விவசாயத் தொழில்துறை (சீ.ஐ.சீ ஹோல்டிங்ஸ் லிமிட்டட்). [13] முழுமையான விபரம் பின்வருமாறு:
- தலைவர், சர்வதேச வர்த்தக சபை, இலங்கை(2017/2018)[20]
- தலைவர், ஹட்டன் நைஷனல் வங்கி பீ. எல். சீ (2018 மே - )[16][21]
- சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், சீ.ஐ.சீ ஹோல்டிங்ஸ் லிமிடட் (2015 - )[22]
- சுயாதீனப் பணிப்பாளர் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி 2013 - )[23]
- தலைவர், HR Cornucopia Lanka (2011 - )[13]
- துணைத் தலைவர், சர்வதேச வர்த்தக சபை, இலங்கை (2016/2017)[24]
- சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், Access Engineering ( - )[25]
- தலைவர், கொமர்ஷல் வங்கி பீ. எல். சீ (2011 – 2014)[13],[26]
- நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் DFCC வங்கி (2003 -2010)[13][3]
- மனித வளம் மற்றும் நிர்வாக பணிப்பாளர், GlaxoSmithKline Sri Lanka (1998 – 2005)[13]
- தலைவர், Zamlank Developers[2]
- பணிப்பாளர் / ஆலோசகர், Cornucopia Bangalore இந்தியா[2]
- பணிப்பாளர் கோல் பேஸ் ஹோட்டல் மேலாண்மை நிறுவனம்[2]
லங்கா ரேட்டிங் ஏஜென்சி லிமிட்டட் என்று அழைக்கப்படும் ரேம் மதிப்பீடுகள் (லங்கா) நிறுவன பணிப்பாளர் சபையில் பணியாற்றினார், இது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் மதிப்பீட்டு நிறுவனம் அல்ல என அறிவித்து இலங்கை மத்திய வங்கியால் இடைநிறுத்தப்பட்டது.[27][28][29][30]
TobaccoUnmasked வளங்கள்
தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:
- இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)
- Ceylon Tobacco Director Appointed to NFTH Governing Board
தொடர்புடைய இணைப்புகள்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 Mirror Business. The Great November Revolution, 2015, accessed February 2017
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Ceylon Tobacco Company, Annual Report 2016, 2017, accessed March 2017
- ↑ 3.0 3.1 3.2 3.3 Ceylon Tobacco Company, Annual Report 2015, 2016, accessed February 2017
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Ceylon Tobacco Company. Annual Report 2014, 2015, accessed February 2017
- ↑ Sri Lanka Parliament Website, John Amarathunga, 2017, accessed February 2017
- ↑ 6.0 6.1 6.2 Daily Financial Times. Dinesh Weerakkody to be CB Governor?, 2015, accessed February 2017
- ↑ The Sunday Leader. New Cabinet Prominently Green, 2015, accessed February 2017
- ↑ Daily Financial Times. The Great November Revolution: The inside story according to Dinesh Weerakkody, 2015, accessed February 2017
- ↑ Mirror Business. Dinesh launches “The Great November Revolution”, 2015, accessed February 2017
- ↑ 10.0 10.1 Times Online. Dinesh Weerakkody, new chairman of HNB; first to head two private banks, 01 May 2018, accessed May 2018
- ↑ Sunday Observer. Education is key for sustainable development, 24 September 2017, accessed September 2017
- ↑ Daily Mirror. Dinesh quits CTC board, Mirror Business, 17 July 2018, accessed August 2018
- ↑ 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 13.6 13.7 13.8 Weerakkody D. LinkedIn Profile, 2017, accessed February 2017
- ↑ Ministry of National Policy and Economic Affairs. Ministry of National Policy and Economic Affairs Website, 2017, accessed February 2017
- ↑ Daily News. Dinesh Weerakkody, new chairman of HNB, 02 May 2018, accessed May 2018
- ↑ 16.0 16.1 16.2 Hatton National Bank PLC. Board of Directors, 2018, accessed August 2018
- ↑ Lanka News Web. Govt. in crisis: Dinesh Weerakkody as CB governor?, 2016, accessed February 2017
- ↑ Asian Mirror Dinesh Weerakkody to Become "Interim" Central Bank Governor?, 2015, accessed February 2017
- ↑ Sri Lanka Parliament Website, Prime Ministers of Sri Lanka, 2017, accessed February 2017
- ↑ International Chamber of Commerce Sri Lanka. Executive Committee, 2016, accessed August 2018
- ↑ economynext Dinesh Weerakkody New Chairman of Sri Lanka's Hatton National Bank, 01 May 2018, accessed May 2018
- ↑ CIC Holdings. Leading Professionals join CIC group, 2017, accessed February 2017
- ↑ Hemas Holdings PLC. Board of Directors, 2017, accessed February, 2017
- ↑ International Chamber of Commerce Sri Lanka. Executive Committee, 2017, accessed, February, 2017
- ↑ Access Engineering. Board of Directors, 2017, accessed February, 2017
- ↑ Commercial Bank of Ceylon PLC. Board of Directors, 2017, accessed February 2017
- ↑ Central Bank of Sri Lanka. Circular: Bank Supervision Department Ref: 02/17/500/0063/001, 03 August 2015, accessed February 2017
- ↑ Business Times. RAM Ratings (Lanka) Ltd now known as “Lanka Rating Agency (LRA) Ltd”, 04 May 2014, accessed February 2017
- ↑ Daily Financial Times. Lanka Rating Agency appoints Dinesh Weerakkody to Board, 04 August 2014, accessed February 2017
- ↑ The Island. Dinesh Weerakkody on LRA Board, 01 August 2014, accessed February 2017