ஜயம்பதி பண்டாரநாயக்க

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

ஜயம்பதி திவாலே பண்டாரநாயக்க 1990 முதல் இலங்கை புகையிலை கம்பனியின் பணிப்பாளராகவும், 2008 முதல் 2013 வரை தலைவராகவும் இருந்தார். [1][2] இலங்கையின் மாத்தளையில் பிறந்த பண்டாரநாயக்க கொழும்பு புனித தாமஸ் கல்லூரி மாணவராவார்.[3] அவர் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டதாரி ஆவார்.[4]

உரு: ஜப்பானிய இரும்பு தயாரிப்பு நிறுவனத்த்துடன் இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் பொது பணிப்பாளராக பண்டாரநாயக்க ஒரு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டார்.[5]

புகையிலை தொழில்துறையில் கடமையாற்றிய வரலாறு

பாடசாலை கல்விக்கு பிறகு 1967 ஆம் ஆண்டில் முகாமைத்துவ பயிற்சியாளராக இலங்கை புகையிலை கம்பனியில்(CTC) இணைந்தார். இவ்வாறு அவர் தலைவராக இருந்த காலம் (2008-2013) உட்பட 45 ஆண்டுகள் இலங்கை புகையிலை கம்பனியில் கடமையாற்றியுள்ளார். அவர் பணியாளர் மேலாளர், மனிதவளத் தலைவர் மற்றும் மனிதவள பணிப்பாளராகவும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில் (1990 முதல்) நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற்று மீண்டும் நிர்வாகமற்ற இயக்குநராக சேர்ந்தபோது துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தார். அவர் 22 ஆண்டுகள் (1990 - 2013) CTC இன் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[1][2][6][4]

புகையிலை தொழிலில் நிதி முதலீடுகள்

2007 முதல் 2013 வரை இலங்கை புகையிலை கம்பனியின்(CTC) ‘முதல் 20’ பங்குதாரர்களில் பண்டாரநாயக்க 122,944 (0.07%) முதல் 183,344 (0.1%) வரையிலான பல பங்குகளை வைத்திருந்தார்.[1][2][7][8][9][10]

அதே காலகட்டத்தில் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்.

2010 ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் பொது பணிப்பாளராகவும் பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் இலங்கை புகையிலை கம்பனியின்(CTC) தலைவராக பணியாற்றி வந்தார்.[11][1] அத்தோடு மூலோபாய நிறுவன மேலாண்மை அமைப்பின் மேலாண்மை வாரியத்திர்க்கு அவர் "ஜனாதிபதி நியமனம்" பெற்றார்.[12]

பிற (அரச சாரா) நிறுவனங்களில் வகித்த பதவிகள்

பெருநிறுவன துறை

பண்டாரநாயக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் வாரியங்களில் பணியாற்றினார்:[1][13][7][14]

=தொழில்முறை அல்லது பிற அமைப்புகள்

பண்டாரநாயக்க பின்வரும் அமைப்புகளில் தலைமை பதவிகளை வகித்தார்:[7]

 • தலைவர் – சிலோன் வணிக சபை
ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான ஒரு பிரச்சினையில் பண்டாரநாயக்க நலன்களின் முரண்பாடுகளை ஒப்புக் கொள்ளாததற்காக விமர்சிக்கப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை வணிக சபை ஜான் கீழ் ஹோல்டன்ஸ்க்கு ஆதரவாக வாக்களித்தது. பண்டாரநாயக்க ஒரு ஜே.கே.ஹெச் அசோசியேட்டில் (யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி) இயக்குநராக இருந்ததாலும், இலங்கை புகையிலை கம்பனி பி.எல்.சி (சி.டி.சி) குழுவில் ஜே.கே.ஹெச் தலைவரான சுசாந்தா ரத்நாயக்கவுடன் பணிபுரிந்ததாலும், சில உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனையைப் பெற்றதாகக் கூறி அவர் அந்தக் கோரிக்கையை கவனிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.[15]

பண்டாரநாயக்க பின்வரும் அமைப்புகளில் உறுப்பினராக / சக ஊழியராக இருந்தார்:[7][16]

உறுப்பினர் – இன்ஸ்டிடியூட் ஆப் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ மேலாளர்கள் (CPM)

அத்தோடு Mother Sri Lanka அமைப்பின் ‘தூதர்’ ஆவார்.[17]

Tobacco Unmasked வளங்கள்

பிற தொடர்புடைய TobaccoUnmasked உள்ளீடுகள்:

குறிப்புகள்

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Ceylon Tobacco Company PLC. Annual Report 2008, 2009, accessed May 2017
 2. 2.0 2.1 2.2 Ceylon Tobacco Company PLC. Annual Report 2013, 2014, accessed May 2017
 3. The S. Thomas’ College Old Boys’ Forum. J.D. Bandaranayake, 20 May 2015, accessed May 2017
 4. 4.0 4.1 R Ladduwahetty. Poverty alleviation through sustainable agriculture - New CTC Chairman, Daily News Online, 24 March 2008, accessed May 2017
 5. DailyNews.lk Lankan steel power up Japan market, 18 February 2011, accessed May 2017
 6. DailyFT. Jayampathi to bid goodbye to CTC after 45-year stint, 7 March 2013, accessed May 2017
 7. 7.0 7.1 7.2 7.3 Ceylon Tobacco Company PLC. Annual Report 2011, 2012, accessed May 2017
 8. Ceylon Tobacco Company. Annual Report 2010, 2011, accessed May 2017
 9. Ceylon Tobacco Company PLC. Annual Report 2009, 2010, accessed May 2017
 10. Ceylon Tobacco Company PLC. Annual Report 2012, 2013, accessed May 2017
 11. Rural Returns (Gte) Ltd. Rural Returns Director J.D. Bandaranayake new BOI Chief, 9 June 2010, accessed May 2017
 12. Ceylon Tobacco Company PLC. Annual Report 2004. Colombo:CTC, 2005
 13. Rural Returns (Gte) Ltd. Board, Undated, accessed May 2017
 14. 4-traders. Jayampathi Divale Bandaranayake, Business Leaders, 2017, accessed May 2017
 15. Sri Lanka Gaurdian. Regulation and governance, 1 March 2009, accessed May 2017
 16. The Sri Lanka Institute of Directors. Current list of SLID members, 2017, accessed May 2017
 17. Mother Sri Lanka. Mother Sri Lanka Ambassadors, 2017, accessed May 2017