சுசந்த ரத்னாயக்க

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

சுசந்த சமிந்த ரத்நாயக்க 2013ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] நிர்வாக சுயவிவரங்களின் தரவுத்தளமான Bloomberg.com, ன் தகவல்களுக்கு அமைய அவர் 13 வௌ;வேறு தொழில்துறைகளில் 9 வௌ;வேறு அமைப்புகளில் 46 உறுப்பினர்களுடன் தொடர்புபட்டுள்ளார்.[2] சுசந்த ரத்னாயக்க கண்டி திருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தமது கல்விலையத் தொடர்ந்தார், எவ்வாறாயினும் அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை முடிக்கவில்லை. 1978ல் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸில் இணைந்ததோடு 2006ல் அந்நிறுவனத்தின் அவர் தலைவரானார்.ஷ ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆனது, விருந்தோம்பல் துறை, சில்லறை விற்பனை, உணவு, நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவ் அனைத்து நிறுவனங்களின் தலைவராக சுசந்த ரத்நாயக்க உள்ளார்.[3] இலங்கை புகையிலைக் கம்பனி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிலும் முன்னோடியாகத் திகழ்ந்த கென் பாலேந்திர ரத்நாயக்கவிற்கு வழிகாட்டியாக இருந்ததாக அறிக்கைகளில் காணப்படுகின்றது. .[4]

உரு :1 2017 டிசம்பர் 29ம் திகதி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் வெளியான சுசந்த ரத்நாயக்க தொடர்பான தகவல்[3]

புகையிலை தொழில்துறையில் தொழில் புரிந்த வரலாறு

சுசந்த ரத்னாயக்க 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், இலங்கை புகையிலைக் கம்பனியின் பணிப்பாளர் சபையில் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகச் செயற்பட்டதோடு 2013ம் ஆண்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]

உள்ளூர் ஊடகங்கள் ரத்நாயக்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்துப் பல மோசமான அறிக்கைகளை அதே காலகட்டத்தில் வெளியிட்டன:

 • ரத்நாயக்க சூதாட்ட உரிமத்தில் சர்சைக்குரிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக 2015ம் ஆண்டில் ஊடகங்களால் குற்றம் சாட்டப்பட்டார். முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அவர்களால் இலங்கை காவல்துறையின் குற்றப்புளனாய்வு துறைக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.[5]
 • 2013ல் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாடு (ஊர்ழுபுஆ) தலைவர்கள் கூட்டத்தில் சுசந்த ரத்நாயக்கவின் மகள் அனித்ராவும் இருந்தார். வெளிப்படையல்லாத முறையில் அவ் ஆலோசனை சபைக்கு ஆட்களை இணைத்துக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.[6]
 • இலங்கையில் கடல்சார் சேவைகளைச் சர்ச்சைக்குரிய வகையில் தனியார்மயமாக்குவது குறித்த ஊடக அறிக்கைகளில் 2002ம் ஆண்டு சுசந்த ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.[7][8]

A2017ம் ஆண்டு நிலவரப்படி, இலங்கை புகையிலைக் கம்பனி பணிப்பாளர் குழுவில் அவரது அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் ஒரே உறுப்பினராக ரத்நாயக்க இருந்தார்.[9]

2018ம் ஆண்டு ஓய்வுபெற்றமை

தலைவராக தனது ஐந்தாண்டுக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் ரத்நாயக்க 2018ம் ஜீலை 31ம் திகதி தலைவர் மற்றும் சபை அங்கத்துவத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.[10][11]

சம காலத்தில் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்

ரத்நாயக்க இலங்கை புகையிலைக் கம்பனியில் பதவி வகித்த அதே காலகட்டத்தில் அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார். (பதவி வகித்த ஆண்டுகள் அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளது):

 • உறுப்பினர் - தேசிய பொருளாதார மேம்பாட்டுச் சபையின் சுற்றுலா இறையாண்மை மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு குழு (2008 முதல்)[12][13][14][2]
 • தலைவர் - இலங்கை தேயிலைச் சபை (2010 - 2011)[15][2]
 • பணிப்பாளர் – ளுசடையமெய யுசைடiநௌ (2011-2015)[16][2]
 • பணிப்பாளர் – றுயவநசள நனபந (2011)[16][17]

புகையிலைத் தொழில்துறையில் பதவி வகித்ததற்கு முன்னும் பின்னும் அரச நிறுவனங்களில் வகித்த பதவிகள்

உரு 1: தேசிய செய்தித்தாளான டெய்லி மிரர், சுசந்த ரத்நாயக்க குறித்த குழுவில் அங்கத்துவம் வகிப்பதாக செய்தி வெளியிட்டது[19]

பிற நிறுவனங்களில்(அரச சாரா) வகித்த பதவிகள்

ரத்நாயக்கவின் நிர்வாகத்துறை வாழ்க்கையில் பெறும்பகுதி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது, அதில் அவர் 2006 முதல் தலைவராக பணியாற்றியுள்ளார். 2017ம் ஆண்டு வரையில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸில் வகித்த பதவிகள் தொடர்பான முழுமையான தகவல்களைBloomberg Executive Profile.[2][20] பக்கத்தில் காணலாம். அவர் பதவி வகித்த ஏனைய நிறுவனங்களாக:

 • இலங்கை முதலாளிகள் கூட்டமைப்பு – தலைவர்[20]
 • இலங்கை வர்த்தக சம்மேளனம் - தலைவர்[20]
 • ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் கேட்டரிங் சேவை – பணிப்பாளர்[16]
 • நேஷன் ட்ரஸ்ட் வங்கி - பணிப்பாளர்[2]
 • யூனியன் அசுரன்ஸ் நிறுவனம் - பணிப்பாளர்[2]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

தொடர்புடைய இணைப்புகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்:
 1. 1.0 1.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2015, 2016, accessed March 2017
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Bloomberg. Executive Profiles: Susantha Chaminda Ratnayake, undated, accessed March 2017
 3. 3.0 3.1 John Keells Group. Board of Directors, 2017, accessed March 2017
 4. I Perera Bandara. Salli Hambakarana Eka Mama Dan Navaththala, Silumina, 11 February 2017, accessed March 2017
 5. Lanka News Web. JKH Susantha should come clean about his involvement with fraudster Sajin Vas, 01 October 2015, accessed March 2017
 6. Colombo Telegraph. Sajin Appoints Rosy’s Daughter, 11 Others as CHOGM 70k Consultants, 15 September 2013, accessed March 2017
 7. The Sunday Times. SC’s scathing attack on business ethics and unethical practices, 27 July 2008, accessed March 2017
 8. GroundViews. Corporate Scandals with Impunity, 09 December 2008, accessed March 2017
 9. U Abeywardena. A letter to the Chief Operating Officer of the Colombo Stock Exchange, 28 February 2017, accessed March 2017
 10. DailyFT. Ratnayake retires from CTC Board, 02 August 2018, accessed August 2018
 11. Lanka Business Online. Susantha Ratnayake retires from Ceylon Tobacco Company, 01 August 2018, accessed August 2018
 12. Ceylon Tobacco Company PLC. Annual Report 2008, 2009, accessed March 2017
 13. Ceylon Tobacco Company PLC. Annual Report 2009, 2010, accessed March 2017
 14. Ceylon Tobacco Company PLC. Annual Report 2011, 2012, accessed March 2017
 15. Ceylon Tobacco Company PLC. Annual Report 2010, 2011, accessed March 2017
 16. 16.0 16.1 16.2 DailyFT. Susantha appointed to SriLankan Airlines Board, 29 December 2011, accessed March 2017
 17. DailyFT.Most powerful Board for Waters Edge, 11 January 2011, accessed March 2017
 18. President of Sri Lanka. A Six-member Committee of Professional was Appointed by the Presidential Secretariat Today, Official Website, 28 November 2019, accessed December 2019
 19. Daily Mirror.Six member committee appointed to select bosses for state enterprises, 29 November 2019, accessed December 2019
 20. 20.0 20.1 20.2 John Keells Group. Board of Directors, undated, accessed March 2017