சிகரட் பொதியிடல் தொடர்பாக விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுதல்

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

இந்த பதிவானது மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துடன் இணைந்து Tobaccounmasked குழு நடாத்திய புலன்விசாரணை அடிப்படையிலான அறிக்கையாகும்.

பின்னணி

2018 ஒக்டோபரில் இரண்டு சிகரட்டுகளை மட்டுமே உள்ளடக்கியதான புதிய சிகரட் பெட்டி சந்தையில் காணப்பட்டது.

இந்த சிகரட் பெட்டி தொடர்பான செய்தி 2018 ஒக்டோபர் 12ம் திகதி இரண்டு தனிநபர்களின் முகப்புத்தகம் (உரு 1) மற்றும் வட்ஸ்எப் ஸ்டேடசில்(உரு 2) காணப்பட்டது.

உரு 1: ஒரு நபர் தனது முகப்புத்தக சுயவிபரத்தில் கதையாக (Facebook story) வெளியிட்ட புதிய சிகரட் பெட்டி.[2]
உரு 2: ஒரு நபர் தனது வட்ஸ்எப் ஸ்டேடசில் வெளியிட்ட புதிய சிகரட் பெட்டி[3]

புதிய சிகரட் பெட்டி

உரு 3: Tobaccounmasked குழு, கொழும்பு 5ல் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கி புதிய சிகரட் பெட்டி.

உரு 3ல் காட்டப்பட்டுள்ள சிகரட் பெட்டியினை, கொழும்பு 5ல் உள்ள ஒரு கடையில் இருந்து இரகசிய நபர் ஒருவரின் மூலமாக வாங்கினோம். விற்பனை நேரத்தில், மற்றொரு பெரிய சிகரட் பக்கட்டிலிருந்து இரண்டு சிகரட்டுகளை எடுத்து, குறித்த சிறிய பெட்டியில் செருகுவதை இரகசிய நபர் அவதானித்தார்.

கடுஞ்சிவப்பு நிறத்தில் கனசதுரமான வடிவத்தில் பொதி காணப்படுவதோடு, விலை ரூபா 100 என சிங்கள மொழியில் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை புகையிலை கம்பனியினால்(CTC) தயாரிக்கப்பட்ட இரண்டு சிகரட்டுகள் உள்ளே இருந்தன: ஜோன் பிளயர் கோல்ட்லீப் ஒன்று (இலங்கை ரூபா 55) மற்றையது ஜோன் பிளயர் நேவிகட் (இலங்கை ரூபா 45). ஒக்டோபர் 2018 நிலவரப்படி மேற்கூறிய இரண்டு சிகரட்டுகளினதும் மொத்த விலை உள்ளுர் சந்தையில் ரூபா 95ஆக இருந்த போதும், குறித்த புதியவகை பெட்டியுடன் இவை ரூபா 100ற்கு விற்கப்பட்டது.

உரு 3ல் காட்டப்பட்டுள்ளவாறு, சிகரட் பெட்டியில் விலையை தவிர்ந்த வேறு எந்த வர்த்தக முத்திரையோ அல்லது இலட்சினையோ இருக்கவி;ல்லை. எவ்வாறியினும் பெட்டியின்; நிறமானது இலங்கையில் தயாரிக்கப்படும் இலங்கை புகையிலை கம்பனியின்(CTC) சிகரட் வகையான ஜோன் பிளயர் சிகரட்டின் நிறத்தை ஒத்திருந்தன. இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது, இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக உரிமையயை கொண்ட நிறுவனம் என்பதோடு, பிரித்தானிய அமெரிக்க புகையிலை கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் ஆகும். (மேலதிக தகவல்களுக்கு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் இலங்கையில் புகையிலைத் தொழில்துறை என்ற எமது பக்கங்களை பார்வையிடவும்). புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையின் சட்டத்தின்(NATA) மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள, எந்தவிதமான சுகாதார எச்சரிக்கைகளோ அல்லது பிற எச்சரிக்கைகளோ அல்லது பொருட்களின் வெளிப்பாடு போன்றவை இந்த பெட்டியில் காட்சிப்படுத்தப்படவில்லை. பெட்டியினுல் காணப்பட்ட சிகரட்டுகளில் அவற்றின் வர்த்தக பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.

ஒரு சில்லறை வியாபாரியிடம்; புலன் விசாரனை மேற்கொண்ட போது, இலங்கை புகையிலை கம்பனியின் அப்பகுதி விநியோகஸ்தரால் குறித்த பெட்டி விநியோகிக்கப்பட்டதாக கூறினார். அவ் அறிக்கையின் வீடியோ சான்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திடம்) உள்ளது.

இலங்கையில் பொதியிடல் மற்றும் பொருட்பெயர் தொடர்பான விதிமுறைகள்

2006ம் ஆண்டு 27ம் இலக்க சட்டமான புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச்சபையின் சட்டத்தின்(NATA) 34வது பிரிவின் கீழ், இலங்கையில் சுகாதார எச்சரிக்கை இல்லாமல் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது மற்றும் ஒவ்வொரு புகையிலை உற்பத்தியிலும் தார் மற்றும் நிகோடின் உள்ளடக்கம் தொடர்பான அளவு இல்லாமல் விற்பனை செய்வது என்பன தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகரட் பொதிகளில் 80 சதவீதத்தை உள்ளடக்கிய உருவப்பட சுகாதார எச்சரிக்கைகள் இலங்கையில் 2015ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. சட்டத்தின்படி, சட்டத்தை மீறும் எந்தவொரு நபரும் ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது ரூபா 50000 அல்லது அவ் இரண்டு தண்டணைகளுக்கும் ஆளாவார்.[4][5]

உரு 4: இலங்கையில் விற்கப்படும் ஜோன் பிளயர் வகை சிகரட் பெட்டிகளில் 80 வீதம் உருவப்பட சுகாதார எச்சரிக்கையை உள்ளடக்கியது

இலங்கையில் தனி சிகரட் விற்பனையை தடை செய்யவதற்கான திட்டம்

2016ம் ஆண்டு பாலப்பகுதியில் சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன அவர்கள் சிகரட்டுகள் தனிதனியாக விற்பனை செய்வது தடை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். [1], [6][7] இருப்பினும் இந்த முன்மொழிவை நிதி அமைச்சர் மற்றும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான ஆட்சேபனைகள் காரணமாக 2018 வரை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவில்லை.[8]

Tobacco Unmasked வளங்கள்

குறிப்புகள்

  1. Centre for Combating Tobacco. Personal communications via Facebook, 12 October 2018
  2. Centre for Combating Tobacco. Personal communications via Facebook, 12 October 2018
  3. Centre for Combating Tobacco. Personal communications via WhatsApp, 12th October 2018
  4. Government of Sri Lanka. National Authority on Tobacco and Alcohol (NATA), Sri Lanka, (Amendment) Act, No. 3 of 2015 March 06 2015, accessed October 2018
  5. World Health Organization. WHO report on the global tobacco epidemic, 2015. World Health Organization website, 2015, accessed March 2017
  6. Daily Mirror. Sale of loose fags will be banned: Rajitha 09 March 2017, accessed October 2018
  7. T Sripathi. Implications of the imposed ban on the sale of loose cigarettes in Sri Lanka, Daily FT,17 April 2017, accessed October 2018
  8. D Liyanage. No ban on single cigarettes sale, Daily Mirror, 17 September 2018, accessed October 2018