சாகல ரத்நாயக்க

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

சாகல கஜேந்திர ரத்நாயக்க 1968 பெப்ரவரி 27ம் திகதி பிறந்தார்.[1] அவர் இலங்கையில் இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்பதோடு, 2015 தொடக்கம் 2019 வரையிலான அரசாங்கத்தின் அமைச்சருமாவார். பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபர பக்கத்தில் அவரை “நில உரிமையாளர்” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [2]

உரு 1: அமைச்சர் சாகல ரத்நாயக்க [3]

இலங்கையில் தென் மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தறை மாவட்டத்தில் தெனியாய தேர்தல் தொகுதியிலிருந்து 2000 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] நவம்பர் 2019ம் ஆண்டு நிலவரத்தின் படி அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தின் தலைமை நிர்வாகியாகவும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தார். [6][7][8] [9]

தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றார். அவர் 1993ம் ஆண்டு போட்லேண்டில் அமைந்துள்ள என் கிளார்க் கல்லூரியில் வணிக நிர்வாக ஆய்வுகளில் பட்டம் பெற்றார்.[8][5][10][1] 1994 ஓகஸ்ட் முதல் 1999 ஏப்ரல் வரை அவர் HSBC யில் கடன் செயல்பாட்டு மேலாளராகவும், 1993 ஓகஸ்ட் முதல் 1994 ஜூலை வரை சென்ரல் பினான்ஸ் நிறுவனத்தில் நிதி ஆய்வாளராகவும் பணியாற்றினார். [8][10]

புகையிலைத் தொழில்துறையுடனான தொடர்பு

இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) முதல் 20 முதலீட்டாளர்களில் ஒன்றான HSBC யில் அவர் கடன் செயல்பாட்டு மேலாளராக பணியாற்றினார். [11] இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனம் என்பதோடு, இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனமும் ஆகும். மேலதிக தகவல்களுக்கு தொடர்புடைய பக்கங்களைப் பார்க்கவும்.

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

 • தென் மாகாண சபை உறுப்பினர் – ஓகஸ்ட் 1999 முதல் ஒக்டோபர் 2000 வரை. [2][4]
 • மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் – 2002 முதல் 2004 வரை [5]
 • பாராளுமன்ற உறுப்பினர் செப்டம்பர் 2015 முதல் தற்போது வரை. [8]
 • சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் – நவம்பர் 2015 முதல் பெப்ரவரி 2018 வரை. [8]
 • பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி – பெப்ரவரி 2015 முதல் நவம்பர் 2019 வரை. [8]
 • இளைஞர் விவகாரங்கள், திட்ட மேலாண்மை மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் – பெப்ரவரி 2018 முதல் ஒக்டோபர் 2018 வரை. [8]
 • துறைமுகங்கள், கப்பல் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் – ஒக்டோபர் 2018 முதல் நவம்பர் 2019 வரை. [8]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

பிடபத்தர பிரதேசத்தில் அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பங்குபற்றியமை

மாத்தறை மாவட்ட பிடபத்தர பிரதேச செயலக பிரிவில், பிடபத்தர என்ற இடத்தில் இடம்பெற்ற இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) நிலைவான நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்ட்த்தின் (SADP) கீழ் வீட்டுத் தோட்டம் மேற்கொள்ளும் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பங்குபற்றினார். (உரு 2) [12]

நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் (SADP) என்பது, இலங்கை புகையிலைக் கம்பனியின் பெருநிறுவன சமூக முதலீட்டு திட்டத்தில் பிரதான திட்டமாகும். மேலதிக தகவல்களுக்கு நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் (SADP) என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உரு 2: அமைச்சர் பங்குபற்றிய நிகழ்வு ஊடகங்களில் வெளியானது. [12]

இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார்

செப்டெம்பர் 28ம் திகதி, கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இடம்பெற்ற இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார். இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் என்பது இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) உள்ளடங்களாக ஏழு நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.( உரு 3) [13][14] மேலதிக தகவல்களுக்கு, இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் என்ற பக்கத்தைப் பார்வையிடவும்.

உரு 3: சாகல ரத்நாயக்க இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழக நிகழ்வொன்றில் பங்குபற்றினார். இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் இலங்கை பல்தேசிய கம்பனிகளின் கழகம் ஆகியவற்றின் தலைவர் மைக்கேல் கொஸ்ட், நிகழ்வின் பிரதான பேச்சாளர் ஜிம் லோவ்லிஸ் அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் ஹர்ஷ த சில்வா ஆகியோர் படத்தில் உள்ளனர். [13]

பிரதமர் அலுவலகத்திலிருந்து புகையிலைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையிலான கடிதம்

அகில இலங்கை புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக 2017 ஓகஸ்ட் 16ம் திகதி, புகையிலைச் செய்கை தொடர்பில் பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடினார். சந்திப்பின் விளைவாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து, குறித்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. குறித்த கடிதத்தில் புகையிலை பயிர்செய்கை தடைச் செய்யப்பட்ட செய்கை அல்ல என்பதால் அதனை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் எதிர்க்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த காலகட்டத்தில் பிரதமர் அலுவலகத்தில் தலைமை பணியாளராக சாகல ரத்நாயக்க இருந்தார்.

உரு 4: பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம். [15]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

 1. 1.0 1.1 Manthri.lk. Sagala Ratnayaka, undated, accessed March 2019
 2. 2.0 2.1 Parliament of Sri Lanka. Hon. SagalaRatnayaka, M.P., undated, accessed March 2019
 3. M Bandara and I Upeksha. Doing the Right Thing, Business Today. February 2016, accessed March 2019
 4. 4.0 4.1 Business Today. Doing the Right Thing, February 2016, accessed March 2019
 5. 5.0 5.1 5.2 Prabook. SagalaRatnayaka, undated, accessed March 2019
 6. Prime Minister’s office, Core Team, 21st May 2018, accessed March 2019
 7. Official website of the office of the Cabinet Ministers - Sri Lanka. Office of the Cabinet of Ministers - Sri Lanka, undated, accessed March 2019
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 Sagala Ratnayake. Facebook profile, Facebook, undated, accessed March 2019
 9. PMD NEWS- President’s Media Division, CABINET MINISTERS, undated, accessed March 2019
 10. 10.0 10.1 Lewis & Clark. Sagala Ratnayaka ‘93 represents district in Sri Lankan Parliament, 8 October 2001, accessed March 2019
 11. Ceylon Tobacco Company PLC. Annual Report 2017, 2018, accessed March 2019
 12. 12.0 12.1 Ada Derana Prime Time News Bulletin 06.55 pm - 2017.11.12, 12th November 2017, accessed March 2019
 13. 13.0 13.1 Mirror Business. ‘League of Multinational Corporates’ Launched, 01 October 2018, accessed March 2019
 14. Daily FT. MNC speak up, 01 October 2018, accessed March 2019
 15. PASC Lakmal, Discussion on issues related to tobacco farming, 17th August 2017, accessed March 2019