கோத்தபாய ராஜபக்ஷ

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

1949ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் திகதி இலங்கையின் வீரகெட்டியவில் பிறந்த கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும், இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.[1]

அவர் கொழும்பு 10 ஆனந்த கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவர் இலங்கையின் 6வது ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பிரதி சபாநாயகருமான டி. ஏ. ராஜபக்ஷவின் மகனுமாவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான முதுநிலைப் பட்டம் பெற்றதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழினுட்பம் தொடர்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பக்காலத்தில் இராணுவத்தில் கடமையாற்றியதோடு 1992ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 20 வருடங்கள் கடமையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார். தனது ஓய்விற்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியமர்ந்த அவர், தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியானதன் பின்னர் மீண்டும் நாடு திரும்பி, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார்.[2][3][1]

2020 ல் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக 2019 ஓகஸ்ட் 11ம் திகதியன்று அறிவிக்கப்பட்டார்.[4][5][6]நவம்பர் 16, 2019 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 52.2% பெரும்பான்மை வாக்குகளால் கோட்டபய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7 வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]


உரு 1: கோத்தபாய ராஜபக்ஷ (பட உபயம் கூகிள் படங்கள்)

அரசியல் / அரசாங்கத்தில் வகித்த பதவிகள்[1][3]

 • இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி - நவம்பர் 2019 முதல்
 • இலங்கை இராணுவம் - 1971–1992
 • சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை கட்டளைத் தளபதி – 1991 - 1992
 • நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் – நவம்பர் 2005 – ஜனவரி 2015

புகையிலைத் தொழில்துறையுடனான தொடர்பு

அனுசரணைகளைப் பெற்றுக்கொண்டமை

பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு

ஜூலை 2014ல், பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமான இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) ஹம்பாந்தோட்டையில் உள்ள வீரகெட்டிய புதிய பொலிஸ் நிலையத்தினை கட்டியெழுப்ப நிதியுதவி வழங்கியது. பொலிஸ் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கு உட்பட்டதாக இருந்தாலும், பாதுகாப்புச் செயலாளரிடம் நன்கொடை வழங்கப்பட்டது (உரு 2).[8]2013 ஆண்டில் இலங்கை புகையிலைக் கம்பனியின் வருடாந்த அறிக்கைக்கு அமைய, குறித்த நன்கொடையானது பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டதோடு CTC யின் நிதியுதவி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மூன்றாவது பொலிஸ் நிலையமும் ஆகும். இலங்கையின் வட பகுதியிலுள்ள மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது பொலிஸ் நிலையங்களாக இலங்கை புகையிலைக் கம்பனியின் நிதியுதவியில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டதோடு இலங்கையின் தென் பகுதியில் CTC யின் நிதியுதவியில் கட்டப்பட்ட ஒரே பொலிஸ் நிலையமாக வீரக்கெட்டிய பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது.[9] மேலதிக தகவல்களுக்கு, மீண்டும் திறக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்கள், வீரக்கெட்டிய பொலிஸ் நிலையம் ஆகிய பக்கங்களைப் பார்க்கவும்.

உரு 2: CTC யின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பெலிசியோ பெராஸ், 2014ம் ஆண்டு ஜூலை மாதம் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவிடம் நன்கொடையை வழங்கிய போது.[10]

இராணுவ நலன்புரி கடைகள் நிர்மானிக்க

CTC யின் 2016ம் ஆண்டறிக்கைக்கு அமைவாக, அவர்கள் 2006 ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை இராணுவ நலன்புரி கடைகளை அமைக்க நிதியுதவி வழங்கியுள்ளனர்.[11]

மாதிவெல “ அபி வெனுவென் அபி” என்ற சிற்றுண்டிச்சாலை நிர்மாணிப்பதற்கு

“அபி வெனுவென் அபி” என்பது, இலங்கை இராணுவ சேவையிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நிதியமாகும், இது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து நடைமுறைப்படுத்;தப்படும் திட்டமாகும். கொழும்பு மாதிவெல பகுதியில் கட்டப்பட்ட சிற்றுண்டிச்சாலையானது 2015 நவம்பர் 5ம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது (உரு:3).[12] CTC யின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் யமனக மற்றும் CTC ன் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களில் ஒருவரான தினேஷ் தர்மதாச ஆகியோரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றனர்.


Image 3: நவம்பர் 5, 2012 அன்று மடிவேலாவில் இலங்கை புகையிலை நிறுவனம் பி.எல்.சி (சி.டி.சி) கட்டிய அப்பி வெனுவென் அப்பி சிற்றுண்டிச்சாலை திறப்பு விழாவில் கோத்தபாய[13]

இலங்கை புகையிலைக் கம்பனியின் நிகழ்வில் பங்கேற்றமை

கிரிஹண்டு சேயவில் அமைக்கப்பட்ட யாத்திரியர்கள் ஓய்வு மண்டபமானது இலங்கை புகையிலைக் கம்பனியின் அனுசரணையில் கட்டப்பட்டது. அதன் ஆரம்ப விழாவில் கோத்தபாய ராஜபக்ஷ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் (உரு 3,4 ).[14][15][16][17] இம்மண்டபத்தின் கட்டுமானம் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களின் இணைந்த திட்டமாக இருந்தது. இவ் இரு நிறுவனங்களின் தலைவராக சுசந்த ரத்னாயக்க இருந்தார். மேலதிக தகவல்களுக்கு கிரிஹண்டு சேய யாத்ரீகர்களுக்கு ஓய்வு மண்டபம் அமைத்தல் என்ற பகுதியைப் பார்க்கவும்.

உரு 3: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் ஓய்வு மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மிலிந்த மொறகொடவும் படத்தில் உள்ளார்.[15]
உரு 4: ஓய்வு மண்டபம் அமைப்பதற்கு CTC நிதியுதவி வழங்கியமை தொடர்பில் நினைவூட்டல் தகடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[16]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

 1. 1.0 1.1 1.2 Ministry of Defence Sri Lanka. Former Defence Secretaries, Accessed January 2019
 2. R Somarathna. Ananda Icons: Meteoric rise of Ananda's patriotic sons, Daily News, 3 July 2009, Accessed June 2019
 3. 3.0 3.1 Singapore International Water Week Pte. Ltd. Speakers – Participants, Water leaders’ platform, 2007, Accessed June 2019
 4. NewsFirst.lk. [https://www.newsfirst.lk/2019/08/11/slpp-national-convention-begins/ UPDATE: Gotabaya Rajapaksa named the Presidential candidate of SLPP, 11 August 2019, Accessed August 2019
 5. ColomboPage. SLPP names Gotabhaya Rajapaksa as presidential candidate, 11 August 2019, Accessed August 2019
 6. ColomboPage. SLPP names Gotabhaya Rajapaksa as presidential candidate, 11 August 2019, Accessed August 2019
 7. Presidential Secretariat of Sri Lanka. [1], 18 November 2019, accessed November 2019
 8. Daily FT MNCs extend support for ‘Api Wenuwen Api’ fund, 6 July 2013, Accessed January 2019
 9. Ceylon Tobacco Company PLC. Annual Report 2014, Accessed January 2019
 10. Ministry of Defence Sri Lanka Website. CTC assists for the new police station in Weeraketiya accessed on 04 October 2018
 11. Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, Accessed January 2019
 12. Ministry of Defence and Urban Development 'Api Wenuwen Api' cafeteria opens for public, Accessed January 2019
 13. Ministry of Defense and urban Development, ‘Api Wenuwen Api’ cafeteria opens for public, 5 November 2012, Accessed August 2018
 14. Asian Tribune. Secretary Defence declares opens Pilgrims Rest at Girihandu Seya, 21 July 2014, assessed August 2017
 15. 15.0 15.1 The Island. Secretary Defence declares open Pilgrims Rest at Girihandu Seya,27 July 2014, assessed August 2017
 16. 16.0 16.1 K.A.D Fonseka. Commemorative plaque, 02 October 2015, assessed December 2017
 17. Ministry of Defence and Urban Development Sri Lanka. Secretary Defence Declares Open Pilgrims’ Rest at Girihandu Seya, 19 July 2014