காமினி ஜெயவிக்ரம பெரேரா

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

காமினி ஜெயவிக்ரம பெரேரா இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியல்வாதி ஆவார். குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 2013 வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[1][2][3]

1941 இல் பிறந்த இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்றார்.[4][5]

உரு 1: காமினி ஜெயவிக்ரம பெரேரா[6]

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

 • உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் - ஜனவரி 2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை[7][8][9]
 • நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குத் துறை அமைச்சர் - செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2018 வரை[10]
 • ‘ புத்த சாசன’ அமைச்சர் - ஆகஸ்ட் 2017 முதல் அக்டோபர் 2018 வரை.[11]
 • நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் - டிசம்பர், 2001 முதல் நவம்பர், 2003 வரை[12]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

இலங்கை புகையிலை கம்பனியை (CTC) விளம்பரப்படுத்தியமை

நவம்பர் 26, 2008 அன்று, 2009 மசோதா ஒதுக்கீட்டின்15 வது நாள் பாராளுமன்ற கலந்துரையாடலின் போது, காமினி ஜெயவிக்ரம பெரேரா இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) (படம் 2) பற்றி சாதகமாக பேசினார். பொதுவாக "பட்ஜெட்" என்று அழைக்கப்படும் மசோதா ஒதுக்கீடானது, நிதியமைச்சருக்கு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, கடந்த ஆண்டில் அதன் செயல்திறன் மற்றும் வரவிருக்கும் ஆண்டில் முன்மொழியும் புதிய திட்டங்கள் ஆகியவற்றை அறிவிக்க கிடைக்கும் ஒரு வாய்ப்பாகும்.[13]

காமினி ஜெயவிக்ரம இலங்கை புகையிலை கம்பனியை(CTC) அரசாங்கத்தின் ஒரு "தேவைக்குரிய நண்பர்" என்று சித்தரித்தார். ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட CTCஇன் செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி, CTC ஆனது அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டித்தருவது என்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.[14] பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின் (BAT) துணை நிறுவனமான இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) ஆனது இலங்கையில் சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனையின் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது.

உரு 2:காமினி ஜெயவிக்ரம பெரேரா பாராளுமன்றத்தில் இலங்கை புகையிலை கம்பனியை(CTC) பற்றி சாதகமாக பேசியமை[14]

Tobacco Unmasked வளங்கள்


குறிப்புகள்

 1. Daily FT. UNP goes for polls today, 19 December 2011, Accessed July 2020
 2. Ada Derana.Jayawickrama resigns as UNP Chairman07 October 2013, Accessed July 2020
 3. Daily Mirror. WC Appoints Kabir Hashim as new UNP new chairman, 09 January 2014, Accessed July 2020
 4. Parliament.lk website. Biographies from present members, 24 March 2010, Accessed June 2020
 5. Parliament of Sri Lanka. Hon. Gamini Jayawickrama Perera, M.P., undated, Accessed June 2020
 6. GaminiJayawikrama Perera Face Book page. Perera, 25 August 2017, Accessed July 2020
 7. Daily Mirror. New Cabinet ministers sworn in, 12 January 2015, Accessed July 2020
 8. The Nation. New Cabinet takes oaths, 12 January 2015, Accessed July 2020
 9. Ceylon Today. 27-member cabinet 10 State ministers 08 Deputy ministers, 13 January 2015, Accessed July 2020
 10. Daily Mirror. New Cabinet, 4 September 2015, Accessed July 2020
 11. The Times of Sri Lanka. Sri Lanka’s new Minister of Justice is Hon. Thalatha Atukorale, 25 August 2017, Accessed July 2020
 12. Daily News. New Ministers,13 December 2001, Accessed July 2020
 13. Parliament of Sri Lanka. Appropriation Bill (The Budget), Undated, Accessed July 2020
 14. 14.0 14.1 Parliament of Sri Lanka. Parliament Debates, Official Report, 26 November 2008, Accessed July 2020