இலங்கை புகையிலைக் கம்பனி பங்குதாரர்களை தவறாக வழிநடத்துகின்றது: பீடி தொடர்பான பிரச்சனை

Contents
பின்னணி
இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின் துணை நிறுவனமும் இலங்கiயில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனமும் ஆகும். இலங்கை புகையிலைக் கம்பனியானது, அவர்களின் வருடாந்த அறிக்கையில் பீடி பாவனை தொடர்பில் தகவல்களை வெளியிட மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதைக் காணலாம், மேலும் சந்தைப் பங்குகளிலும் இவை இரண்டிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக (2009 -2018) இலங்கை புகையிலைக் கம்பனியின் ஆண்டறிக்கையில் பீடி தொடர்பில் அவர்களின் அறிக்கைகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வெளிவந்த ஆண்டறிக்கைகளில் 2013ம் ஆண்டு தொடக்கம் பீடி பாவனை தொடர்பில் குறிப்பிட ஆரம்பித்தனர்.[1][2][3][4][5][6][7][8][9][10] In these last 10 annual reports, CTC started to mention beedi from their 2013 report onwards.[5] வருடாந்த அறிக்கைகளின் அடிப்படையில் எங்கள் புலனாய்வு விசாரணையில் ஆய்வு செய்யப்பட்ட பீடி தொடர்பான தகவல்கள்:
- தரவைப் பெறப் பயன்படுத்தப்படும் ஆதாரங்கள் அல்லது ஆராய்ச்சி முறைகள் குறிப்பிடப்படவில்லை
- பீடி பயன்பாடு குறித்த சமகால ஆய்வுகளுக்கு முரணானது என்பதோடு
- வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களின் அறிக்கைகளுடனும் தகவல்கள் முரண்படுகின்றது
இவை தொடர்பில் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது:
அடிப்படை ஆதாரங்கள் அற்ற வாதங்கள்
பீடி பாவனைத் தொடர்பான நான்கு அறிக்கைகளை இலங்கை புகையிலைக் கம்பனியின் ஆண்டறிக்கைகளிலிருந்து கண்டறிந்தோம். தகவல் ஆதாரங்களுக்குப் போதுமான மேற்கோள்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை மேலும் முடிவுகளை பெற்றுக்கொண்டமைக்கான ஆராய்ச்சி முறைமைகள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை.
- தவறான வாதம் 1: புகைப்பொருள் பாவனையாளர்களிடையே பீடி பாவிப்பவர்களின் அளவு அதிகரித்துக் காணப்படுகின்றது.
- 2015ம் ஆண்டு இலங்கை புகையிலைக் கம்பனியின் ஆண்டறிக்கையில் இலங்கையில் புகைப்பொருள் பாவனையாளர்களில் பீடி புகைப்பவர்களின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் 2007ம் ஆண்டு ஆண்றிக்கையிலிருந்து 20% அதிகரிப்புக் காணப்பவடுதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த முடிவுகளைப்பெற்றுக்கொண்ட ஆராய்ச்சி முறைகள் மற்றும் தகவல் மூலத்தையும் அவர்கள் குறிப்பிடடிருக்கவில்லை.[11][7]
- தவறான வாதம் 2: கடந்த தசாப்தத்தில் பீடி பாவனையானர்களின் அளவு இரட்டிப்பாகியுள்ளது.
- 2018ம் ஆண்டு ஆண்டறிக்கையில் பீடி பாவனையாளர்களின் அளவு இரட்டிப்பாகியுள்ளது என குறிப்பிட்டிருந்தாலும், அது தொடர்பான தகவல் மூலம் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.[7]
- தவறான வாதம் 3: சிகரட்டிற்கான விலை அதிகரிப்பு, பீடி பாவனையின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கின்றது.
- தவறான வாதம் 4: பீடிக்கான தேவை அதிகரித்து வருவதால் புகைப்பொருள் நுகர்வு அதிகரித்துள்ளது
சமகால ஆய்வு முடிவுகளுக்கு முரணானது
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) ஆய்வுகள் முரணானது:
புகைப்பொருள் பாவனையாளர்களில் பீடி பாவனையாளர்களின் அளவு 10% ற்கும் குறைவாகவே உள்ளது
2015ம் ஆண்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் 15 வயதிற்கு மேற்பட்ட 2999 ஆண்களிடையே மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய புகைப்பொருள் பாவனையாளர்களில் 5.5 வீதமானவர்களே பீடி பாவனையில் ஈடுப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) ஆண்டறிக்கையின் படி புகைப்பொருள் பாவனையாளர்கிளல் 51% ஆனோர் பீடி பாவனையாளர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது, இது முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தரவை விட 10 மடங்கு அதிகரிப்பாகும். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொழில்துறையின் வாதம் பீடி பாவனை அதிகரித்துள்ளது என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
பீடி பயன்பாட்டின் பரவல் குறைந்துள்ளது
புகையிலைத் தொடர்பான பொருளாதாரத்தில் தலைசிறந்த ஆராய்ச்சிக் குழுவான வெரிடாஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, புகைப்பொருள் பாவனையானர்களின் சந்தையில் சிகரட் புகைப்பவர்களின் அளவே அதிகம் என்றும், இலங்கை புகையிலைக் கம்பனியின் உற்பத்திகளில் ஆகக்குறைந்த சிகரட்டின் விலையானது ஆகக் கூடிய சிகரட் விலையின் இரண்டு மடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே தான் சிகரட் புகைப்பவர்கள் சிகரட் விலை அதிகரித்தமையினால் பீடி பாவனைக்கு மாறுகின்றனர் என்பது நியாயமற்றக் கருத்து என்றும், சிகரட் விலை அதிகரிக்கும் போது அவர்கள் உற்பத்தி செய்யும் குறைந்த விலை சிகரட்டுகளை பாவிப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் குறிப்பிடுகின்றனர். Their article சிகரட் வரி விதிப்பு தொடர்பாக அவர்களின் மூன்று கட்டுரைகளின் அடிப்படையில், டென்டு லீப்(பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படம் இலை) இறக்குமதியானது கடந்த 25 ஆண்டுகளாக குறைவடைந்துச் செல்வதை சுட்டிக்காட்டுகின்றது.[12]

இலங்கையில் புகையிலைப் பயன்பாடு குறைந்து வருகின்றது
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடையே ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் சிகரட் பாவனை தொடர்பாக போக்கை கண்டறிவதற்காக ஆய்வுகளின் அடிப்படையில் 2009ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரையிலான காலத்தில் சிகரட் புகைப்பவர்களின் அளவு குறைந்து செல்வதைக் காணலாம் (உரு 3).[13]

இலங்கை புகையிலைக் கம்பனியின் வெவ்வேறு ஆண்டறிக்கைகளில் பொருந்தாத தரவுகள்
பொருந்தாத தரவுகள்
2014ம் ஆண்டு ஆண்டறிக்கையில் பீடி பாவனையாளர்களின் அளவு 42% எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.[6][7] இருப்பினும் 2015ம் ஆண்டு ஆண்டறிக்கையில் 2014ம் ஆண்டு பீடி பாவனையாளர்கள் 45மூ எனச் சுட்டிக்காட்டியுள்ளனர் இத் தரவு 2014ம் தரவுடன் முரண்படுகின்றது (உரு 4).[6]

முறண்பாடான அறிக்கைகள்
2015ம் ஆண்டு ஆண்டறிக்கையில் இலங்கை புகையிலைக் கம்பனியின் தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரியின் அறிக்கையின் படி, பீடி பாவனையாளர்கள் CTCயின உற்பத்திகளுக்கு மாறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவ் அறிவிப்பானது, பீடி பயன்பாடு அதிகரிக்கின்றது, சிகரட் பாவனையாளர்கள் பீடி பாவனைக்கு மாறியுள்ளனர் என்ற அறிக்கைகளுக்கு முரணானதாக உள்ளது.[7]
Tobacco Unmasked வளங்கள்
தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:
- இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)
- புகையிலை தொழில்துறையின் தர்க்கம் - பீடி பாவனை அதிகரிக்கின்றது
- Exposing ‘Alternative Facts’ on Tobacco Taxation
குறிப்புகள்
மேற்கோள்கள்:
- ↑ Ceylon Tobacco Company PLC. Annual Report 2009, 2010, Accessed June 2019
- ↑ Ceylon Tobacco Company PLC. Annual Report 2010, 2011, Accessed June 2019
- ↑ Ceylon Tobacco Company PLC. Annual Report 2011, 2012, Accessed June 2019
- ↑ Ceylon Tobacco Company PLC. Annual Report 2012, 2013, Accessed June 2019
- ↑ 5.0 5.1 Ceylon Tobacco Company PLC. Annual Report 2013, 2014, Accessed June 2019
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 Ceylon Tobacco Company PLC. Annual Report 2014, 2015, Accessed June 2019
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 Ceylon Tobacco Company PLC. Annual Report 2015, 2016, Accessed June 2019
- ↑ 8.0 8.1 8.2 8.3 Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, Accessed June 2019
- ↑ 9.0 9.1 9.2 9.3 Ceylon Tobacco Company PLC. Annual Report 2017, 2018, Accessed June 2019
- ↑ 10.0 10.1 10.2 10.3 Ceylon Tobacco Company PLC. Annual Report 2018, 2019, Accessed June 2019
- ↑ Ceylon Tobacco Company PLC. Annual Report 2007. Colombo:CTC
- ↑ 12.0 12.1 Daily Mirror. Who’s responsible for ‘Alternative Facts’ on tobacco taxation?, 1 June 2017, Accessed June 2019
- ↑ 13.0 13.1 Cite error: Invalid
<ref>
tag; no text was provided for refs namedADIC