இலங்கை புகையிலைக் கம்பனியின் டென்ட்ரோ பவர் செயற்திட்டம்

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

இலங்கையில் டென்ட்ரோ மின்சாரம் அல்லது நீடித்த வளாச்சியிலிருந்து மின்சாரம் உற்பத்தி (கினிசூரிய) செய்வதற்காக சாத்தியக்கூறுகள் தொடர்பில் 1999 முதல் 2004ம் அண்டு வரை ஆய்வு செய்யப்பட்டன. இந்த முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது. சோதனைத் திட்டத்தின் வெற்றியின் பின்னர், முதல் வணிகத் திட்டம் 2004ம் ஆண்டில் இலங்கை புகையிலை கம்பனியின் உதவியுடன் லங்கா டிரான்ஸ் பார்மர்ஸ் (LTL) வலப்பனையில் மேற்கொண்டது.[1][2][3]

உரு 1: வலப்பனை டென்ரோ மின் உற்பத்தி நிலையத்தில் முன்ரே விஜேவர்தன (வலது பக்கம்)[2]

இலங்கை புகையிலை கம்பனியின்(CTC) முதலீடு

ஊடக அறிக்கைகளின் படி இத் திட்டத்திற்கான மதிப்பு ரூபா 100 மில்லியன் என தெரிவிக்கப்பட்டது. இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) சாய்வான விவசாய நில தொழிநுட்ப திட்டத்தின் கீழ் புகையிலைச் செய்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய “கினிசீரியாவை” பெற்று விநியோகிப்பதனை ஒருங்கிணைப்பதே பங்களிப்பாக இருந்தது. இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) விவசாயிகளிடமிருந்து மரங்களை வாங்கி எரிசக்தி உற்பத்திக்காக வுடுவு நிறுவனத்திற்கு விநியோகம் செய்தது. இலங்கை மின்சாரச் சபை இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்காக கட்டணத்தை வழங்கியது.[3][4]

விளைவு

இந்த திட்டம் மதிப்பீட்டு அறிக்கைகளுக்கு அமைய தோல்வியடைந்த திட்டமாக காணப்பட்டது. கீழ் குறிப்பிட்ட காரணங்களுக்காக:[5][6][7]

  • திட்டத்திற்காக பொருத்தமற்ற இடத் தேர்வு – வலப்பனையில் இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) பயன்படுத்தப்படாத உற்பத்தி நிலையம் அங்கு இருந்தமையினாலேயே குறித்த இடத்தை தெரிவு செய்தனர். இது மோசமான சாலை போக்குவரத்து வசதிகளை கொண்டிருந்த பகுதியாக இருந்ததோடு பெரும்பாலும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது. [5] CTC சமர்பித்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு முரணாக வலப்பனையைச் சுற்றி 1% மரம் மட்டுமே இருந்ததால் பாதிப்பு மோசமாக இருந்தது, அருகிலுள்ள பகுதிகளில் இருந்து தேவையான மரத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகமாக வழங்க முடியும் என்று கூறியிருந்தது. [6]
  • கட்டம் பெரும்பாலும் சேவையிலிருந்து விலகி இருந்தது, ஏனெனில் கட்டத்திற்கான இணைப்பு ஒரு வன நிலத்தின் வழியாக சென்று மரங்கள் மற்றும் குப்பைகள் விழுந்து அடிக்கடி சேதமடைந்தது.[5]
  • இலங்கை மினசார சபை வழங்கிய மின்சாரத்தின் அளவு போதாமை[5]
  • பலவீனமான மர விநியோகச் சங்கிலி – விநியோகச் சங்கிலியில் பல இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுவதாகக் கூறப்பட்டது, அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் முயற்சிகளுக்கு குறைந்த வருமானத்தையே பெற்றனர். 1 கிலோ ஈரமான பங்குக்கு விவசாயிகள் 1 ரூபாய் மட்டுமே பெற்றனர். அதே நேரத்தில் சேகரிப்பவர்களுக்கு 3 ரூபாய் கிடைத்தது.[5][6][7] பிற காரணங்கள்: கடினமான நிலப்பரப்பு விவசாயிகளுக்கு மரங்களை சேகரிப்பதற்கு சிரமங்களை ஏற்படுத்தியது, குறைந்த விலை வழங்கப்பட்டமை, மரம் தயாரிக்கும் செயல்முறை (வெட்டுதல் மற்றும் உலர்த்துவது உட்பட) சிக்கலானது, விவசாயிகள் சிறந்த வருமானத்துடன் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.[6]
  • அக்கம்பக்கத்து சமூகம் இந்தத் தி;ட்டத்திற்கு அதிருப்தி அடைவது மற்றும் மரம் வழங்குவதைத் தவிர்ப்பது – காரணங்களாக: “ சத்தம், பறக்கும் சாம்பல், கழிவு நீரை அகற்றுவதில் உள்ள சிக்கல்கள் போன்றவவை.[6]

ஆசிய சார்பு – சுற்றுச்சூழல் திட்டத்திற்கான திட்டத்தில் ஒரு சமூக – பொருளாதார மதிப்பீட்டை நடத்தி வரும் ரணசிங்க, ஊவுஊ சாத்தியன்கூறு ஆய்வுக்கும் உண்மையான செயல்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாடு தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.[6]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

  • Sloping Agricultural Land Technology (SALT) and Ceylon Tobacco

குறிப்புகள்

  1. United Nations. Energy Services for Sustainable Development in Rural Areas in Asia and the Pacific: Policy and Practice. Energy Resources Development Series No. 40, New York: United Nations, 2005
  2. 2.0 2.1 Ray Wijewardena Trust. Ray Wijewardene: Bio-energy Promorter, 2011, accessed August 2017
  3. 3.0 3.1 S Perera. Rs.100 m Dendro power plant to boost national grid, 17 August 2004, accessed August 2017
  4. The Island. CTC pioneers in ‘Dendro Electrification’ for rural populace, 28th October 2004, accessed August 2017
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 W Mostert. Development of Grid-Connected Biomass Energy Projects in Sri Lanka Issues and Options, 08th May 2009, accessed August 2017
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 H Ranasinghe. A Socio-economic study on the Dendro Power Project at Kumbalgamuwa, Walapane, undated, accessed August 2017
  7. 7.0 7.1 DFCC Consulting (Pvt) Limited. Private Sector, Small-scale, Grid Connected Renewable Power Generation in Sri Lanka: A review of the experience of the past decade 1996 to 2006, RERED Project, January 2008, accessed August 2017