இலங்கையில் புகையிலை வரியில் தாக்கம் செலுத்தும் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

இலங்கையில் சிகரட் மீதான விலை அதிகரிப்பில் மிக உயர்ந்த விலை அதிகரிப்பு 2016ம் ஆண்டின் இறுதி காலாண்டில் பதிவாகியுள்ளது. ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்த கலால் வரி மற்றும் நவம்பரில் அதிகரிக்கப்பட்ட 15% பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறிமுகப்படுத்தப்பட்டமை இதற்கு காரணம். [1] மேலதிக தகவல்களுக்கு 2016ம் ஆண்டு புகையிலை மீதான வரி அதிகரிப்பு தொடர்பில் புகையிலைக் கம்பனியின் பிரதிபலிப்பு என்ற பக்கத்தை பார்க்கவும். இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது இலங்கையில் புகையிலை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனம் என்பதோடு, பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் ஆகும். 2017ம் ஆண்டு நிலவரப் படி, CTCயின் பங்குகளில் 84% BAT க்கு சொந்தமாக உள்ளதுடன் ஏனையவை இலங்கையில் தனியாருக்கு உரித்தவையாகும். [2]

BAT க்கு எதிராக சுகாதார அமைச்சரின் குற்றச்சாட்டு

2017 நவம்பர் 1ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சரும் அமைச்சரவை ஊடக பேச்சாளருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள், சிகரட் வரி அதிகரிப்பில் BAT தலையிடுவதாக குற்றம் சாட்டினார். இவ் விவகாரம் தொடர்பான அமைச்சரின் முழு அறிக்கை பின்வருமாறு (மொழிபெயர்க்கப்பட்டுள்ளது): [3]

“உங்களுக்குத் தெரியும் நாம் சிகரட்டுக்கு 90% வரி விதித்தோம். அது 80% உருவப்பட சுகாதார எச்சரிக்கைக்கும் அதிகமாக உள்ளது. உலகளவில் பார்க்கும் போது நாம் அதிகபடியான வரியை விதித்துள்ளோம். இச் செயற்பாட்டின் போது நான் மிகுந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தேன். பிரித்தானிய அமெரிக்க புகையிலை கம்பனியின்(BAT) தலைவர் தனி விமானததில் இலங்கைக்கு வந்தார். அவர் பலரை சந்தித்தார் ஏன், பிரதமரைக் கூட சந்தித்தார், எனக்கு நிறைய அழுத்தங்களை கொடுத்தார். வரி 90% என்றால் எமது லாபம் 1% மட்டுமே, புகையிலை நிறுவனம் மூடப்பட வேண்டும் என்றார். அதாவது நீங்கள், 134 ஆண்டு முதலீட்டை முடக்குகிறீர்கள். அந்த கூட்டங்கள் அனைத்திலும் முகவர்கள் குழுவாக வந்தார்கள். நான் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன். “ லாபம் 1% என்று எப்படி சொல்வது? அந்த லாபத்திலிருந்து எவ்வாறு நீங்கள் உங்கள் நிறுவனத்தை இயக்குகின்றீர்கள். பின்னர் அவர்கள் புகையிலைக் கம்பனியில் மைக்கேல் என்ற நபரக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றினை எடுத்து, அமைச்சர் இதுபோன்று விசாரிக்கிறார், என்ன நடக்கின்றது என்று கேட்டார். பின்னர் அவர், ஆம் உண்மை தான் என்று சொன்னார். அந்த தகவல் உண்மையானது தான். ஆனால் நான் உங்களிடம் திரும்பி வருவேன் என்று சொன்னார் ஆனால் இந்த நாள் வரை திரும்பி வரவில்லை (நவம்பர் 1, 2017). ஆனால் அன்று 1% இலாபத்தில் இயங்க முடியாது என்று கூறிய கம்பனி இன்றும் இயங்குகிறது”
உரு 1: அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்தன.[4]

தொழில்துறையின் பிரதிபலிப்பு

2017 நவம்பர் 10ம் திகதி வரையில் , அமைச்சரின் இக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் BAT அல்லது CTC பகிரங்கமாக பதிலளிக்கவில்லை.

Tobacco Unmasked வளங்கள்

Other relevant TobaccoUnmasked entries:

குறிப்புகள்

  1. Daily Mirror. Cigarette price to increase up to Rs. 55, 23 October 2016, accessed March 2017
  2. British American Tobacco. Annual Report 2016, 2017, accessed November 2017)
  3. Sri Lanka Mirror. Joke from Rajitha for SLM Anniversary (Video), 01st November 2017, accessed November 2017
  4. IS Kodikara. AFP/GettyImages, 17 September 2015, accessed November 2017