இலங்கையில் தனி சிகரட் விற்பனை தடைக்கான முன்மொழிவு

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

2018 செப்டம்பர் மாதம் 11ம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் தனி சிகரட் விற்பனையைத் தடை செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.[1] சுகாதார அமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாகத் தனி சிகரட் விற்பனை தடைக்கான முன்மொழிவுகள் தொடர்பில் பொது அறிக்கைகளை விடுத்து வருவதோடு 2016ம் ஆண்டு தொடக்கம் இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.[2][3]இவ்விடயமானது தேசியப் புகையிலை மற்றும் மதுசாரம் கட்டுப்பாட்டு சட்டத்தின் (புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம்)திருத்தமாக முன்மொழியப்பட்டது.

தனி சிகரட் விற்பனைக்கான தடையின் முக்கியத்துவம்

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிகரட்டை தனித்தனியாகவே கொள்வனவு செய்கின்றனர்.[4] சந்தைகளில் தனி சிகரட் விற்பனையானது இளைஞர்களை சிகரட் பாவனைக்கு ஈர்த்து அவர்களைத் தொடர்ச்சியாகப் புகைப்பதற்கும் ஊக்கப்படுத்துகின்றது என்பதோடு சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை செய்வதற்கும் சில்லறை வியாபாரிகளை ஊக்குவிக்கின்றது என்பதற்கு உலகளாவிய ஆதாரங்கள் காணப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC) (கட்டுரை 16) குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தனி தனியாக சிகரட் விற்றல் அல்லது குறைந்த சிகரட்டுகளை உள்ளடக்கிய பக்கற்றுகளை தடை செய்வதானது சிறுவர்களிடையே புகைத்தல் பாவனை தூண்டப்படுவதை தடுக்கும்.[5] சிகரட் தனித்தனியாக விற்பனை செய்யும் போது 20 சிகரட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதி இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும், சிகரட்டை இலகுவில் கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளது. அத்தோடு சிகரட் தனித்தனியாக விற்பனை செய்யும் போது சிகரட் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் கண்காணிக்கும் அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கும் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தில் கைச்சாத்திட்டுள்ள பல நாடுகள் தனி சிகரட் விற்பனைக்கான தடை செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.[6]

அமைச்சரவை அங்கீகரிக்கவில்லை

அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களின் எதிர்ப்பின் காரணமாக இம் முன்மொழிவு அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிதி அமைச்சர் மங்கள சமரவீரஇ தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் அமைச்சர் நவீந்ர சமரவீரஇ தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பர்ணான்டோ மற்றும் நெடுஞ்சாலைகள் உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் போன்றோர் எதிர்ப்பினை காட்டினர்(உரு 1).[7][8]
உரு 1: அமைச்சரவை அமைச்சர்களின் எதிர்ப்புத் தொடர்பில் டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி[9]

நிதி அமைச்சரின் எதிர்ப்பு ஊடகங்களில் பிரசித்திபெற்றது

தொடர்ச்சியாக வெளிவந்த ஊடக செய்திகளுக்கு அமைவாக, நிதி அமைச்சின் ஆட்சேபனைக்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்திருந்தது:

 • தடையானது வரி வருவாய் குறைவடையக் காரணமாக அமையும்
சமீபத்திய புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் காரணமாக ஏற்கனவே அரசாங்கத்திற்கு 18 பில்லியன் ரூபா வருமான இழப்புக்கு காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.[10] குறித்த கருத்தைச் சுகாதார அமைச்சு மறுத்ததோடு, 2017ம் ஆண்டு 23பில்லியன் ரூபாவாக இருந்த புகையிலை வரி வருவாயானது 2018ம் ஆண்டு 29 பில்லியன்களாக அதிகரித்தாக அறிவித்தது.[6] மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்களை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக்கு அமைவாக, ரூபா18 பில்லின் வரி வருவாய் இழக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறுவதில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.[1][7]
 • தனி சிகரட்டுக்கான தடையானது பீடி பாவனையை அதிகரிக்கும்
சிகரட் குறைவடையும் பட்சத்தில், புகைப்பழக்கம் உள்ளவர்களிடையே பீடி பாவனை அதிகரிக்கும்; என்பது நிதி அமைச்சின் இரண்டாவது தர்க்கமாகக் காணப்பட்டது. நிதி அமைச்சின் கூற்றை மறுத்த சுகாதார அமைச்சு, சிகரட்டுக்கு அடிமையானவர்கள் வேறுபட்ட சுவையைக்கொண்ட பீடி பாவனைக்கு ஆளாகுவதில்லை என அறிக்கை வெளியிட்டது.[7]

தனி சிகரட் தடைக்கு எதிர்ப்பு தொடர்பான வரலாறு

ஊடகம்

[1], இலங்கையின் தேசிய பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்திக்கு அமைவாக. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக்கு ஒத்ததாக அமைந்திருந்தது. அதன் அடிப்படையில் தனி சிகரட் தடை செய்யப்படுமாயின் மேலும் புகைத்தல் பாவனை அதிகரிக்கும் எனவும், சிகரட்டை மொத்தமாக பக்கற்றுகளில் கொள்வனவு செய்வதனால் புகைக்கும் வீதம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இத் தடையின் காரணமாகச் சிறு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு அதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.[8]

புகையிலைத் தொழில்துறை

புகையிலைத் தொழில்துறையோடு தொடர்புடைய அடையாளம் தெரியாத நபரான ஜொஹான் பெரேரா என்பவரால் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில், தனி சிகரட் விற்பனைக்கான தடையானது பல்தேசிய கம்பனிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை என குறிப்பிடப்பட்டிருந்தது.[11]

2017ம் ஆண்டின் முதல் அரையாண்டில், புகைப்பொருள் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக்கு அமைவாக, இத் தடையானது அவர்களின் வியாபாரத்தைப் பாதிக்கும் எனவும் தடையை நீக்குமாறு அமைச்சரிடம் புகைப்பொருள் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகைப்பொருள் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கமானது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமான இலங்கை புகையிலைக் கம்பனிக்கு(CTC) சார்பாக நடந்துகொள்ளும் குழுவாகும். (தயவு செய்து மேலதிக தகவல்களுக்காக, “புகைப்பொருள் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கமானது 2017ம் ஆண்டு புகையிலை ஒழுங்கு விதிகளை எதிர்த்தனர்” என்ற பகுதியைப் பார்க்கவும்).[12]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:


குறிப்புகள்

மேற்கோள்கள்:
 1. 1.0 1.1 P Sumanasekara. Taxation and tobacco industry in Sri Lanka, Daily Mirror, 19 September 2018, accessed November 2018
 2. Daily MirrorSale of loose fags will be banned: Rajitha 09 March 2017, accessed October 2018
 3. M. Peiris. sale of single cigarettes - Government Medical Officers Association,Asian Tribune, 24 November 2016, accessed October 2018
 4. S D Peirisof single stick cigarettes Tobacco Induced Diseases, 1 March 2018, accessed November 2018
 5. World Health Organisation. Convention on Tobacco Control, accessed November 2018
 6. 6.0 6.1 M Peiris.win-win game for the tobacco industry, Daily Mirror,12 April 2016, accessed November 2018
 7. 7.0 7.1 7.2 DLiyanage. ban on single stick cigarette ban, Daily Mirror,17 September 2017, accessed November 2018
 8. 8.0 8.1 Sunday Times. loose cigarettes go up in smoke, 16 September 2016, accessed November 2018
 9. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named sponsors
 10. A K Agalakada. in sale of Fags affects Tax revenues, Micro Citizen, 12 September 2018,accessed November 2018
 11. Y Perera. ban on single stick sales discourage smoking?, Daily Mirror, 27 March 2017,accessed November 2018
 12. Mirror Business. retailers meet FinMin over industry concerns, 30 May 2017,accessed November 2018