அனுரகுமார திசாநாயக்க

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

1968ல் பிறந்த அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் அரசியல்வாதியாவார். அனுராதபுரம் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியினை கற்ற அவர், பட்டப்படிப்பினை பேராதனை மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் கற்றார்.[1][2]

அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் முக்கிய இடதுசாரி அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி / ஜனத்தா விமுக்தி பெரமுன என்ற கட்சியை சார்ந்தவர் என்பதோடு இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தரவரிசைப்படுத்தும் வலைத்தளமான ஆயவொசi.டம யின் தகவலுக்கு அமைய அனுரகுமார திசாநாயக்க ‘வர்த்தகம் மற்றும் தொழில்’ , ‘பொருளாதாரம் மற்றும் நிதி’ ஆகிய தலைப்புகளில் ஈடுபடுவது “நல்லது” என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.[2]

2019 நவம்பர் 16ம் திகதி நடைபெறவிருக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க 2019 ஓகஸ்டில் பரிந்துரைக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்பது பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். இது ஜனாதிபதித் தேர்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[3]அவர் பெற்ற வாக்குகளின் படி மூன்றாவது இடத்தில் 3.16% வாக்குகளைப் பெற்றார்.[4]


உரு 1: அனுரகுமார திசாநாயக்க ஆதாரம்: News 1st.[5]

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

 • 2000ம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்.[6]
 • விவசாயம், கால்நடை , நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சர் – 2004ம் ஆண்டு.[1]
 • 2014ம் ஆண்டு தொடக்கம் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர். [7]
 • எதிர் கட்சியின் பிரதம கொறடா – 2015 செப்டம்பர் தொடக்கம் 2018 டிசம்பர் வரை.[8]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

நீர் தேக்கங்களை புதுப்பிக்க புகையிலைக் கம்பனியில் நிதியைப் பெறுதல்

விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் நீர்ப்பாசனத் தொட்டிகளை (மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் தேக்கங்கள்) புதுப்பிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனமுமாக விளங்குகின்ற இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) அனுசரணை வழங்கியது.[9][10]அப்போது அனுரகுமார திசாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக இருந்தார்.[1]

2004 டிசம்பர் 17ம் திகதி சிலிவத்கமவில் புதுப்பிக்கப்பட்ட நீர் தொட்டியை திறந்து வைத்தமை தொடர்பான நினைவுத்தகடு காணப்படுகின்றது. (உரு 2). நினைவுத்தகடுக்கு அமைவாக இத்திட்டத்திற்கு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) முழுமையான நிதியுதவி வழங்கியுள்ளமை புலனாகின்றது. உள்ளுர் விவசாயிகளின் உழைப்பும் இத்திட்டத்திற்கு கிடைத்ததாக தகடு மேலும் குறிப்பிடுகிறது. தகட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் வாதிகள்: அனுரகுமார திசாநாயக்க (விவசாயம் , கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சர்) ஜனக பண்டார தென்னகோன் (மாகாண அமைச்சர்) மற்றும் சுஜாதா அலககோன் (பாராளுமன்ற உறுப்பினர்).

உரு 2:சிலிவத்கமவில் நீர்ப்பாசன தொட்டியை திறந்து வைத்தமை தொடர்பான நினைவுத் தகடு ஆதாரம்: Tobaccounmasked.[11]

2014ம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அனுரகுமார திசாநாயக்க இலங்கை புகையிலைக் கம்பனியின் பெருநிறுவன சமூக செயற்திட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சக பாராளுமன்ற உறுப்பினரான புத்திக பத்திரன வெளிப்படுத்தினார்.[12]

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், கட்சியின் முன்னாள் ஆதரவாளர்களில் ஒருவரான பேராசிரியர் அதுலா சுமதிபால, அனுர குமார திசாநாயக்க இலங்கை புகையிலைக் கம்பனியுடன்(CTC) தொடர்பை வைத்திருந்தார் என அருன பத்திரிக்கைக்கு வழங்கிய செய்தியொன்றில் குறிப்பிட்டுறிந்தார்.[13]

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) தங்களது சிகரட் உற்பத்திக்குத் தேவையான புகையிலையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் விவசாயிகளையும் , உணவு உற்பத்திக்கு கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வளங்களையும் சுரண்டுவதாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.[14][15]

மேலதிக தகவல்களுக்கு விவசாய அமைச்சர்கள் மீதான தாக்கம் மற்றும் இலங்கையில் புகையிலைச் செய்கையை தக்கவைக்க புகையிலைக் கம்பனி எடுத்த முயற்சிகள் என்ற பக்கங்களை பார்வையிடவும்.

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

மேற்கோள்கள்:

 1. 1.0 1.1 1.2 Facebook Profile. Anura Kumara Dissanayake, 2019, Accessed January 2019
 2. 2.0 2.1 Manthri.lk. Anura Kumara Dissanayake Member of Parliament (MP), 2016-2017, Accessed January 2019
 3. adaderana.lk. Anura Kumara Dissanayake named presidential candidate, 18 August 2019, Accessed September 2019
 4. Department of Government Information. Presidential Election - 2019, 2019, accessed November 2019
 5. NewsFirst.lk. Anura Kumara Dissanayake Asks for Five Years to Build the Country, website, 13 August 2015, Accessed September 2019
 6. People’s Liberation Front. A Brief History of the JVP (Peoples Liberation Front) Sri Lanka, 1999-2016, Accessed January 2019
 7. People’s Liberation Front.Political Bureau, 1999-2016, Accessed January 2019
 8. Parliament of Sri Lanka. Chief Opposition Whips, 18 December 2018, Accessed January 2019
 9. Ceylon Tobacco Company. Annual report 2009, 2010, Accessed January 2019
 10. Ceylon Tobacco Company. Annual report 2010, 2011, Accessed January 2019
 11. http://tobaccounmasked.lk. Ministry of Agriculture: Ministers and Officials, 28 June 2019, Accessed September 2019
 12. M. Mudugamuwa. Invisible hand blocking pictorial warnings – Cancer Care Association Tobacco kills 55 persons daily The Island, 8 May 2014, Accessed January 2019
 13. Athula Sumathipala. [1], 20 November 2019, Accessed November 2019
 14. M. M. Krishan. Tobacco farmers' hopes turn into debt, DailyNews.lk, 01 February 2019, Accessed September 2019
 15. Centre for Combating Tobacco. Tobacco Cultivation in Sri Lanka: Past, Present and the Future, Fact Sheet, 27 February 2018